Tamil Stars

Tamil Stars

Share

Tamil leading icon photo/video news sources.

12/04/2025
11/24/2025

Veteran actor, Dharmendra affectionately known as Bollywood’s ‘He-Man’ and ‘Dharam Paaji,' passed away today at the age of 89. His passing leaves behind an unmatched legacy of over six decades.

SAM SU***DE PANNA PORAAN TAMIL SHORT FILM | LOVE DRAMA | TAMIL CREATORS 11/22/2025

ஈழத்துக் குறுந் திரைப்படம் ஒன்று.

A short film from Eelam.

SAM SU***DE PANNA PORAAN TAMIL SHORT FILM | LOVE DRAMA | TAMIL CREATORS CASTNIVETHIGANANJALI HARSHANIEVANJALINJASHISTENOKANTHARUBANMALKINNIEL REXONMORISSARANJANTHUSIKARANFOOTBALL TEAMNISHANTHMATHUSAN ABIMANUNICHUDONALSHRUYANRAVIS...

10/26/2025

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி விழா கோவை, மதுரை, திருச்சி என்று பல ஊர்களில் நடந்தது. சென்னையிலும் விழா நடந்தது. எம்.ஜி.ஆர். உட்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேடையிலும் பேசினர். எல்லாரும் பேசி முடித்த பிறகு எம்.ஜி.ஆர். பேசினார். மேடையில் எல்லா பக்கமும் முகத்தை திருப்பி மக்களைப் பார்த்தபடி பேசினாலும் அவரது பேச்சு தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக இன்னொரு மைக் வைக்கப்பட்டது.

திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் நம்பியார் ஜாலி பேர்வழி. மைக் அருகே வந்து ‘இது அநியாயம், நாங்கள் பேசும்போது ஒரு மைக். எம்.ஜி.ஆருக்கு மட்டும் இரண்டு மைக்கா? அக்கிரமம்’ என்றார். அவரது நகைச்சுவையால் கூட்டம் கலகலத்தது.
விடுவாரா?.. எம்.ஜி.ஆரா கொக்கா? எந்த சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மூளையில் மின்னல் அடிக்கும். சமயோசிதமாக இப்படி பதில் சொன்னார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எனக்குத்தான் இரட்டை வேடம். அதனால்தான் எனக்கு மட்டும் இரண்டு மைக்’.....
அரங்கமே அதிரும் சிரிப்பொலி. அதில் கலந்தது நம்பியாரின் சிரிப்பொலியும்.

Photos from Tamil Stars's post 10/23/2025

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் 1942 ல்போலந்து படையினர் ஈரான் வழியாகச் சென்றபோது, தாய் கொல்லப்பட்டிருந்த ஒரு சிரியக் கரடி குட்டியை (Syrian brown bear) கண்டனர். அதற்கு பால், பழம், தேன், ஜாம் ஆகியவற்றை ஊட்டி வளர்த்தனர். பின்பு அது பியர், ரொட்டி, சிகரெட் போன்றவற்றையும் விரும்பி உண்கின்றமை தெரியவரவே அவற்றையும் வழங்கினர்.(சிகரெட்டுகளை மென்று உண்டதே தவிர புகைக்கவில்லை).

விலங்குகளை அதிகாரபூர்வமாக போருக்கான போக்குவரத்தில் ஏற்க முடியாததால், அதனை பிரைவேட் வோய்டெக் என்ற பெயரில் படையில் சேர்த்தனர். அதற்கென தனிப்பட்ட எண், சேவைப் பதிவு, சம்பளப் புத்தகம் அனைத்தும் வழங்கப்பட்டது. இதன் மூலம் அது 22ஆம் பீரங்கி (Artillery Supply Company) பிரிவுடன் பயணம் செய்தது.

அவர் தான், வோய்டெக் (Wojtek) – “சிப்பாய் கரடி"

மொன்டே காசினோப் போர் (இத்தாலி, 1944) வோய்டெக் சிப்பாய்களைப் போலவே 25–40 கிலோ எடையுள்ள மார்டார் குண்டுப் பெட்டிகளை அமைதியாக சுமந்து கொண்டு போர்க்களத்தில் நடந்தான். வெடிப்புகளும் சத்தங்களும் நடுவில் கூட அவன் அஞ்சவில்லை. இதனால் அவன் “போர்வீரன்” என்ற பெயருடன் புகழ்பெற்றான். போருக்குப் பிறகு அவனை கார்ப்பரல் (Corporal) பதவிக்கு உயர்த்தினர்.

போருக்குப் பின் வாழ்க்கை: போருக்குப் பின், வோய்டெக் ஸ்கொட்லாந்து சென்றான். காட்டில் விட முடியாததால், அவனை எடின்பரோ விலங்குக் காட்சிசாலையில் வைத்தனர். அங்கு 1963 வரை வாழ்ந்தான். பல போலந்து போர்வீரர்கள் அவனை அடிக்கடி வந்து பியர், சிகரெட் ஆகியவற்றைத் கொடுத்தனர்.

அவன் படையில் இருந்த காலத்திலேயே படை பிரிவு தனது சின்னமாக “குண்டு சுமக்கும் கரடி” என்ற வோய்டெக்கின் உருவத்தை ஏற்றுக்கொண்டது.

இன்று வோய்டெக் போலந்தில் “சகோதரத்துவம், துணிவு, நட்பு” ஆகியவற்றின் சின்னமாக மதிக்கப்படுகிறார். எடின்பரோ, கிரகோவ், சோபோட் உள்ளிட்ட நகரங்களில் அவரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வோய்டெக் பற்றி இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன: "Wojtek: The Bear That Went to War" (2011) — ஒரு ஆவணப்படம், மற்றும்
"A Bear Named Wojtek" (2023) — ஒரு அசைவூட்டப்பட்ட (அனிமேஷன்) குறும்படம்.

10/01/2025

இது வரமா அல்லது வியாதியா? எவ்வளவு குழப்பம் - விவேக் ever green comedy.

Want your business to be the top-listed Gym/sports Facility in Ottawa?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Ottawa, ON