Adirai Western Sports Association

Adirai Western Sports Association

Share

Adirai western sports association is west Street all sports news and any information for you supmitt

Photos from Adirai Western Sports Association's post 20/07/2025

அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் இணைந்து நடத்திய மாபெரும் ஐவர் மின்னொளி கால்பந்து தொடர் போட்டி.இதில் சுமார் 28 தலைசிறந்த அணிகள் பங்குபெற்றன சுமார் 3 நாட்கல் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டம் 13/08/2025 10மணிக்கு தொடங்கியது.

தென்னரசு பள்ளத்தூர்(TFC) 💛அணியினரும், சர்தார் விஜயகுமார் மெமோரியல்(SKCFC)🩷 திண்டுக்கல் அணியினரும் மோதினர் அனல்பறக்க நடந்த ஆட்டத்தில் 1-0என்ற கோல் கணக்கில் பள்ளத்தூர் அணியினர் முதல் பரிசை தட்டி சென்றனர்.
மூன்றாம், நான்காம் பரிசு தொகை சரியாகப் பிரிக்கப்பட்டு, கோப்பைக்கான TOSS மூலம் வெஸ்டர்ன் கால்பந்து கழகம்(WESTERN FC)💚🤍அணி 3 வது கோப்பையும், சர்தார் விஜயகுமார் மெமோரியல்(SVMFC)🤍புதுக்கோட்டை அணி பெற்றனர்.
அதிரையில் சிறப்பாக செலப்பட்டு வரும் உதவிக்கரம் செய்யும்தொண்டு நிறுவனம் மற்றும் உயிரை காகக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கக்கு சிறப்பு விருதுக்களும் வழக்கப்பட்டன.
ஆட்டத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரர்களை கெளரவித்தது பரிசுகள் வழங்கினர் இந்த சிறப்பு விழாவில் காதர்முகைதீன் பள்ளி உயர்கல்வி முன்னாள் ஆசிரியர் ராமச்சந்திரன், கா.மு கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் செய்யது அகமது கபீர், வழக்கறிஞர் MMS சஹாபுதீன், தாஜுல் இன்லாம் சங்க தலைவர் PMK தாஜுதீன், VT தஹலா மரைக்காயர், பவர்டெக் மாஜிதீன், ததஜ ராஜிக் அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர் ஹசன், திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ரஜபு முகைதீன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இத்தொடர் முழுவதும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து அணிகள்,வீரர்கள்,ரசிகர்கள் மற்றும் சிறப்பு விருத்தினர்கள் அனைவருக்கும் வெஸ்டர்ன் விளையாட்டு சங்கம் (WESTERN SPORTS ASSOCIATION )✨ சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மென்மேலும் உயர இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் ❤️

Photos from Adirai Western Sports Association's post 28/04/2025

திருச்சியை திரணடித அதிரை வெஸ்டர்ன் FC..............
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் (WESTERN FC) திருச்சியில் வெற்றி வாகை சூடியது. திருச்சி PTC கால்பந்து கழகம் ஐவர் கால்பந்து தொடர்ப்போட்டி நடைபெற்றது . இதில் U-19 பிரிவில் நமது வெஸ்டர்ன் FC அணி பங்குப்பெற்று. இதன் இறுதிப்போட்டி வெஸ்டர்ன் FC VS காரைக்குடி FC நேற்று நடைபெற்றது. இதில் முழு நேரம் பகுதில் கோல் எதும் அடிக்காமல் ஆட்டம் டை யில் முடித்தது. இறுதில் காரைக்குடி FC அணியை (TIE BRAEKAR) என்ற முறையில் வெஸ்டர்ன் FC அணி வெற்றிவாகை சூடியது 🏆🔥சிறந்த கோல் கீப்பர் விருந்தை பாஹிம் 🏅(fahim) வெஸ்டர்ன் FC வென்றார் 🤍
மென்மேலும் வெற்றிபெற இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் 🫂✨

Photos from Adirai Western Sports Association's post 01/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ).....

அதிரை AL-KAIMAH நண்பர்கள் நடத்தும் முதலாம் ஆண்டு ஐவர் கால்பந்து தொடர்ப போட்டி நடைபெற்றது.
இதில் அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம்💛 (WESTERN FC) மூன்றாம் இடத்தை பிடித்து அதற்கான கோப்பையும் கைப்பற்றியது 💫இத்தொடரில் விளையாடிய அனைத்து இளம் விளையாட்டு வீரரர்களும் மென்மேலும் உயர இறைவனிடம் துவா செய்யுங்கள் ❤‍🔥

Photos from Adirai Western Sports Association's post 14/10/2024

தமிழ்நாடு (I LEAGUE )கால்பந்து அணிகாக விளையாடும் அதிரை (WESTERN FC)இளம் வீரர்கள் 🔥

இந்தியன் லீக் U-17 அணிக்காக நமது அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் (WESTERN FC) வீரர்கள் (ஆதில்💛 உஜயிர் 🩷)ஆகிய இரண்டு வீரர்கள் தகுதியாகி உள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சி உடன் தெரிவித்துக்கொள்கிறோம். மென்மேலும் உயர இறைவனிடம் துவா செய்யுங்கள் 💫💯

Photos from Adirai Western Sports Association's post 07/10/2024

தமிழ்நாடு 2024-25 ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான(CM TROPHY )மாநில அளவிலான கால்பந்து போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்றது.இதில் தஞ்சாவூர் மாவட்டம் U19 அணிக்காக......
நமது அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் (WESTERN FC) அணியில் இருந்து ( ஆதில்💙,உஜயிர்💜, ஷாபி🩷 )ஆகிய வீரர்கள் மற்றும் அதிரை (ROYAL FC ) வீரர் (ஆசிம்🩶 )பங்குபெற்றார்கள். விளையாட்டு வீரர்கள் மென்மேலும் உயர இறைவனிடம் துவா செய்யுங்கள் 💫

Photos from Adirai Western Sports Association's post 29/09/2024

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).....

அதிராம்பட்டினம் சுரைக்காக்கொல்லை UFC எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.இன்று இறுதிப்போட்டியில் நமது வெஸ்டர்ன் கால்பந்து கழக அணி முதல் பரிசு பெற்று கோப்பையை கை பற்றினார். நமது அணி மென்மேலும் வளர இறைவனிடம் துஆ செய்யவும்😇💫

Photos from Adirai Western Sports Association's post 13/08/2024

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ).......

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டி நடைபெற்றது. சுமார் 24 நாட்கள் நடைபெற்றன.இத்தொடரில் இறுதிப்போட்டி 11/08/2024 அன்று நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் BLUE FC வேலங்குடி அணியும் KNR FC கூத்தாநல்லூர் அணியும் மோதின. விறுவிறுப்பான போட்டியில் இரு அணிகளும் கோல் எதும் அடிக்காமல் சமநிலையில் முடிந்தன. Tie Breaker என்ற முறையில் BLUE FC வேலங்குடி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. இரண்டாம் பரிசை KNR FC கூத்தாநல்லூர் அணி பெற்றது.
தொடரில் சிறந்த அணியாக (WESTERN FC (B))அணி பெற்றது.
சிறந்த கோல்கீப்பர் : முகைதீன்
சிறந்த Striker:ஷாபி
சிறந்த Defender :ஆதில்
சிறந்த இளம் வீரர்கள்: உஜெயிர், அரபாத்,
நிகால்,ஆசிப்,
தொடரை சிறப்பாக எங்களுக்கு நடத்தித் தந்த நடுவர்கள் :ஷபா, நிலவலகன்,ரியா,
ரிஸ்வான், அபு, அப்ரிடி. ஆகியோருக்கு வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர் முழுவதும் போட்டியை காண வந்த அனைத்து கால்பந்து ரசிக பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Photos from Adirai Western Sports Association's post 29/07/2024

அஸ்ஸலாமு அலைக்கும்

குஜராத்தில் நடைபெற்ற U23 Mini Football National Championship போட்டியில் தமிழ்நாடு அணி 3ஆம் இடம் பிடித்தது. அந்த தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி 2 கோல் அடித்த வெஸ்டர்ன் கால்பந்து கழக வீரர் அபு நாசர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வெஸ்டர்ன் FC நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

Photos from Adirai Western Sports Association's post 27/07/2024

இன்றைய (27/07/2024) தினம் விளையாட வேண்டிய அணிகள் :

1. TCFC கும்பகோணம் vs MFFA பொதக்குடி
2. Athletic Bulls தஞ்சாவூர் vs Jubilee FC கேரளம்

சரியாக 5 மணிக்கு ஆட்டம் துவங்கும்.

Photos from Adirai Western Sports Association's post 19/07/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13-ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டி. இன்றைய ஆட்டம் AFC ஆலத்தூர் 7s vs மன்னார்குடி 7s அணிகள் மோதின. இதில் MFC மன்னார்குடி 7s அணி 3-1 என்ற கோல் கணக்கில் AFC ஆலத்தூர் அணியை வீழ்த்தினர்.இதில் முதல் கோல் அடித்த வீரருக்கு TERRI WEAR சார்பாக சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

Photos from Adirai Western Sports Association's post 18/07/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் ( Western FC) நடத்தும் 13-ஆம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி. இன்று தொடக்க ஆட்டமாக ராயல் FC அதிரை அணினரும் தர்மபுரி FC அணியினரும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தர்மபுரி அணியினர் 1-0 ( கூடுதல் நேரத்தில் ) என்ற கோல் கணக்கில் அதிரை ராயல் FC அணியினரை வீழ்த்தினர். இத்தொடரில் கலந்து கொண்ட அதிரை FC அணிக்கு வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Want your business to be the top-listed Gym/sports Facility in Adirampattinam?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Adirampattinam