Pothigai Sky Trust

Venue:Pothigai Arivuthirukovil Papanasam-627425. Tirunelveli District. Tamilnadu,india

Shri Vethathiri Maharishi, a spiritual leader, developed the SKY Yoga [Simplified Kundalini] system after his years of intense meditation, yogic practices, research and spiritual realizations. The SKY Yoga system includes: Simplified Physical Exercises for Health Meditation Practices for Inner Peace Kaya Kalpa Yoga for Anti Aging Introspection for Happiness www.facebook.com/skyyogatv

[01/05/20]   வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

[10/19/19]   மவுனம் பயிற்சி:

நாள்:20.10.19 (ஞாயிற்றுக்கிழமை).

நேரம்: 10:00AM to 4:30PM

நடத்துபவர்: பே.குமாரஅழகப்பன் ஐயா

[07/21/19]   கல்லாமை கடன் வறுமை களங்கங்கள மறையட்டும்

vethathirichennai.blogspot.com

Yoga Day 2019

Vazhga Valamudan U R Yoga Master (or) Yoga Center.Register Ministry Of AYUSH , is a Gov Body of India Further Details:
👇 Click Here 👇

https://vethathirichennai.blogspot.com/p/yoga.html?m=1&fbclid=IwAR1Ct7eS472EBOQCqjxKrTxKZwxfvgOEiPPyzp22tEAVj_A2idyLzyUKyD4

vethathirichennai.blogspot.com vethathiri,yoga,meditation,kundalini yoga,kaya kalpa yoga

[06/07/19]   எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்

[03/30/19]   அன்பர்களே! வாரீர்!அறிவின் இருப்பிடம்.

[03/19/19]   லாழ்க வளமுடன்

*வாழ்க வையகம் வாழ்க வளமுடன்*

*வளர்க வேதாத்திரியம்*

*உலகப்பொது அருள்நெறிசமயஆண்டு : 33*

*ஜனவரி 15 / 01 /2019 செவ்வாய்*

*இன்றைய சிந்தனை*

.🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

*பெற்றோர் தவம் – பிள்ளைகள் நலம்*

*மருத்துவம் என்பது நோய் வந்த பிறகு தீர்ப்பது மாத்திரம் அன்று. நோயே வராமல் காக்கலாம். நோய் என்றால் என்ன? இயற்கையாக நம்முடைய உடலிலே இந்தச் சுகத்திற்கு, அதாவது உடல் நலத்திற்கு ஏற்ற எல்லாம் அமைந்திருக்கிறது. அவ்வப்போது ஏற்படுகின்ற குறையைக் கூட சரிக்கட்டிக் கொள்ளக்கூடிய அளவுக்கு இயற்கையினுடைய ஆற்றல் அமைப்பு நம் உடலிலே இருக்கிறது. ஒவ்வொரு செல்லும் (Cell) ஒரு இராசாயனச் சாலையாக (Laboratory) வேலை செய்து கொண்டு இருக்கிறது. நம்முடைய உடலிலே. நாம் அதைத் தெரிந்து கொண்டு ஒத்துழைத்தால் போதும்; அதைக் கெடுக்காமல் இருந்தால் போதும். அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.*

*கருவமைப்புக் குறித்தும் அதிகமாக நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் எந்த முறையிலே மனம், உடல் அமைப்பிலே இருக்கிறார்களோ அதை ஒட்டித்தான் ஒரு குழந்தை உருவாக முடியும். மரத்தை ஒட்டித்தான் விதை இருக்கும். அந்த விதையை ஒட்டித்தான் மரம் இருக்கும். இது தொடர் நிகழ்ச்சி.*

*குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னால், பெற்றோர்கள் மனநலத்திலே, உடல் நலத்திலே நலம் உள்ளவர்களாக அமைய வேண்டும்; இருக்க வேண்டும். பெற்றோர்கள் இடத்திலே ஒருவருக்கு ஒருவர் பிணக்கு, மனத்தாங்கல் இருக்குமேயானால், நமது உடலிலே முக்கியமான சக்தியாகிய சீவகாந்த ஆற்றல் பிணக்குற்று அது விஷத் தன்மையாக மாறக் கூடியதாகவே அமையும். அது குழந்தைகளையும் பாதிக்கும். ஆகவே, மனநலமும், உடல் நலமும் காத்து இனிமை காப்போம்.*

*வாழ்க வளமுடன்*

🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*

🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

*வாழ்க வையகம் வாழ்க வளமுடன்*

*வளர்க வேதாத்திரியம்*

*உலகப்பொது அருள்நெறிசமயஆண்டு : 34*

*ஜனவரி 06 / 01 /2019 ஞாயிறு*

*இன்றைய சிந்தனை*

📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘

*உள்ளத்தின் சோதனை*

*"மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும். நிலத்தில் ஊன்றும் வித்து எதுவென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்து பயிராகி அதனதன் தன்மைக்கேற்ற பயன் தருகின்றது. அது போன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதி பெற்று வாழ்வின் பயனாக விளைந்துவிடும். ஆகவே நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்தவிதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ, வளரவிடவோ கூடாது.*

*கோபம், வஞ்சம், பொறாமை, வெறுப்புணர்ச்சி, பேராசை, ஒழுக்கம் மீறிய காம நோக்கம், தற்பெருமை, அவமதிப்பு, அவசியமற்ற பயம், அதிகார போதை, என்ற பத்து வகையும் நமது உள்ளத்தில் நிறைபெற வொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து, களைந்து கொண்டே இருக்க வேண்டும்.*

*இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ, நிலைப்பதற்கோ இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறிவிடும். உடல் காந்த சக்தியைப் பாழாக்கிக் கொண்டே இருக்கும் ஓட்டைகளாக, இக்கெட்ட குணங்கள் மாறிவிடும்.*

*காலையிலும், மாலையிலும் 10 நிமிட நேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தை சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள். 30 நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழுங்கள். "*

*வாழ்க வளமுடன்*

📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*

📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘

*வாழ்க வையகம் வாழ்க வளமுடன்*

*வளர்க வேதாத்திரியம்*

*உலகப்பொது அருள்நெறிசமயஆண்டு : 34*

*ஜனவரி 05 / 01 /2019 சனி*

*இன்றைய சிந்தனை*

📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘

*தியானமும் எண்ணமும்*

*"மனதை நிறுத்தி வைப்பதென்பது இயலாத ஒன்று. ஆகவே தியானப் பயிற்சியாளரை அவ்வாறு செய்யச் சொல்வது எந்த பயனையுமளிக்காது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மன இயக்கத்தைச் சற்று ஒழுங்கு படுத்துதல் தான். அவ்வாறு ஒழுங்குபடுத்துதல் என்பது நம் தவமுறையிலும் அகத்தாய்வின் மூலமும் நிச்சயம் சாத்தியமான ஒன்றுதான்.*

*சாதாரணமாக மனம் ஓர் இடத்தில் நிலைப்பதில்லை. ஏனெனில் உணர்ச்சிவயப்பட்டும், வேகமாகவும் செயல்பட்டே அது பழகி விட்டிருக்கிறது. உதாரணமாக, மழை நீரானது புவி ஈர்ப்பு விசைக்கேற்றபடித் தனது பாதையை அமைத்துக் கொண்டு ஓடும். மீண்டும் மழைவரும் போது, அதே பாதையின் வழியாகத் தானே ஓடும் அது வேறு திசையில் செல்ல முயற்சிப்பதில்லை. பழைய அதே பாதையிலேயே செல்வது அதனுடைய தன்மை.*

*மனமும் அது போன்று தான் செயல்படுகிறது. ஆனால், தியானம் என்பதோ, அதைப் பயின்ற பிறகு மனதை பழைய வழியில் செல்லாதிருக்குமாறு வைத்துப் பழக்குவதே ஆகும். இந்த திறனில் வெற்றி கிட்டச் சில காலம் ஆகும். ஆனால் இடையில் மனந்தளராமலும், முயற்ச்சியை கைவிடாமலும் இருக்க வேண்டும்.*

*மழைநீரின் வழியை மாற்ற வேண்டுமானால், அதன் ஓட்டத்திற்கு மாற்று வழி ஒன்று தயார் செய்ய வேண்டும். நீர் முழுவதும் அதில் திரும்புமாறு செய்ய வேண்டும். அதே போல் தொடர்ந்து தியானம் செய்யும் போது, (தாங்கள் எதிபார்க்கும் காலத்திற்கு முன்பாகவே கூட) மனம் நுண்ணிய நிலையை அடைந்துவிடுவதால், புதிய பாதையில் திரும்பி விட மனதினால் முடியும். ஆரம்பப் பயிற்சி அன்பர்கள் நிறை பேர் உட்கார்ந்து தவம் செய்யும் கூட்டுத் தவத்தில் கலந்து கொள்ளும் போது, அவர்களின் தவ ஆற்றலும் சேர்ந்து, அந்தக் கூட்டுத் தவத்தில் கலந்து கொள்ளுகின்ற ஆரம்ப சாதகர்களின் ஆற்றலும் சிறிது சிறிதாகப் பெருகி வரும்."*

*வாழ்க வளமுடன்*

📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*

📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘

[01/04/19]   *வாழ்க வையகம் வாழ்க வளமுடன்*

*வளர்க வேதாத்திரியம்*

*உலகப்பொது அருள்நெறிசமயஆண்டு : 34*

*ஜனவரி 04 / 01 /2019 வெள்ளி*

*இன்றைய சிந்தனை*

📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘

*தவம்*

*"தவம் என்னும் யோகமானது மனித வாழ்வுக்கு இன்றியமையாத வாழ்க்கை நெறி. இதன் மதிப்புணர்ந்து பெரியோர்கள் தங்கள் வாழ் நாளை அர்ப்பணம் செய்து மனித குலத்துக்கென உருவாக்கி போற்றிக் காத்துத் தேவையும், தகுதியும் உள்ளவர்க்கு உதவச் செய்தனர். தற்காலத்தில் வாணிப நோக்கமுள்ள பலரால் யோகத்தின் கருத்தும், செயல் முறைகளும், விளைவுகலும் திரித்துக் கூறப்படுகின்றன; பரவலாகப் போதிக்கப்பட்டும் வருகின்றன.*

*மாயாஜாலங்களைப் புரிந்து மக்களை மயக்கவல்ல அற்புத ஆற்றல்களை அளிக்கும் பயிற்சி முறையே யோகம் என்றும், தனி மனிதன் பெருமையையும், புகழையும் உயர்த்தும் ஒரு சாதனைதான் யோகம் என்றும் பொதுமக்கள் கருத்துக் கொள்ளுமாறு யோகத்துக்குப் பொருள் கூறப்படுகின்றது. பல இடங்களில் யோகமென்னும் தவத்திற்கு உண்மை விளக்கம் கூறி வருகின்றேன். அறிவாளிகள், சிந்தனையாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். உண்மை உணர்ந்த தெளிவிலே மனநிறைவு பெறுகின்றனர்*.

*மனதை உயிர்மேல் வைத்துப் பழகும் தியானமோ, அசைவற்று, நினைவற்றிருக்கும் சாதனையோ, பல கோணங்களில் செய்யும் உடற்பயிற்சியோ, தற்சோதனையோ, மாத்திரம் தவம் அல்ல. மனிதப் பிறவியின் பெருநோக்கமும், மதிப்பும் உணர்ந்து; அறிவின் நிலை அறிந்து; பேரறிவு நிலை எய்தி, புலன்களை ஒழுங்குபடுத்தி; ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறிகளை தனதியல்பாகக் கொண்டு, அயரா விழிப்பு நிலையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் இனிதாக வாழ வைக்கும் உயர்வாழ்வே தவம் ஆகும்.*

*இத்தகைய பண்பாட்டுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளும் பயிற்சி முறைகளே தியானம், தற்சோதனை, உடற்பயிற்சி, அறநெறி விளங்கிக் கொள்ளும் போதனை, வேதாந்த விளக்கங்கள் இவையாவுமாகும். இவை எல்லாம் வழிகளே. முடிவு, அறிவை அறிந்த பேரற வாழ்வாகும்.*

*வாழ்க வளமுடன்*

📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*

📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘

Want your business to be the top-listed Gym/sports Facility in Ambasamudram?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

International Day of Yoga 2017
வாழ்த்து விளக்கம்-வேதாத்திரி மகரிஷி
மனோசக்தி-மகரிஷி
உலக அமைதிக்காக வாழ்த்து-மகரிஷி
உணர்வு பற்றி-மகரிஷி
What is Kayakalpa Speech by Prof.Muthu
அக்குபிரஷர் (Acu-pressure)
Vethathiri Maharishi Speech-bio magnetism
குடும்ப அமைதி - வேதாத்திரி மகரிஷி
ஆண்,பெண்- வித்யாசம் பற்றி மகரிஷி
கர்மா என்றால் என்ன-வேதாத்திரி மகரிஷி

Location

Category

Telephone

Address


Papanasam
Ambasamudram
627425
Other Ambasamudram gyms & sports facilities (show all)
Tirunelveli District Judo Association - TDJA Tirunelveli District Judo Association - TDJA
231/63 'o' Knv Complex, Ambasamudram, Tirunelveli District
Ambasamudram, 627401

JOIN WITH US, LETS US PLAY & LEARN JUDO