அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் Arulmigu Sri Kannan Thiru Kovil, Aundipatti Video August 23, 2019, 4:44am

Videos by அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் Arulmigu Sri Kannan Thiru Kovil in Aundipatti. Arulmigu Sri Kannan Thiru Kovil promoting Spiritual life to all people. Serve people and develop people by Spirituality.

இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்...

Happy birthday to Lord Sri Krishna... Kanna

Happy Janmastami

Happy Gogulastami

Other அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் Arulmigu Sri Kannan Thiru Kovil videos

வைகுண்ட ஏகாதசி 2020 Vaikunda egathasi 2020

🌺கோகுலாஷ்டமி பற்றிய விளக்கம்💐 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 🌿ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்- தேவகிக்கு மகனாகக் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணன் அவதரித்தார். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர்பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று சொல்லியிருக்கிறார்கள்.இவர் இரவில் பிறந்தார். ஆகவேதான் அறியாமையை அகற்றும் ஜோதியாக விளங்குகிறார்🌼 💐கோகுலாஅஷ்டமி நவமி காலங்களில் மங்களகரமான காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள். ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான் கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும். உலகிலுள்ள லௌகீக காரியங்களை செய்யாமல் ஈஸ்வர காரியங்களை செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அன்றைய தினம் மங்களகரமான காரியங்களேதும் செய்யாமல் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை, கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.🍀 🌿கோகுலாஷ்டமி அன்று இல்லங்களைத் தூய்மை செய்து, வாசல் முழுக்க கோலமிட்டு , வாயிற்படியிலிருந்து பூஜையறை வரை கண்ணனின் திருப்பாதங்களை மாக்கோலத்தால் வரைந்து அழகு பார்ப்பார்கள். கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து பூஜையறைக்கு வந்து நாம் வைத்துள்ள நிவேதனப் பட்சணங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்..🌷 🌺சிறு பிள்ளையாய் இருந்த கிருஷ்ணன் பெரும் குறும்புக்காரன். அடுத்த வீடுகளுக்குள் நுழைந்து, உறியிலிருந்து வெண்ணெய் திருடும்போது, வெண்ணெய் கீழே சிந்தி அதில் அவன் பாதச் சுவடுகள் பதிந்து இருக்கும் அடையாளத்தை வைத்து, திருட்டுக்கண்ணன் தங்கள் வீட்டில் வெண்ணெய் திருடியிருக்கிறான் என்று கோகுலவாசிகள் அறிந்து மகிழ்ச்சி அடைவார்களாம். இதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே, கிருஷ்ணன் பிறந்த நாளன்று, வீடுகளில் வெண்ணையினால் கண்ணனின் பாதச் சுவடு களை வரைவதைப் பழக்கமாகக் கொண்டனர். இந்த முறை தற்போது மாறி அரிசி மாவில் கிருஷ்ணரின் பாதச் சுவடுகளை வரைந்து மக்கள் மகிழ்கின்றனர். இவ்வாறு வரைவதால் கிருஷ்ணர் நம் வீட்டில் வாசம் செய்துள்ள பலன் கிடைக்கும் என்பதால் மக்கள் பக்தி பரவசத்துடன் வாசலிலிருந்து பூஜையறை வரை கிருஷ்ண பாதம் வரைகின்றனர்.🦋 🦋கோகுலாஷ்டமி அன்று இனிப்புப் பலகாரங்கள், குறிப்பாக கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணெய், அவல் , பால் , திரட்டுப்பால் , பழங்கள், தயிர் , வெல்ல சீடை , கார சீடை , கார வகைகள் நிவேதனம் செய்யப்படும். கிருஷ்ணன் குழ

இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்... Happy birthday to Lord Sri Krishna... Kanna Happy Janmastami Happy Gogulastami

ஓம் நமசிவாய.... பிரதோஷம்.... ஓம் நமசிவாய வாழ்க.... மகாசிவாராத்திரி நல் வாழ்த்துக்கள் #மகாசிவராத்திரி Ohm Shivaya Namaha...!!! Ohm Sharavanabavaya Namaha...!!!

ஸ்ரீ கண்ணன் கோவில் கும்பாபிஷேகம் (கோபுரத் திருவிழா) சீரும் சிறப்புமாக நடை பெற இருப்பதால் அனைவரும் குடும்பத்தினர்களுடன் கோடி புண்ணியமாம் கோபுர தரிசனம் பெற கலந்து கொள்ளுமாறு பக்தியோடு கேட்டுக்கொள்கிறோம்.

அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்: ஆலயம் தொழுவது சாலவும் நன்று… கோபுர தரிசனம் கோடி புண்ணியம்… புணருத்தாரணம் பூர்வ புண்ணியம்… கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்… – என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறி கேட்டிருக்கிறோம். அத்தகைய புகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காண்பது நமது ஸ்ரீகண்ணன் திருக்கோவில். "கேட்டதை கொடுப்பவரே கிருஷ்ணா கிருஷ்ணா... கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா..." மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்... அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களையும், அவர்களின் அறப்பணிகளையும் பனிவன்போடு வரவேற்கின்றோம். ஊர் கூடி தேர் இழுக்கவேண்டும் என்பார்கள்... அப்படி எத்தனையோ நல்ல உள்ளங்கள் ஒன்று கூடி உலக, ஊர் நன்மைக்காக இந்த அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவும், அந்த நல்ல உள்ளங்களைப் போற்றவும், அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காவும் இந்த மங்கல யாகம் நடைபெற இருக்கிறது. அனைவரும் ஸ்ரீகண்ணனின் புதிய சிலை பிரதிஷ்டையுடன் கோபுர அருள் பெற பக்தியோடு அழைக்கின்றோம்... காப்புக்கட்டுதல் 21-ஜனவரி-2018 லிருந்து ஆரம்பம். தங்கள் மேலான காணிக்கை / நன்கொடைகளை இருகரம் கூப்பி பணிவன்போடு ஏற்றக் கொள்ளப்படுகிறது. ரூ.2000ம் மற்றும் அதற்குமேல் நன்கொடைஅளிப்பவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் இடம்பெறும் என்பதை ஆன்மீக அன்பர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம். சர்வரம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்... Dear Devotees and all, All are welcome with your family to Ashtabandana Maha Kumbabishekam on 02-Feb-2018 (Friday) to 04-Feb-2018 (Sunday) in our Sri Kannan Kovil, T.Subbulapuram (PO), Aundipatty(TK) Theni (DT) Tamil Nadu (ST) India-625536 Special blessings of Lord Sri Kanna from The dome of the tower along with new statue inauguration. Sacred thread tying on from 21-Jan-2018. Their superior offerings / donations are accepted from devotees Diamond heart. Devotees are revealed to us that the names of donors of Rs.2000 and above will be inscribed on inscriptions. Sarvam Sri Krishnarpanam... More details: www.srikannankovil.npage.be Con

இன்று வைகுண்ட ஏகாதேசி ஓம் நமோ நாராயணாய நமஹ...

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்... விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே...

வேத முதல் காரணன்.......!!! "சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்: திருமாலாம் அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகன்றான்; தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்; இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான். -கம்பராமாயணம் ( 9837 ) என்னுடைய உண்மையான மிகச்சிறந்த வரபலங்களை எல்லாம் அழிக்கின்றான்! இவ்இராமன் சிவபெருமானாய் இருப்பானோ? அப்படி இரான்! திருமாலாகிய அவனாக இருப்பானோ? அப்படியும் இரான்! தவம் செய்து ஆற்றல் பெற்றவனாய் இருப்பானோ என்றால் இத்தகைய பேராற்றலைத் தவத்தால் செய்து முடிக்கு தகுதியுடையவன் ஒருவனும் இல்லை. (ஆதலின்) அந்தத் தொன்மையான வேதங்களுக்கெல்லாம் மூல காரணமான ஆதிப் பரம் பொருள் இவன் தானோ? என்று கூறி வியந்து பிரமித்து நின்றான். தானே மிகப் பெரும் தவங்களைச் செய்து வரங்களைப் பெற்றவன் ஆதலின் தன் வரங்களை அழிப்பவன் தன்னினும் மிகப் பெரிய தவம் செய்யவேண்டும். அப்படி ஒருவன் இருக்க இயலாது என்பது இவனது தற்செருக்கால் வந்த நினைவு, இவ்வாறு அனைத்தும் பொருந்தாமையின் வீடணன் கூறியபடி 'ஆதிப் பரம் பொருள்' இவன் என்பதை நினைந்து தெளிந்தான்.

சித்தத்தை சிவன் மேல் காட்டி- (சிந்தனையை) சத்தத்தை அவன் மேல் ஊட்டி (சிவ நாமத்தை) சுத்தத்தை உள்மனதில் பூட்டி (மனத்தூய்மை) நித்தம் தொழுதால் சிவபாதம் அடையலாம். போற்றி ஒம் நமச்சிவாய.

இன்று பாபங்கள் போக்கி பரமன் அருள் அளிக்கும் மஹா சிவராத்திரி! சீறிப் பாய்ந்த கங்கை அவளின் சீற்றம் தணிக்கத் துணிந்து நின்று சிரசில் தாங்கி நிற்கும் வேளை சினத்தால் உமையவள் முனுமுனு கேட்டு இதய பீடம் உனக்கே என்று உடலில் பாதியைக் உமையாள்க் கீந்து உயிர்கள் காக்க விடமும் குடித்த நீல கண்டனைப் போற்றிப் பாடு சிவராத்திரி நடுநிசி யின்று

God blesses for all... Vakunda Ekadasi special

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

ஸ்ரீ சரஸ்வதி த்யான ஸ்லோகம். கலைமகளே! நான்முகனின் நாயகியே! அலைமகள் மலைமகள் போற்றும் தேவியே! விலை மதிப்பில்லாத மாணிக்கமே தாயே! கலைபல கற்றிடவே கருணை செய்வாயே! அனைவருக்கும் ஆயுத பூஜை- சரஸ்வதி பூஜை- விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள். நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த பூஜைகள் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரங்களை ஜோதிடர்கள் குறித்துள்ளனர். ஒரு சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் அன்னையை வணங்குவார்கள். அதற்கேற்ப நேரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆயுதபூஜைக்கு ஏற்ற நேரம் இந்த வருடம் புரட்டாசி இருபத்து நான்காம் தேதி 10-10-2016 திங்கள் கிழமை அன்று ஆயுத பூஜை -சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம் பகல் 12-00 மணி முதல் 02-00 மணிக்குள் மற்றும் மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை பூஜை செய்வதற்கு சிறந்த நேரமாகும். இன்றைய தினம் தங்கள் தொழில் சம்பந்தமான ஒரு புதிய புத்தகம் வாங்கி பூஜை செய்வது சிறப்பு இதனால் சரஸ்வதி கடாட்சம் என்றென்றும் நிலைத்து நிற்கும். விஜயதசமி பூஜை : ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் தொடங்கினால் அந்த வருடம் முழுவதும் தொழில் நிலை சிறப்படைந்து நன்றாக செல்வச் செழிப்பு உண்டாகும். தசமி திதியும் திருஓணம் நட்சத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷம் இந்த வருடம் அந்த சிறப்பு நிகழ்கிறது. ஏதேனும் ஒரு புதிய செயலை இன்று துவக்குவது சிறப்பு. நல்ல நேரம் : இந்த நாளில் நாம் துவங்கும் செயல் மிகவும் எதிர்காலத்தில் விருத்தியாகும். விஜய தசமி அன்ற

Award

About   Privacy   Login