Yoga Ravi Page

Contact the business

Yoga Ravi Page MEDICAL & SPIRITUAL MESSAGES

Maranadu Karuppasamy
05/10/2026

Maranadu Karuppasamy

04/10/2026

மானாமதுரை ஏன் செல்கிறேன்?
--------------

மானாமதுரைக்கு அருகில் என் குலதெய்வம் சன்னாசி அப்பர் ஜீவசமாதி ஒருபுறம், மடப்புரத்தில் என் அன்னை காளி, மாரநாட்டில் சக்தி வாய்ந்த கருப்பண்ணசாமி மூவரும் அழைக்கிறார்கள்.

அங்கு இருக்கப் போகும் பத்து நாட்களில் மேற்கண்ட மூன்று கோவில்கள் சென்று உக்கிரமாய் ஜெபம் செய்யப் போகிறேன்.

என் குருநாதர் திரு பால சட்ட நாதன் அவர்களும், குலதெய்வம் சித்தர் சன்னாசியும், என் அன்னை காளியும் என்னை வழிநடத்தட்டும்.

என் அன்னை காளி எனக்கு அருளிய சக்தி வாய்ந்த மருத்துவ முறைகள் உலகெங்கும் பரவட்டும்.

முக்கியமாக மிகக் குறைந்த செலவிலே கேன்சர் வியாதியை குணப்படுத்தும் வழிமுறை உலகெங்கும் பரவட்டும்.

குருநாதரும் தெய்வங்களும் வழி நடத்தட்டும்.

காளி கருப்பாய இடும்பாய நமஹ.

காளி கருப்பாய இடும்பாய சரணம்.

03/10/2026

அக்டோபர் 5 முதல் 14 வரை நான் மானாமதுரையில் இருப்பேன்

29/09/2026

MIRACLE OF RUDRAKSHAA THERAPY :
---------------------------------

57 years old lady, unable to hold anything or eat anything. Came for treatment yesterday.

I checked the pulse and attached rudrakshas on hand fingers. Fingers started moving in 5 minutes. Today is second day. She could hold any thing and eat.

Permanent cure or 90% cure can be achieved in 10 days treatment.

With the divine blessings of my Guruji and God another experience.

29/09/2026

ருத்ராட்ச சிகிச்சையின் மற்றுமோர் அற்புதம்.
----------------------------

57 வயது பெண். வலது கை விரல்கள் வேலை செய்ய வில்லை. எதையும் எடுக்கவோ, சாப்பிடவோ முடியவில்லை. நேற்று சிகிச்சைக்கு வந்தார்.

நாடி பார்த்து ருத்ராட்சம் கை விரல்களில் இணைத்தேன். 5 நிமிடங்களில் விரல்கள் இயக்கம் 90% சரியானது. இன்று எதையும் பிடிக்க முடிகிறது, சாப்பிட முடிகிறது.

10 நாட்கள் தொடர் சிகிச்சையில் முழுதாகவோ அல்லது 90% குணமாகும்.

குருவருளும் இறையருளும் துணை நிற்க மற்றுமோர் அனுபவம்.

29/09/2026
29/09/2026

கடல் நீர் குளியல் மன நோய்க்கு மருந்தாகுமா? கருப்பண்ணசாமி கூறிய பரிகாரம் :
-------------------------

25 வயது இளைஞர் மனச்சிதைவு நோய். எப்போதும் தற்கொலை எண்ணம். வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. ஒரு வருட காலமாக அந்த இளைஞர் மனநோயால் அவதிப்பட்டு உள்ளார். பெற்றோர் பலவிதமான மருத்துவங்கள் முயற்சி செய்து அனைத்தும் தோல்வி. என்னிடம் பையனை அவருடைய அப்பா அழைத்து வந்தார்.

மன நோய்க்கு மருந்து ஹோமியோபதி மலர் மருந்துகள். அதற்கான ஏற்பாடுகளை செய்தேன்.

கைதொட்டு நாடி பார்த்து கருப்பண்ணசாமி ஜெபம் செய்யும் போது சாமி கூறியது : "கடல் குளியல் நோய் தீர்க்கும்." ஆனால் தற்போது இருக்கும் நிலையில் பையனை கடலில் கொண்டு விட்டால் கடலுக்குள்ளே செல்வதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் பையனின் அப்பாவிடம் “தினசரி 5 லிட்டர் கடல் நீர் கொண்டு வந்து பையன் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்க சொல்லவும்.”

ஒரு மாதம் கழித்து பையனின் அப்பா வந்து நன்றி கூறினார். பையன் வியாதியில் இருந்து பூரணமாக வெளிவந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டான்.

குருவருளும் இறையருளும் துணை நிற்க மற்றும் ஓர் அனுபவம்.

Today homam in Mayiladuthurai.
27/09/2026

Today homam in Mayiladuthurai.

25/09/2026

கருப்பண்ணசாமி ஹோமம் செய்தால் என்ன சாதிக்கலாம்?
என்னுடைய அனுபவம் :
--------------------------

சென்னை மாம்பலம் பரோடா தெருவில் கிளினிக் வைத்திருந்தேன். அதே தெருவில் ஒரு பிளாட்டில் ஒரு வக்கீல் டிராவல்ஸ் நடத்திக் கொண்டிருந்தார். 15 கார்கள் அனைத்தும் பெரிய கார்கள். அவை அனைத்தையும் அந்த குறுகிய தெருவில் நிறுத்தி பலருக்கும் இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்தார். 15 டிரைவர்களும் ரவுடிகள். ஏன் காரை இங்கே நிறுத்துகிறாய் என்று கேட்டால் உடனடியாக வாய்க்கு வந்தபடி பேசி அவர்களை மிரட்டுவார்கள்.

ஒரு வெள்ளிக்கிழமை நான் வாரவாரம் ஹோமம் செய்யும் தினம். என்னுடைய கிளினிக்கின் கேட்டை ஒட்டி நான் உள்ளே போக முடியாதவாறு ஒரு கார் நிற்கிறது. நான் வேறு வழியில்லாமல் அந்த வக்கீலின் வீட்டுக்கு சென்று கார் குறுக்கே நிற்கிறது நான் எப்படி கிளினிக்கில் உள்ளே செல்வது? என்று கேட்டு சத்தமிட்டேன். அவன் பதிலுக்கு நான் காரை எடுக்க முடியாது என்று கூறிவிட்டான். நான் எனது பில்டிங் ஓனரை கூட்டிக்கொண்டு சென்று அவர் கூறிய பிறகு காரை எடுத்தான்.

பொதுவாக ஒருவன் நூற்றுக்கணக்கான பேருக்கு இடைஞ்சல் செய்த பிறகு என்னிடம் வம்பு செய்வான். அன்றைய ஹோமத்தின் சங்கல்பம் அவனுக்காக செய்தேன்.

அதே தெருவில் ஒரு அரசியல் பெரும் புள்ளி இருக்கிறார். ஒரு வாரத்திற்குள் அவருடைய வீட்டிற்குள் ஆண்கள் இல்லாத சமயம் இந்த டிரைவர்களில் நான்கு பேர் சென்று அந்தப் பெண்களிடம் கேவலமாக பேசியிருக்கிறார்கள். அந்த டிரைவர்கள் தங்கியிருக்கும் இடம் அதே தெருவில் இருந்தது.

அன்று இரவு 12 மணி முதல் நான்கு மணி வரை அனைத்து டிரைவர்களுக்கும் அந்த அரசியல்வாதியின் ஆட்கள் மூலம் பாடம் புகட்டப்பட்டது. அதன் பிறகு அந்த வக்கீலுக்கும் தக்க பாடம் புகட்டப்பட்டது. அவன் அன்றே அந்த தெருவை காலி செய்துவிட்டு எங்கோ சென்று விட்டான்.

வரும் ஞாயிறு மயிலாடுதுறையில் மதுரையை சேர்ந்த கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணுக்காக ஹோமம் நடத்துகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் முகப்பேரில் உள்ள விநாயகர் கோவிலில் நூற்றுக்கணக்கான பேருக்கு ஹோமங்கள் செய்து அவர்களுடைய துன்பங்களை நீக்கி இருக்கிறோம். அவர்களின் மூன்று பேர் வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள்.

கருப்பன் துடியான தெய்வம். உடனே செயலாற்றுவான்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yoga Ravi Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yoga Ravi Page:

Shortcuts

Share