Vethathiri Maharishi Alwarkurichi

Vethathiri Maharishi Simplified Physical Exercises Kayakalpa yoga Simplified kundalini yoga Introspection www.facebook.com/skyyogatv

Operating as usual

கணவன் மனைவிக்கு அறிவுரை:

குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஓர் சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகும் இடங்களிளெல்லாம் இனிமை தரும் அலைகளாகப் பயன் தரும்....

கணவன் மனைவி உறவில் அன்பும் ஒற்றுமையும் திகழ உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். இதன் விளைவு உங்கள் குழந்தைகள் வாழ்வில் பல நலன்களை விளைவிக்கும். குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசுங்கள். குழந்தைகள் உங்கள் இருவருக்கும் மதிப்புத்தருவார்கள். அவர்கள் வாழ்விலும் ஒழுக்கம் உயரும்.
குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ இழித்துக் கூறுவதோ, தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி விடும்.

தன்னடக்கம், பண்பாடு இல்லாத தம்பதிகள், ஒழுக்கம் மேன்மையும் உடைய மக்களைப் பெற முடியாது. மக்கள் செல்வம் குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பயக்க வல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும்.

நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால் தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்? என்ன நலன் வேண்டுமோ அந்த நலம் பெற ஏற்ற செயல்களைப் பின்பற்றுங்கள், விளைவு நிச்சயம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

June 21st International Day of Yoga

June 21st, International Day of Yoga

தெய்வீக உறவு:

குழந்தைப்பேறு உண்டாவதற்கு முன்னதாகவே கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை நமது பண்பாட்டில் நாம் வளர்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் பிணக்கு (Conflict Thoughts) எழாது உள்ள குடும்பத்தில் தான் குழந்தைகள் நன்றாக இருக்கும். அங்கு பிணக்கு இருக்குமேயானால் அடிப்படை சுதந்திரத்தையே அடக்குமுறையால் தடுக்கும் போக்கு, அதில் உள்ள போராட்டம் குழந்தைகளிடம் பாதிக்கும்; மனம், உடல் நலம் கெட்டதாகத் தான் அமையும். இதை மிகவும் முக்கியமாக காண்கின்ற போது, கணவனும் ஒத்துழைக்க வேண்டும், மனைவியும் ஒத்துழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உள்ளத்தைப் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதற்காக வந்தாகிவிட்டது. திருமணமும் ஆகிவிட்டது. இனி வாழ்ந்து தான் ஆக வேண்டும். ஒருவருக்கொருவர் உதவித்தான் ஆக வேண்டும் என்ற அளவிலே வந்துவிட வேண்டும்.

அங்கு விட்டுக் கொடுப்பதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் ஒருவிதமான பிடியை பிடித்துக் கொண்டு, என் கருத்துத்தான் உயர்ந்தது என்று வைத்துக் கொண்டால் பிணக்குதான் வரும். இதெல்லாம் சரி செய்வதற்கு அகத்தவம் என்ற முறையிலே ஒரு தியான முறையை நல்ல முறையில் செய்து வந்தார்கள் என்றால் மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்து சரி செய்து கொள்ளலாம்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

#பெருந்தகை:

அளவுக்கு மீறி ஒருவர் உன்னிடம் மரியாதை காட்டுவாரேயானால் உங்கள் இருவரில் எவரிடமோ, தவறு இருக்கின்றது என்றுதான் பொருள்.

ஒன்று அவன் அப்பாவியாக இருந்து உன்னை ஏதோ அதிக ஆற்றல் உள்ள மனிதனாக கற்பித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அல்லது, உன் நயவஞ்சகமான வேடமும், நடிப்பும் அவனை ஏமாற்றி இருக்க வேண்டும்.

அல்லது அவன் உன்னிடமிருந்து சலுகையையோ, இலாபத்தையோ அளவுக்கு மீறிப் பெறத் திட்டமிட்டுக் கொண்டிருக்க வேண்டும். பிறரை ஏமாற்றாமல் வாழ்பவன் ஒரு நல்ல மனிதன். பிறரிடம் ஏமாறாமல் வாழ்பவன் ஒரு அறிவாளி. பிறர் ஏமாற்றுகின்றார்கள் எனத் தெளிவாக உணர்ந்தும் அதை தெரிந்து கொள்ளாததுபோல் நடித்து, இயன்ற அளவிலும், பாதகமில்லாத முறையிலும் விட்டுக்கொடுத்து இருவரும் நலம்பெறக் காண்பவன் ஒரு பெருந்தகை.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வளாக வளமுடன்

#அழகைப்_பாதுகாப்பது_எப்படி?

எந்நேரமும் சந்தோஷமாய் இருப்பதெப்படி?
இனிய இல்லறத்திற்குப் பத்து யோசனைகள்!
நரைமுடி கருமுடியாய்த் தழைக்க!
இதுபோன்ற தலைப்புகளைப் பார்த்தால் உடனே ‘கிளிக்’கி விடுவோம். “இளமையின் ரகசியம்” என்றால் மட்டும் விட்டுவிடுவோமா? உள்ளே வந்ததற்கு நன்றி. மேலும் படியுங்கள்.பல்வேறு புத்தகங்களைப் படித்திருப்பீர்கள். பல்வேறு ஆலோசனைகளைக் கேட்டிருப்பீர்கள். பார்த்துப் பார்த்து, படித்துப் படித்து, கேட்டுக் கேட்டு எதிலேயும் திருப்தி அடையாமல், எல்லாம் ‘டுபாக்கூர்’, எந்த முறையிலும் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். உங்கள் முடிவுக்கு ஒரு முடிவு கட்டி இதை ஆரம்பியுங்கள்.ஓர் எளிய உடற்பயிற்சிமுறை. வியர்க்க விறுவிறுக்கச் செய்ய வேண்டியதில்லை. இதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. அட..அப்படி ஒரு பயிற்சி முறையா, என ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம். உண்மைதான். முறையாகச் செய்தால் சிறந்த பலன் கிடைப்பதைக் காண்பீர்கள்.அட ஒண்ணுமில்லீங்ணா. குதிரை பாத்திருப்பீங்க. அதோட கம்பீரத்தை ரசிச்சிருப்பீங்க. அது கொள்ளு தின்னும் அழகைப் பருகியிருப்பீங்க. அதன் தோலோட வழவழப்பு, உறுதியைக் கண்டு வியந்திருப்பீங்க. என்னிக்காவது இதன் உடம்புல மட்டும் எப்படி இவ்வளவு பலம் வந்துச்சு, எப்படி இவ்வளவு கம்பீரமாத் தெரியுது அப்படினு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்களா?இரண்டே இரண்டு விஷயங்கள் தான். முதலில், அது தின்கிற கொள்ளு. கொள்ளு சாப்பிட்டால் கிடைக்கும் பலன் என்னவென்றால், உடம்புல இருக்கிற அனாவசிய கொழுப்புகளையெல்லாம் கரைத்துக் காலாவதி ஆக்கிடும். இது முதல் விஷயம்.இரண்டாவது, அதன் பின்புறப் பகுதி. மலஜலம் கழிக்கும் பகுதி. அங்கே தான் சூட்சுமமே இருக்கு. உடம்புல சகல பாகங்களிலிருந்தும் செல்லும் முக்கிய நரம்புகள் அந்த இடத்தில் தான் முடிச்சுகளாய்ப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. வீணையில் எவ்வளவுக்கெவ்வளவு நரம்புகள் தொய்வடையாமல் உறுதியாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அது எழுப்பும் நாதம் இனிமையாக இருக்கும்.அது போலவே இந்த நரம்புகளின் உறுதிதான், மனிதனோ விலங்குகளோ, அவற்றின் இளமையையும் பலத்தையும் நிர்ணயம்
செய்கின்றன. நரம்புகள் கட்டுறுதி குலைந்துவிட்டால் அவ்வளவுதான். உடல் நைந்துவிடும். அழகிழந்து விடும். அதனால் இந்த நரம்புகளைப் பேணிக் காப்பது அவசியம். வீணையென்றால் திருகாணியை முறுக்கிவிட்டால் போதும். நரம்புகள் முறுக்கேறி விடும். குதிரை என்ன செய்யும்?இப்போதுதான் விஷயத்திற்கு வந்திருக்கிறோம். குதிரையின் பின்பக்கத்தைக் கவனியுங்கள். சுருங்குகிறது… விரிவடைகிறது… சுருங்குகிறது… விரிவடைகிறது… மறுபடி… மறுபடி. அது இப்படிச் செய்யாத நாளே இல்லை. இதனால் நரம்பு முடிச்சுக்கள் தூண்டப்பட்டு நரம்பு மண்டலத்தினூடே மின்சாரம் பாய்கிறது. சக்தி உருவாகிறது. இளமை சக்தி.

இது ஒரு அருமையான காயகற்பக் கலை. குதிரையைப் போல நாமும் செய்யவேண்டும். அவ்வளவுதான். இதை யோக மகரிஷிகள் ‘அஸ்வினி முத்திரை’ என்கிறார்கள். சிறு சிறு எளிய ஆசனங்களை உள்ளடக்கி, அதனுடன் இந்த அஸ்வினி முத்திரையும் செய்தால், உடலில் ஒருவித மின்சாரம் பாய்வதை உணரலாம். இதை நன்குணர்ந்த மறைந்த தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் தம் அனுபவத்தின் வாயிலாக இந்த அரிய கலையைப் பயிற்றுவித்தார்.இதன் பலனை நீங்கள் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே உணரலாம். தினமும் மிகச் சரியாக கடைப்பிடித்து வந்தீர்களேயானால் ஒரே மாதத்தில் உங்களிடத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் காண முடியும்.இக்காயகற்பக்கலை வேதாத்திரி அவர்களின் மனவளக்கலை மன்றம் மூலம் நடத்தப்படுகிறது. இக்கலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களைத் தவிர, வேறு யாருக்கும் இதனைக் கற்றுத் தர அதிகாரமில்லை. அதனால் இப்பயிற்சி முறையை இங்கே விரிவாக விளக்க முடியாது. இது ஒரு அறிமுகம் மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள மனவளக் கலை மன்றம் மூலமாகக் கற்றுக் கொள்ளலாம்.

#ஆழ்வார்குறிச்சி_கோரக்கர்நாதர்_தவமையம் (12.01.2020) நேற்று காயகல்ப பயிற்ச்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

பே.குமாரஅழகப்பன் ஐயா அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது

வாழ்க வளமுடன்.

காயகல்ப பயிற்ச்சி:

நாள்:12.01.2020 (ஞாயிற்றுக்கிழமை).

நேரம்: 2:30PM to 6:00PM (IST)

நடத்துபவர்: பே.குமாரஅழகப்பன் ஐயா

இடம்:கோரக்கநாதர் தவமையம்,ஆழ்வார்குறிச்சி.

அவரவர் துன்பத்திற்கு அவரவரே காரணம் :-

❓வினா : "நம் வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கு நாமே காரணமாக எப்படி இருக்க முடியும்??"

✔️விடை : "உங்களுக்குத் துன்பம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நினைப்பில் தான் துன்பம் இருக்கிறது. உண்மையில் அது துன்பமே இல்லை. உங்களுக்கு 85 வயது என்றும் உங்கள் அப்பாவுக்கு 110 வயது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அவர் இறந்துவிட்டார். நீங்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். உண்மையில் அது துன்பமா? இன்னும் இருந்தால் இரண்டுபேருக்குமே துன்பமாக இருக்கும். இம்மாதிரி எத்தனையோ இன்பத்தைத் துன்பமாக நினைக்கிறோம். அதிகமாகச் சாப்பிட்டால் துன்பம் வரும் என்பது தெரியுமே. ஆனால் சாப்பிடும் போது இன்பமாக இருக்கிறதே. அளவோடு யார் நிற்கிறார்கள்? அஜீரணம் வருகிறது. எனக்கு இவ்வளவு சொத்து இருந்தால் தான் இன்பம் என்று நினைக்கிறார்கள். அப்படி எதிர்பார்க்கும் போது கிடைக்கவில்லை என்றால் வருத்தப்படுகிறார்கள். உண்மையில் அது கிடைத்துத் தான் வாழ வேண்டும் என்பதில்லை. ஆனாலும் கூட எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள். யார்மேல் குற்றம்?"

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

தொடரும் பதிவுகள்:

பிறந்தபோது நாம் ஒன்றுமே கொண்டு வரவில்லை, வாழ்ந்து கொண்டிருக்கின்றபோதும், பல கோடி ஆண்டுகள் ஆண்டு கொண்டி ருந்தபோதிலும் கூட, குடல் ஜீரணம் ஆகும் அளவுக்கு மேல் யாருமே உணவை உண்ண முடியாது. தான் சுமக்கும் அளவுக்கு மேலே உடை யைத் தூக்க முடியாது. இதைத்தான் சங்க காலப்புலவர் ஒருவர் ""உண்பது நாழி, உடுப்பன இரண்டே'' என்று கூறியுள்ளார்.
நின்றால் கால் அளவு, படுத்தால் ஆறு அடி. ஒரு அடி இதற்கு மேல் இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள இயலாது. எல்லாமே எல்லை கட்டி இருக்கிறது. போகும்போது ஒன்றுமே கொண்டு போவது இல்லை. என்றாலும், தொடர்ந்து என்ன வருகிறது என்று பார்க்கும்போது தான் அவன் ஆக்கிய செயல்கள், அவன் அறிந்த அறிவு, எல்லாம் வினையின் பதிவாக, அறிவைப் பரம்பொருளிடத்திலே நெருங்கச் செய்யும் ஒரு பாதையாக, ஒரு வெற்றியாக அமைந்து விடுகின்றது.
ஆகவே, அந்தப் பெருஞ்ஜோதியை நாடிய நாட்டம் எல்லாம், தனிப் பெரும் கருணையை நாடி உலகுக்கு, உயிருக்குச் செய்த சேவையும், அறநெறியும் இறை வணக்கமும், இந்த இரண்டிலே ஏற்பட்ட பதிவுகளும் தான் மனிதனைத் தொடர்ந்து போகுமே தவிர வேறு ஒன்றும் தொடர்வது இல்லை.

எண்ணிப்பார்:-
"நாள்தோறும் செய்தவற்றைப் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதன்முன் கணித்துக்கொள்வீர் :
மீள்வதில்லை போயினவை எனினும் நீயோ
மேற்பட்டாய் அனுபவத்தில் அதுவே இலாபம்."

-வேதாத்திரி மகரிஷி

❓ கேள்வி: சுவாமிஜி! முக்கியமான காரியங்களைத் தொடங்கும்போது வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற பஞ்ச அங்கங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்களே இது ஏன்?

✅ பதில்: மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றிகரமாக முடிக்க இயற்கையின் துணையை நாடுதல் என்பது பழக்கத்திலிருந்து வருகிறது. தமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம், என்ற ஐந்தையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்துள்ளார்கள். இந்த விஞ்ஞான காலத்தில் இவ்வளவையும் பொருத்திப் பார்க்கவே முடியாது.

வாழ்க வளமுடன்!

அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

பிழைப்பு ஓர் சிந்தனை:

அன்று ஒரு நாள் ஈரோடு மன்றத்திலே வாழ்க்கை தத்துவம் குறித்து மகரிஷி அவர்களின் அற்புத அருளுரை.

கேள்வி நேரத்தில் ஒரு அன்பரின் கேள்வி : வாழ்க்கையை ஏன் பிழைப்பு என்று கூறுகிறோம்?

நான் கூட நினைத்தேன், இது என்ன கேள்வி என்று. வெறும் வழக்கு சொல்தானே பிழைப்பு,,

ஆனால் ஸ்வாமிஜி அவர்கள் அழகாக விளக்கம் சொன்னார்கள் பாருங்கள் எல்லோரும் அசந்து விட்டோம்.

நீண்ட பதில். இங்கு எளிமையாக உட்கருத்தை மட்டும் பதிவிடுகிறேன்.

உலகம் சுழல்கின்ற வேகத்தால் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது. இதனால் உடலில் இருந்து கோடிக்கணக்கான நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டு தொடர்ந்து வெளிநடப்பு செய்கின்றன.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் முதிர்வுற்ற கோடிக்கணக்கான செல்களை தினமும் உடல் இழந்து கொண்டிருக்கிறது.

இந்த இழைப்பை ஈடு செய்ய புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும் காற்றிலிருந்தும் கோள்களிளருந்தும் நீரிலிருந்தும் பெறுவதால் உடலை நாம் புதுப்பித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கும், சேர்க்கைக்கும் இடையில் நாள்தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பி பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு பிழைப்பு என்ற பெயர் வந்தது.

எங்கு தேடினாலும் கிடைக்காத
விளக்கம். அவர் ஒருஞானச் சுரங்கம்.

வாழ்க வளமுடன்,,

#ஆழ்வார்குறிச்சி கோரக்கர்நாதர் தவமையம் சார்ந்த (24.11.2019) அன்று ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் நடைபெற்ற விஷன் பிரம்மஞான வகுப்பு மற்றும் SSA ஆசிரியர்களுக்கான முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

வாழ்க வளமுடன்.

ஆசை! ஆசை! ஆசை! - ஆசையைப்பற்றி அருள்தந்தை!!

"தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை தேவை நிறைவோடு நின்றுவிட வேண்டும்.
பசி தாகம் முதலிய இயற்கைத் துன்பத்தைப் போக்கிக்கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும்.

உயிராற்றல் செலவைச் சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும்.

ஆனால் பொதுவாக அப்படி நிற்பதில்லை. தேவை நிறைவின்போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது.
.
எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது !.

அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது.
எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியதுபோக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது.

இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும்.

எழாமலேயே காக்கவும் வேண்டும்.
உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன.
அவை துன்பத்தைத்தான் தரும்.
.
தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளானாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ பிறர்க்கோ எதிர்கால விளைவாக துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே.

ஆசையை அடக்கினால் அடங்காது.
உணர்ந்து ஆராய்ந்து அதனைப் பிறந்த இடத்திலேயே ஒடுங்கச் செய்ய வேண்டும்.

தேவையா? வசதி இருக்கிறதா? பின் விளைவு என்ன? என்று ஆராயும்போது நிறைவு செய்யக்கூடாத தீய ஆசைகள் அப்போதே அமைதிபெறும்.
பிறந்த இடத்திலேயே அதாவது மனதிலேயே தானாகவே மாய்ந்துவிடும்.
.
எழுந்த ஆசை செயலானால் அதன் காரணமாக விளையும் நன்மை, தீமை பற்றிய சிந்தனையின்றி, ஆராய்ச்சி, தெளிவு, திடசங்கற்பமின்றி, ஆசையை அதன் இயக்கத்திற்கு விட்டுவிட்டால், அனுபோகத்தைப் பெறாதவரை அதற்கும் மனதிற்கும் அமைதி இல்லை.

எனவே நமது "மனவளக்கலை" ஆகிய குண்டலினியோக (Simplified Kundalini Yoga) பயிற்சியின் முக்கிய அம்சம் "தற்சோதனை" (Introspection) .
தற்சோதனை பயிற்சியில் உள்ள கோட்பாடுகளுக்கு உட்பட்ட பிறகும் மிச்சப்படும் ஆசை ஒன்றுக்கு மேல் இருக்குமேயானால், அதை ஒவ்வொன்றாக எடுத்து செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்".
.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

உடல் நலம் பேணும் வழிமுறைகள்:

நலம் பேணும் வழிமுறைகள் உங்களுக்காக அருட்தந்தை அருளியது!

1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.
அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி.
உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.
அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது.
அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும்.
உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும்.
இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை.
இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும்.
உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன.
இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.
விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும்.
இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது.
எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும்.
நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும்.
பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும்.
தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.

9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்தநீரிலோ, தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது.
தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது.
மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன.
அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

வாழ்க வளமுடன். .

[10/19/19]   மவுனம் பயிற்சி:

நாள்:20.10.19 (ஞாயிற்றுக்கிழமை).

நேரம்: 10:00AM to 4:30PM

நடத்துபவர்: பே.குமாரஅழகப்பன் ஐயா

இடம்:பொதிகை அறிவுதிருக்கோவில்.

Life is Notebook📖📖

🎧 Use Headphone for Better Quality 🎧
#ஆழ்வார்குறிச்சியில் ஸ்ரீ சைலபதி நடுநிலை பள்ளியில் #90_ஆண்டுகள் மேலாக சேதமடைந்து இடியும் நிலையில் பள்ளி கட்டிடம்,பள்ளி வளர்ச்சிக்கு எங்களுக்கு ஸ்பான்சர் தேவை🙏🙏

📱மேலும் விபரங்களுக்கு:
👩‍⚖️முத்துராஜம்(H.M) 9715872683
👩‍🏫பாக்கியலக்ஷ்மி(ஆசிரியர்) 9500438848

Want your business to be the top-listed Gym/sports Facility in Tirunelveli?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

June 21st International Day of Yoga
"மனதைப் பற்றிய அறிவே வாழ்வை வளமாக்கும்"
சுய இன்பம் சரியா தவறா?
மூலாதாரத்தில் தொடங்கிய துரியம் வரை விளக்கம்:
பெண்ணே ஆணை புரிந்து கொண்டால் வாழ்வு வளமாகும் பகுதி-2
பெண்ணே ஆணை புரிந்து கொண்டால் வாழ்வு வளமாகும்.
துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி?
காமம் ஏன் இன்றைய தலைமுறையை படுத்துகிறது விளக்கமும் தீர்வும்?
தீயப்பழக்கங்களிலிருந்து விடுபட வழி?
International Day of Yoga 2017

Location

Category

Telephone

Address


Venue:Sailapathy Middle School ALWARKURICHI-627412.Landmark:BusstandTirunelveli District.Tamilnadu,india.
Tirunelveli
627412

Opening Hours

Wednesday 18:00 - 20:00
Saturday 18:00 - 20:00
Other Yoga & Pilates in Tirunelveli (show all)
Siddha, Ayurveda and Yoga Siddha, Ayurveda and Yoga
1/4d,karupandurai,kunnathur Post
Tirunelveli, 627012

A way for everyone to live a happy, healthy and prosperous Life...

About   Contact   Privacy   Login C