04/05/2024
மீண்டும் ஒருமுறை மாவட்டத்தில் கிரிக்கெட் சாம்பியனாக மகுடம் சூடியது அட்டாளைச்சேனை.
2024 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்டத்திலான கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான TriStar sports club மாவட்ட போட்டிக்கு தெரிவடைந்தது.
அதனை தொடர்ந்து அட்டாளைச்சேனை மண்ணில் இருந்து ஒரு சிறந்த வீரர்களை கொண்டு மாவட்ட போட்டிக்கு சென்று அனைத்து பிரதேச அணிகளையும் வீழ்த்தி மாவட்ட சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இவ் வெற்றிக்காக உழைத்த அனைத்து வீரர்களுக்கும், TriStar sports club நிருவாகத்தினருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
04/05/2024
மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டி -
2024
"பிரம்மாண்ட இறுதிப் போட்டி இன்று."
(அம்பாறை மாவட்டnம்)
FOOTBALL
மாவட்ட மட்ட உதைப்பந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி ஆட்டம் இன்று அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
இப்போட்டியில்
அட்டாளைச்சேனை உதைப்பந்தாட்ட கழகமும்
அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட கழகமும்
ஒன்றை ஒன்று எதிர்த்து மோத உள்ளன.
Addalaichenai F.C
Vs
Akkaraipattu F.C
அரை இறுதியில் அதிரடி ஆட்டம் காட்டி கல்முனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேரிய எமது அட்டாளைச்சேனை உதைப்பந்தாட்ட கழகம் இறுதிப் போட்டியிலும் அதேபோன்று சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிக்காட்ட உற்சாகமூட்ட விளையாட்டு ரசிகர்களை அன்போடு அழைக்கிறார்கள்..
இந்த மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் எமது பிரதேசத்தில் பல கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுப்பர் சொனிக் சோபர் அஷ்ரப் ட்ரை ஸ்டார் ஒலுவில் போன்ற கழகங்களை பிரதிநிதித்துவப்படுகின்ற சிறந்த வீரர்கள் எமது பிரதேசத்தின் வெற்றிக்காக இன்று பல பரீட்சை நடாத்த இருக்கின்றார்கள். அவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.
28/02/2024
CONGRATS SOBER SPORTS CLUB
26/10/2023
இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் மிக விமர்சையாக மீண்டும் ஒரு இரவு நேர கரப்பந்தாட்ட போட்டி ஒழுங்கு செய்யப்படவுள்ளது.
28/09/2023
அல்ஹம்துலில்லாஹ்
இன்று இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை அஷ்ரஃப் இளைஞர் கழகம் சார்பாக 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் போட்டியில் S M . சிபாக் பரிதி வட்டம் எறிதல் நிகழ்வில் 1ம் இடத்தினையும் குண்டு போடுதல் நிகழ்வில் 2ம் இடத்தினையும் பெற்றதோடு MRM.Sujail குண்டு போடுதல் நிகழ்வில் 03 இடத்தினையும் MRM. Mumthas முப்பாய்தல் போட்டியில் முதலாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
20 வயதினருக்கு உட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் ஹனிப் மற்றும் சிபாக் மூன்றாவது இடத்தினை பெற்றனர்.
போட்டியில் பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
10/09/2023
மாஷா அல்லாஹ்
புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே.
இன்று அட்டாளைச்சேனை கடற்கரையில் இடம்பெற்ற கடற்கரை கரப்பந்தாட்ட மாவட்ட போட்டியில் முதல் தடவையாக அட்டாளைச்சேனை சார்பாக கலந்து கொண்ட எமது கழகம் ( Ashraff Youth Club ) சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொண்ட எமது கழக வீரர்களுக்கும் , எமது கழக அங்கத்தவர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
09/09/2023
இன்று நடைபெற்ற மாவட்ட மட்ட கபடி போட்டியில் எமது ஊர் சார்பாக போட்டியிட்ட எமது கழகம் இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளது.
மாஷா அல்லாஹ்
பங்கு பற்றிய அனைத்து வீரர்களுக்கும்,
போட்டிக்கு செல்ல உதவிய தயவந்தவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்
06/09/2023
நாங்கள் அணிந்திருக்கும் கழக ஆடைகள் தான் வேறு .
எங்கள் கழகங்களுக்கு இடையிலான போட்டி எமது ஊருக்கு உள்ளே மாத்திரம் அன்றி வெளியே நாங்கள் அட்டாளைச்சேனையான் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
இன்னும் பல வெற்றிகளைப் பெற வல்ல இறைவன் துனைபுரிவான்.
30/08/2023
கபடி என்றால் Ashraff Sports Club - தான் என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து காட்டிய எம் இளம் சிங்கங்கள்.
கபடி கபடி கபடி