27/12/2022
இம்முறை மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் இரட்டைத் தங்கம் வென்ற பாஸிஹ் அஹமட் மற்றும் 4×100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற எமது கழகத்தின் கனிஷ்ட வீரர்களும் கௌரவிக்கப்பட்டதோடு இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஹாதி அஹமட் மற்றும் அஸ்ஜத் அஹமட் ஆகியோரும் அதிதிகளால் கௌரவம் வழங்கப்பட்டனர்.
25/12/2022
#அஷ்ரஃப்_விளையாட்டுக்_கழகத்தின்_புதிய_நிருவாக_தெரிவும்_பொதுக்கூட்டமும்
அட்டாளைச்சேனை அஷ்ரஃப் விளையாட்டு கழகத்தின் 2023/2024ம் ஆண்டிற்கான புதிய நிருவாக தெரிவும் பொதுக்கூட்டமும் நேற்றைய தினம் 2022.12.24ம் திகதி அட்டாளைச்சேனை அல்/அர்ஹம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
விளையாட்டு உத்தியோகத்தர் M.H.M.அஸ்வத் அவர்களின் பிரசன்னத்துடன் கழகத்தின் தலைவர் S.M.M.நிஸாம் JP அவர்களின் தலமையில் ஆரம்பமானது.
கழகத்தின் செயலாளர் V.அர்ஷாத் அவர்களால் கடந்தாண்டு கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதோடு பொருளாளர் S.H.S.றஸாத் அவர்களால் கணக்கறிக்கையும் வாசிக்கப்பட்டு சபையோரால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிகழ்வின் ஓர் அங்கமாக 2022 ம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 4×100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற கழகத்தின் கனிஷ்ட வீரர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் #பளு_தூக்குதல் மற்றும் #கட்டழகர் ஆகிய இரு போட்டிகளிலும் இரட்டைத் தங்கம் வென்ற கழகத்தின் சிரேஷ்ட வீரர் #பாஸிஹ்_அஹமட் அவர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
இம்முறை #பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட #ஹாதி_அஹமட் மற்றும் #அஸ்ஜத்_அஹமட் ஆகியோரும் அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டு வாழ்த்தப்பட்டனர்.
அதன் பின்னர் 2023/2024ம் ஆண்டிற்கான புதிய நிருவாக தெரிவு பின்வருமாறு இடம்பெற்றதோடு இராப்போஷனத்துடன் பொதுக்கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
இக்கூட்டத்திற்கான #பூரண_அனுசரணையும் (இரவு சாப்பாடு + நினைவு சின்னங்கள்) #கழகத்தின்_சிரேஸ்ட_உறுப்பினர், #பிரபல_சமூக_சேவகர் ௌஸான் அவர்களினால் வழங்கப்பட்டது.
தலைவர்: SMM.Nizam JP
செயலாளர்: V.Arsath
பொருளாளர்: ACM.Rifkan
உப தலைவர்: MAM.Sajath
உப செயலாளர்: S.Rasath
முகாமையாளர்: Faseeh Ahamed
Cricket:- Inshaf Iman
Volleyball:- R.Rifthy
Kabbadi:- S.Asri
Football:- HM.Asthaq
Elle:- S.Safras
Athletic:- A.Hakeem
1.A.Rifas
2.MIM.Sihan
3.A.Fousul Ameer
4.ILM.Macbool
5.ULM.Abdullah
Auditor:- SH.Safeek
14/12/2022
நேற்றைய தினம் வெளியிடப்பட்ட "ஜாமியா நளிமிய்யா" 2023 கல்வியாண்டுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியலின் பிரகாரம்,
எமது அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத்தின் வீரர் எம்.எம்.லயாஸ் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்.
27/08/2022
#தொடரும் #தங்கவேட்டை
தொடர்ச்சியாக இரண்டாவது தங்கப்பதக்கத்தையும் தன்னகப்படுத்திய கிழக்கின் தங்கமகன் பாஸிஹ் அஹமட்
2022ம் ஆண்டிற்கான 47வது தேசிய விளையாட்டு விழாவின் மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக இன்று (2022.08.27)ம் திகதி ஆண்களுக்கான பளு தூக்குதல் போட்டி திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியின் உள்ளக அரங்கில் நடைபெற்றது.
பலம் மிக்க போட்டியாளர்களோடும் பலத்த போட்டிக்கும் இடையில் நடைபெற்ற இப்போட்டியில் எமது அட்டாளைச்சேனை மண் (அஷ்ரஃப் விளையாட்டு கழகம்) சார்பாக பங்குபற்றிய கழகத்தின் மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் பாஸிஹ் அஹமட் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்து கொண்டார்.
ஆண்களுக்கான 96Kg எடைப்பிரிவில் பங்குபற்றியே இவர் தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டார்.
நீண்டகாலமாக பளுதூக்குதல் மற்றும் உடற்கட்டமைப்பு துறையில் அதிக ஈடுபாடு காட்டி வந்த இவர் இத்துறைகளில் பல வெற்றிகளை பெற்று எமது கழகத்திற்கும் ஊரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதற்கு முன்னராக கடந்த மாதம் நடைபெற்ற ஆண்களுக்கான உடற்கட்டழகர் போட்டியிலும் மாகாண மட்டத்தில் முதன்நிலை பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது அஷ்ரஃப் வி.கழகத்தின் சிரேஷ்ட வீரரான இவர் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.
மேலும் தேசிய மட்ட போட்டியில் சிறப்பான முறையில் செயற்பட்டு சிறந்த பெறுபேற்றினை பெற கழகம் சார்பாக வாழ்த்துகிறோம்.
21/07/2022
*இலவச கருத்தரங்கு*
தரம் 04 மாணவர்களுக்கான இலவச நுண்ணறிவு வினாத்தாள் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2022.07.24) மு.ப.8.00 மணிக்கு நடைபெறும்.
வினாத்தாள் மற்றும் Zoom Class ID என்பன கீழுள்ள ஏதாவது ஒரு குழுமத்தில் அதற்கு முந்திய தினம் பகிரப்படும்.
கீழுள்ள ஏதாவது ஒரு குழுமத்தில் மட்டும் இணையுங்கள்.
Group (1)
https://chat.whatsapp.com/JJtVz4Qfhaw2S9hdiovVS7
Group (2)
https://chat.whatsapp.com/Bv47seMRkrK8wE3LBrTZbi
Group (3)
https://chat.whatsapp.com/JGMWSKj4kQh5nHkrwtzQ4E
16/07/2022
#தங்கம்_வென்றார்_பாஸிஹ்_அஹமட்
விளையாட்டு அமைச்சினால் நடத்தப்பட்ட 2022ம் ஆண்டிற்கான மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வுகளின் ஓர் அங்கமாக #ஆண்களுக்கான_95kg_எடைப்பிரிவில்_உடற்கட்டமைப்பு போட்டி இன்று (2022.07.16) ம் திகதி மட்டக்களப்பு தன்னாமுனை Miyani Institute யில் நடைபெற்றது.
பலத்த சவால்களுக்கு மத்தியில் இடம்பெற்ற இப்போட்டியில் எமது அஷ்ரஃப் விளையாட்டு கழகம் சார்பாக பங்குபற்றிய #கழகத்தின்_மெய்வல்லுனர்_பயிற்றுவிப்பாளர்_பாஸிஹ்_அஹமட் முதலிடத்தைப் பெற்று #தங்கப்பதக்கத்தை சுவீகரித்து மாகாணத்தில் பிரகாசித்த #அஷ்ரஃப்பின்_முதலாவது_தங்க_மகன் எனும் நாமத்தினையும் பதிவு செய்தார்.
நீண்டகாலமாக உடற்கட்டமைப்பு துறையில் அதிக ஈடுபாடு காட்டி வந்த இவர் இத்துறையில் பல வெற்றிகளை பெற்று எமது கழகத்திற்கும் ஊரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எமது அஷ்ரஃப் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரரான இவர் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.
மேலும் தேசிய மட்டப் போட்டியில் சிறப்பான முறையில் செயற்பட்டு சிறந்த பெறுபேற்றினை பெற கழகம் சார்பாக வாழ்த்துகிறோம்.
09/07/2022
அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்
07/07/2022
IPL புலமை மையம் நடத்தும் மாபெரும் இலவச கருத்தரங்கு நாளைய தினம் (2022.07.08) மு.ப.5.45 யிற்கு நடைபெறும்.
அதற்கான வினாத்தாள் கீழே பதிவிடப்படுகிறது.
நாளைய வகுப்பில் கலந்து கொள்ள வேண்டுமாயின் கீழுள்ள வட்ஸ்அப் குழுவில் இணைந்து PDF,Class ID மற்றும் password என்பவற்றை பெற்றுக் கொள்க.
https://chat.whatsapp.com/F1vLFUzBm738u1Cweas9kT
மேலதிக தொடர்புகளுக்கு
0756584350
0740769151
06/07/2022
IPL புலமை மையம் நடாத்தும் மாபெரும் இலவச கருத்தரங்கு
கீழுள்ள ஏதாவது ஒரு குழுமத்தில் இணைந்து Zoom ID மற்றும் Password என்பவற்றை பெற்றுக் கொள்க.
இன்ஷா அல்லாஹ் (2022.07.07) பி.ப.1.00 மணிக்கு வினாத்தாள் மற்றும் Zoom ID மற்றும் password என்பன குழுமத்தில் பதிவிடப்படும்.
Group 01
https://chat.whatsapp.com/DQToVMHa2P92MqPIfUxOVL
Group 02
https://chat.whatsapp.com/EhDQsei9pzG24I1huomSLU
Group 03
https://chat.whatsapp.com/FtqsEvlgKMj18htw5Fm0Po
Group 04
https://chat.whatsapp.com/F1vLFUzBm738u1Cweas9kT
05/07/2022
IPL புலமை மையம் நடாத்தும் மாபெரும் இலவச கருத்தரங்கு
கீழுள்ள ஏதாவது ஒரு குழுமத்தில் இணைந்து Zoom ID மற்றும் Password என்பவற்றை பெற்றுக் கொள்க.
இன்ஷா அல்லாஹ் (2022.07.07) பி.ப.1.00 மணிக்கு வினாத்தாள் மற்றும் Zoom ID மற்றும் password என்பன குழுமத்தில் பதிவிடப்படும்.
Group 01
https://chat.whatsapp.com/DQToVMHa2P92MqPIfUxOVL
Group 02
https://chat.whatsapp.com/EhDQsei9pzG24I1huomSLU
Group 03
https://chat.whatsapp.com/FtqsEvlgKMj18htw5Fm0Po
24/06/2022
*மாபெரும் இலவச கருத்தரங்கு*
கீழுள்ள ஏதாவது ஒரு குழுமத்தில் இணைந்து Zoom ID மற்றும் Password என்பவற்றை பெற்றுக் கொள்க.
நாளை(2022.06.25) பி.ப.1.00 மணிக்கு வினாத்தாள் மற்றும் Zoom ID மற்றும் password என்பன பதிவிடப்படும்.
Group 01
https://chat.whatsapp.com/DQToVMHa2P92MqPIfUxOVL
Group 02
https://chat.whatsapp.com/EhDQsei9pzG24I1huomSLU
Group 03
https://chat.whatsapp.com/FtqsEvlgKMj18htw5Fm0Po