⚽🏆 வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ❤️💐
#சிந்துஜன் -jaffna
#தம்பா-jaffna
#மதிவதனன் -jaffna
#ஜெரின்சன் -mannar
#ஜான்சன் -mannar
#ரிவால்டோ -Kilinochi
2026 ஆம் ஆண்டுக்கான வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கிடையிலான ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, சென். அன்ரனீஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. ⚽🏆
இந்நிலையில் எமது விளையாட்டுக் கழகத்திலிருந்து மூன்று வீரர்கள் யாழ் மாவட்ட அணிக்கும் , இரண்டு வீரர்கள் மன்னார் அணிக்கும், ஒருவர் கிளிநொச்சி அணிக்கும் மொத்தமாக ஆறு வீரர்கள் தெரிவாகியிருப்பது, எமது கழகத்திற்கும் எமது வீரர்களுக்கும் மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ❤️👏
மாவட்ட அணியில் இடம்பிடித்துள்ள எமது வீரர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 💐
இந்தப் போட்டியில் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எமது அன்பான வாழ்த்தும் எதிர்பார்ப்பும். 🏆🔥
#மாவட்ட #அணியில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்! ⚽🏆❤️
🔥 வாழ்த்துக்கள் வீரர்களே👍
St.Mary’s Sports Club Navanthurai-Jaffna
Playing Top tier league game - Champions League
கீரிமலை சிவானந்தா தொடர்
சென் மேரிஸ் vs வடமராட்சி யங் லயன்ஸ்
மேரிஸ் 5- 0 யங் லயன்ஸ்
ஜெரின்சன்-03 ⚽️⚽️⚽️
ரிவால்டோ-01⚽️
எபிரோன்-01⚽️
வாழ்த்துக்கள் வீரர்களே..
கீரிமலை சிவானந்தா தொடர்
சென் மேரிஸ் vs வடமராட்சி யங் லயன்ஸ்
முதல் பாதி
மேரிஸ் 2- 0
கீரிமலை சிவானந்தா தொடர்
சென் மேரிஸ் vs வடமராட்சி யங் லயன்ஸ்
31/08/2026
30/08/2026
சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம்
2025/06/30 தொடக்கம் 2026/08/06 வரை
தேசிய அளவிலான போட்டிகள்
* FFSL சம்பியன்ஸ் லீக் (FFSL Champions League): 4ஆம் இடம்
* FFSL சம்பியன்ஸ் கிண்ணம் (FFSL Champions Cup): சம்பியன்
மாவட்ட மற்றும் மாகாண போட்டிகள் (Provincial& District Tournaments)
* A-1 Media யாழ். கால்பந்து பிரிமியர் லீக் (A1 Media - Jaffna Football Premier League): சம்பியன்
* இரணைமாதா நகர் மீனவர் கிண்ணம் (Iranaimaathanagar Meenavar Kinnam): சம்பியன்
* தெல்லிப்பளை நாமகள் (Thellippalai Namagal): சம்பியன்
தலைவர் கிண்ணம் (Thalaivar Kinnam): இரண்டாம் இடம்
* அராலி சில்வர்ஸ்டார் (Araly Silverstar): இரண்டாம் இடம் (Runners up)
இதர இடங்கள் மற்றும் சுற்றுக்கள் (Other Finishes)
* தூய ஒளி கிண்ணம் (Thooya Oli Cup) - குருநகர் சிங்கிங் பிஷ்: மூன்றாம் இடம் (2nd Runner up)
* ரேஞ்சர்ஸ் கிண்ணம் (Rangers Cup): மூன்றாம் இடம் (2nd Runner up)
* புத்தூர் வீனஸ் கிண்ணம் (Puththur veenus Cup): மூன்றாம் இடம் (2nd Runner up)
* சாவல்கட்டு மகாத்மா சுற்றுப்போட்டி (Saavalkaddu Tournament): மூன்றாம் இடம் (2nd Runner up)
நடப்பு மற்றும் நிறைவடைந்த சுற்றுப்போட்டிகள் (Ongoing & knocked out Group Stages)
* புத்தூர் விக்னேஸ்வரா (Puththur Vignesvara):(Knock-out stage) வெளியேறியது.
* மானிப்பாய் பழைய மாணவர் சுற்றுப்போட்டி (Manipay Old Boys Tournament): குழு நிலைப் போட்டிகளில் உள்ளது (தொடர்ந்து நடைபெறுகிறது)
கீரிமலை சிவானந்தா தொடர்- 3 வது சுற்றுக்குச் தகுதி பெற்றுள்ளது.
* வேரவில் மறவர் கிண்ணம் (Veravil Maravar Kinnam): காலிறுதிப் போட்டியில் தோல்வி
* வலைப்பாடு சுற்றுப்போட்டி (Valaippadu Tournament): அரையிறுதியில் தோல்வி
மேரிஸ் 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு (Mary’s Over 40)
* கலைவாணி மற்றும் சென். ரோக்ஸ் சுற்றுப்போட்டிகள் (Kalaivaniy & St.Rocks Tournament): பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் சம்பியன் பட்டத்தை வென்றது
30/08/2026
🚨🇱🇰⚽ 𝗔𝗧𝗧𝗘𝗡𝗧𝗜𝗢𝗡 𝗔𝗟𝗟 𝗘𝗟𝗜𝗚𝗜𝗕𝗟𝗘 𝗣𝗟𝗔𝗬𝗘𝗥𝗦 𝗟𝗜𝗩𝗜𝗡𝗚 𝗢𝗩𝗘𝗥𝗦𝗘𝗔𝗦 ⚽🇱🇰🚨
𝗨𝟭𝟳 𝗡𝗔𝗧𝗜𝗢𝗡𝗔𝗟 𝗙𝗢𝗢𝗧𝗕𝗔𝗟𝗟 𝗧𝗘𝗔𝗠 𝗦𝗘𝗟𝗘𝗖𝗧𝗜𝗢𝗡 𝗧𝗥𝗜𝗔𝗟𝗦 𝟮𝟬𝟮𝟲
The U17 National Football Team Selection Trials 2026 for players living overseas will be held on 11th, 12th and 13th September 2026 at the Kelaniya Football Training Center Grounds, Kelaniya, from 8.00 a.m. onwards.
Players born in 2010, 2011 or 2012 are eligible to take part in these trials.
📄 Please bring ONE or more of the following documents:
Sri Lankan Passport
Sri Lankan Birth Certificate
Sri Lankan Consular Birth Certificate
⏰ Please be present at the ground by 7.00 a.m.
⚠️ IMPORTANT: Attendance is compulsory on all three days of the trials. No exceptions.
We encourage all eligible Sri Lankan players living overseas to take this opportunity and represent Sri Lanka on the national stage. 🇱🇰⚽
Good luck to all players!
27/08/2026
கீரிமலை சிவானந்தா தொடர்
அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது மேரிஸ்..
சென் மேரிஸ்-03
புங்குடுதீவு சென் சேவியர்-02
ரிவால்டோ ⚽️⚽️⚽️ 03
வாழ்த்துக்கள் வீரர்களே
24/08/2026
#சமனிலை #தவிர்ப்பு #உதைமுடிவில் #தோல்வியை தழுவியது எமது அணி
தலைவர் கிண்ணம் இரண்டாம் இடம்…
வலிகாம லீக் தலைவர் கிண்ணத் தொடரின் இறுதியாட்டத்தில் சென்மேரிஸ் மற்றும் றேஞ்சஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் முழுவதும் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் எந்தவொரு அணியாலும் கோல் எதுவும் பெற முடியாமல் 0–0 என போட்டி சமனிலையில் நிறைவடைந்தது.
இதனையடுத்து நடைபெற்ற சமனிலை தவிர்ப்பு உதையில் வெற்றியைப் பதிவு செய்த றேஞ்சஸ் அணி, வலிகாம லீக் தலைவர் கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது!
👏 வாழ்த்துக்கள் #றேஞ்சஸ்
பாராட்டுக்கள் #சென்மேரிஸ்!
சிறப்பான தொடரை நடாத்தி முடித்த வலிகாமம் லீக்கிற்கு எமது வாழ்த்துக்கள் 🎉
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Jaffna
40000