08/02/2026
ஒரு தேசம் அதன் பழம் பெரும் வீரம் உடைந்து போக விட கூடாது. சற்று விழுந்தாலும் உடனே எழ வேண்டும்
இளம் கன்றுகளை சரியான வழிக்கு செல்ல வைத்து தாயகம் பெயரை காக்க வைப்பதற் காகவே இந்த உற்சாக கரகோசம்.
எந்த ஊக்குவிப்பும் இன்றி களத்தில் நின்று தாக்கிய இரண்டு பெரும் சிங்கங்கள் இன்று சாதாரண ஓரிரண்டு 4,6 களுக்கு வெளியில் கை தட்டல் கொடுப்பதெல்லாம் எதற்காக தெரியுமா!
🇱🇰 இந்த நாடும் கொடியும் அதன் மக்களும் கலங்கிட கூடாது என்பதற்காக
Thank you legends Sana&Mali🥺🫂❤️
08/02/2026
பெரிய அணியை வீழ்த்தவிட்டு வீராப்பு பேச வரவில்லை. டீம் இன்னும் கற்க வேண்டியுள்ளது.
காயம் என்றாலும் பரவாயில்ல ஒற்றைக் காளோடும் சரி தன் அணிக்காக போராடுவேன் தாயகம் பெயரை காப்பேன் எனும் வீர நெஞ்சோடு பந்தெய்தான் Wanindu Hasaranga 🥺🫂
காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு
கர்ச்சனையை விட வலிமை நிறைந்தது
🇱🇰❤️
06/02/2026
விளையாடும் வீரர்களை பார்க்குறமோ இல்லையோ சங்கா சாரோட குரல கேக்குறதுக்கே இங்க மேட்ச் பார்க்க ரெடி ஆகிட்டோம்.
தல commentary கு வந்தா பேச்செல்லாம் style தான். கேட்டுகிட்டே இருக்கலாம். கூடவே Mathews ம் புதுசா வர்ராரு அதுவும்
ரொம்ப exciting தான் 😍
05/02/2026
அம்பாறை என்பது கிழக்கின் ஒரு அடையாளம்.
அதில் கிரிக்கெட் துறையில் தேர்ச்சி பெற்றவர்களோ ஏராளம். தேசியம் நினைத்தால் இங்கிருந்து தூக்கி எடுக்கலாம் வீரர்கள் தாராளம் .
அதற்கு ஒரு சிறிய சான்று தான் தேசிய மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியில் இரண்டாவது இடம் வென்றது நம் பெருமைமிகு மண் அம்பாறை..
வடக்கிலும் கிழக்கிலுமிருந்து நம் இளம் முத்துக்களை வாரியெடுங்கள்.
தேசியமே முழு நேசம் கொள்ளும் சர்வதேசம் நம்மைப் பார்த்து அச்சம் கொள்ளும்..
🇱🇰 AMPARA 🏏BOYS 🔥
04/02/2026
🏏இந்த 2026 T20 உலகக் கிண்ணம் இலங்கை கிரிக்கெட்டிற்கு மிகப் பெரும் சவாலாக அமையும். இங்கிலாந்துடனான தொடர் தோல்வி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.
கடந்த காலங்களைப் போல தோல்வியுற்றால் சிறிது காலத்தின் பின்னர் மறந்து விட்டு மீண்டும் ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நிலைப்பாடு, எண்ணம் இந்த முறை சாத்தியமாகாது. காரணம்
இது சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகள். ஒன்று அரையிறுதி /காலிறுதி சுற்றுக்காவது தேர வேண்டும்.
வழமையாக சொதப்புவதைப் போல குறைந்த ஓட்டங்களோடும் அடுக்கடுக்காக விட்டுட்டுக்களை விடும் நிலையிலே இக்கதை தொடருமாகயிருந்தால் Sri Lanka Cricket ரசிகர்கள்,மக்கள் திரள்கள் மூலம் மிகப் பெரும் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த காலங்களில் ஆட்சியாளர்களை மக்கள் எப்படி துரத்தி அடித்தார்களோ அதேபோல் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தையும் , வீரர்களையும் சமூக வலைதளங்களின் மூலமும் நேரடி எதிர்ப்பு போராட்டங்களினாலும் எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடுவார்கள் என்பதை இப்போதே சில காணொளிகளை வைத்து கணிக்க முடிகிறது.
வீணாக எதிர்ப்பதற்கு ரசிகர்களுக்கு எந்த தேவையும் கிடையாது. ஆனால் அந்த வழியை தானாகவே இலங்கை கிரிக்கெட் செய்யுமாக இருந்தால் அதற்கு அவர்களேயன்றி வேறு காரணங்களில்லை..
ஆக இந்த T20 உலகக் கிண்ணம் இலங்கை கிரிக்கெட்டின் நீடிப்புக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்பதே உண்மை.
04/02/2026
வெறுப்பால் நிரம்பிய நேற்றிரவு!
எங்கு பார்த்தாலும் திட்டித்தீர்க்கும் வசனம்தான்..
அதனை ஏற்கிறோம் ..
வெட்கித்து தலை குணிகிறோம்.
விதியின் மேல் பழி போட்டு கடக்க முடியாது, இவை முழுக்க முழுக்க உங்களின் இயலாமை, உங்களின் பொடு போக்கான ஆட்டம்.
ஆனாலும் உங்களின் முகங்களும் உறங்கியே கிடந்தன அதனை நினைத்தும் வருந்துகிறோம்...
இது கிரிக்கெட் தனிநபர் விளையாட்டல்ல நாட்டின் வெளிச்ச விளையாட்டு..
உங்ளுக்கு சாதாரண தோல்வியாக இருக்கலாம்..
ஆனால் ஓர் ஓரத்தில் பலகை 🏏மட்டையுடன் விளையாடும் இன்றைய சிறுவன் அடுத்த நாட்டு வீரனையோ நாட்டையோ நேசிக்க வழி செய்கிறீர்கள்...
நாட்டின் பெயரும், அதன்🇱🇰 கொடியும் அடிக்கடி மேலுயர இக் கிரிக்கெட்டின் வெற்றிகளின் மூலம்தான்..
மற்றவர்களுக்கு எப்படியோ- எங்களைப் போன்றவர்களுக்கு இந்தக் கிரிக்கெட்தான் இலங்கையை பன்மடங்கு நேசிக்க காரணம்..
Feb -04 சுதந்திர தினம்...
நாட்டை நேசிக்கிறோம் ஏதோ பிடிப்பில்லாத மனதோடு 💔 அது நேற்றைய சம்பவமாக இருக்கலாம்..
தோல்வியில் உங்களை நாங்கள் ஒரு போதும் வெறுத்ததில்லை போராடி தோற்றுப் போங்கள் வெற்றியாக நினைத்து தூக்கிப் பிடிக்கிறோம். தயவு செய்து வெட்கித்து தலை குணியும் தோல்வியை தாங்களாகவே எடுத்து பையில் போடாதீர்கள்...
இங்கு பலரை எதிர்த்து, தாயகத்தை விட்டுக் கொடுக்காமல் உங்களை அடிக்கடி நம்பி நிற்கிறோம்.....
ஆம் நிச்சயமாக உங்களுடன் மிகுந்த கோபத்திலிருக்கிறோம்..
ஆனால் ஒரு போதும் உங்களை வெறுக்க முடியவில்லை...🥹
காரணம் நாங்கள் அன்பு கொண்டது இன்று நேற்று அல்ல...
உங்களின் Head coach தொடக்கம்
IPL அணிகளுக்கெல்லாம் Head coach - Director of cricket களாக புகழ் பெற்றிருக்கிறார்களே அவர்களால் மலர்ந்த தூய்மைக் காதல் இது...🇱🇰🏏❤️🩹
தயவு செய்து இனிமேலும் கலங்கம் செய்யாதீர்கள்...
மீண்டு வாருங்கள்
உலகக் கோப்பை இல்லா விட்டாலும் பரவாயில்லை உலகதர ஆட்டத்தையாவது எதிரணிக்கு காட்டுங்கள் போதும்...
🥹🙏🫂
11/01/2026
யார்ரா நீங்க...
நேத்து வெறுப்பா இருந்திச்சி 😏இன்னைக்கி ரொம்ப பிடிச்சி போகுது. 🤗
ஓஹ் இதுதான் அந்த தேசிய காதலா ❤️🩹சரி பரவால்ல பண்ணி தொலைக்கிறோம் 🫶🇱🇰🏏
11/01/2026
டேய் Liyanage என்ன ஷாட் ரா இது 🧨😍