𝐑𝐚𝐢𝐧𝐛𝐨𝐰 𝐂𝐫𝐢𝐜 𝐓𝐚𝐦𝐢𝐥

𝐑𝐚𝐢𝐧𝐛𝐨𝐰 𝐂𝐫𝐢𝐜 𝐓𝐚𝐦𝐢𝐥

Share

Tamil Cricket News Update, Vedios, Previews & Reviews

19/07/2024

பயங்கரமான ஆளா இருப்பாரோ 😱🥴
Glenn Phillips









23/05/2024

Rajasthan Fans Right now 😀😎😁

23/05/2024

Sanju & Co

23/05/2024

Good Bye! Dinesh Karthik 👋

2️⃣5️⃣7️⃣ Matches
4️⃣8️⃣4️⃣2️⃣ Runs
1️⃣4️⃣5️⃣ Catches
3️⃣7️⃣ Stumping

IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் தினேஷ் கார்த்திக். இந்த சீசன் தொடங்கும் போதே தனது ஓய்வு முடிவை பற்றி தினேஷ் கார்த்திக் சொல்லியிருந்தார். டோனியை போலவே இன்றும் 2 - 3 ஆண்டுகள் வரையில் IPL போட்டிகளில் ஆடக்கூடிய தகுதி இருந்தாலும் கொஞ்சம் முன்னதாகவே ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை விட கிரிக்கெட் வர்ணனையாளராகவே பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அஸ்வின், ரவி சாஸ்திரியை போல ஆழமானதும் நுட்பமானதுமான வர்ணனைகள் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இந்திய அணியிலும் சரி IPL போட்டிகளிலும் சரி அவருக்கேயுரிய தனித்துவமான ஹெல்மெட் எப்போதும் ரசிகர்கள் மனதிலே ஆழமான பதிந்திருக்கும் அடையாளம் எனலாம்.

டோனிக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் உலகிலே நம்பகமான ஒரு பினிஷராக குறிப்பிட்டு சொல்லக்கூடியவராக தினேஷ் கார்த்திக் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்னை நிரூபித்திருக்கிறார். 2018 இல் இலங்கையில் இடம்பெற்ற Nidahas Trophy தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் பினிஷிங் காலத்தில் அழியாத காவியமாக பதிந்திருக்கிறது. ஆரம்ப காலங்களில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமில்லாமல் இந்திய அணியிலும் பல துரதிர்ஷ்டங்களால் நிரந்தர இடமில்லாமல் தவித்தவர். தற்போது ரசிகர்கள் மத்தியிலே தனக்கென ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கிறார். IPL போட்டிகளில் இருந்து ஒரு வீரராக விடை பெற்றாலும் கூட வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்ஸ் 2025 IPL தொடரிலிருந்து ஆரம்பமாக காத்திருக்கிறது.

🖋️ Rain Bow Cric Tamil

22/05/2024

நினைச்சேன் சிரிச்சேன் 😃😁😆

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் T-20 லீக் போட்டிகளுக்குமான ரசிகர்களுக்கிடையேயான வித்தியாசம் மிகப் பெரியது சர்வதேச போட்டிகளின் போது ஒரு அணியின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் IPL போன்ற T-20 லீக் போட்டிகளின் போது தங்களுக்கு பிடித்தமான தேசிய அணியின் வீரர்கள் யாருமே இல்லாத லீக் அணியின் ரசிகர்களாக கூட இருக்கலாம் அதிலே தப்பு ஏதும் கிடையாது. ஆனால் இப்போது இருக்கின்ற நிலமை ரொம்பவும் வித்தியாசமானது. T-20 லீக் போட்டிகளின் போது தாங்கள் ஆதரவளிக்கும் T-20 லீக் அணியின் மீதான மோகம் காரணமாக தங்களுக்கு பிடித்தமான தேசிய அணியின் வீரரை மிக மோசமாகவும் கீழ்த்தரமாகவும் தூற்றி கொண்டாடுவார்கள். இதை கூட கடந்து போய் விடலாம் ஆனால் திரும்பவும் தேசிய அணி என்று வரும்போது தாங்கள் கழுவி ஊற்றிய அதே வீரர்களை கடவுளை விட ஒரு படி மேலே வைத்து கொண்டாடுவார்கள். இது தான் ரொம்ப கொடுமையான விஷயம். பொதுவாக ஆசிய நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் தான் இதில் முடி சூடா ராஜாக்கள்.

இந்த கழுவி ஊற்றல்கள் + கொண்டாட்டங்கள் எல்லாம் ஸ்டார் பிளேயர்களை மையப்படுத்தி நடைபெறுவது எல்லாவற்றையும் விட வேதனையானது. ஒரு சிலரின் குண இயல்பு எப்போதும் மாற்ற முடியாதது. விராட் கோஹ்லியின் இயல்பான குணம் ஆக்ரோஷம். தனது அணி வெற்றி பெறும் போது அவர் அதனை கொஞ்சம் அதிகமாக வெளிக்காட்டுகிறார். இதை தவறு என்று போர்க்கொடி தூக்குகின்ற நம்மவர்கள் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - இங்கிலாந்து, இந்தியா - அவுஸ்திரேலியா, இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டிகளின் போது இதை விட பலமடங்கு கூடுதலான ஆக்ரோசத்தை விராட் கோஹ்லியிடம் எதிர்பார்க்கிறார்கள். இன்று கோலியின் தோல்வியையும் அன்று ஹர்திக் பாண்டியாவின் தோல்வியையும் கொண்டாடி மகிழ்பவர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். T-20 உலகக்கிண்ணம் தொடங்கியதும் இந்த பச்சோந்திகள் கோலியையும் பாண்டியாவையும் தோளில் தூக்கி வைத்து கொண்டாடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ 😏🤷

27/03/2024

Shivam Dube ருத்ர தாண்டவம்; சென்னைக்கு இரண்டாவது வெற்றி!



















26/03/2024

RCB Vs PBKS Match Review
பெங்களூரு முதல் வெற்றி; பஞ்சாப் முதல் தோல்வி!



















Royal Challengers Bengaluru Vs Punjab Kings

23/03/2024

CSK Vs RCB Match Review
சென்னை + ருத்ராஜுக்கு முதல் வெற்றி!



















22/03/2024

IPL 2024: CSK Team Preview
ஆறாவது கிண்ணத்தை வெல்லுமா சென்னை?
சென்னை அணியின் பலம், பலவீனம் என்ன?





















22/03/2024

IPL 2024: RCB Team's Preview


















Want your business to be the top-listed Gym/sports Facility in Liverpool?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


South John Street/Wall Street
Liverpool
L18LT