தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கம்

  • Home
  • India
  • Chidambaram
  • தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கம்

தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கம் அரசு வேலையை எதிர்ப் பார்த்து காத்தி?

05/09/2024
02/07/2023

பெறுதல்.
மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள்.
தலைமைச் செயலகம்,
சென்னை.
தமிழ்நாடு- 600009

பொருள்:
உடற்கல்வி ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டுதல் சார்பு:-

அண்புடையீர் வணக்கம்.

உடற்கல்வி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 25 ஆண்டுகளாக பதிவு மூப்பு அடிப்படையில் பணியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றோம்.எனவே உடற்கல்வி ஆசிரியருக்கான ஆசிரியர் தகுதி தேர்வு முறையை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டுகிறோம்.

விளையாட்டு வீரராகிய நாங்கள் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் எங்களுக்கு படிக்கின்ற காலம் மிகவும் குறைவானது அதனால் நாங்கள் விளையாட்டில் மட்டும் தான் மிகத் திறமை மிக்கவர்களாக இருப்போமே தவிர எங்களுக்கு படிப்பதற்கு குறைவான காலமே இருக்கின்ற காரணத்தினால் தாங்கள் தேர்வு வைப்பது என்பது விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.விளையாட்டு வீரர் அல்லாதவர்கள் விளையாட்டு தெரியாமலேயே பாடத்தை மட்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உடற்கல்வி ஆசிரியராக தேர்வாகி வந்துவிடும் வாய்ப்பு உண்டு.

தேர்வு எழுதுவதற்கு விளையாட்டு வீரராக இருக்க அவசியமில்லை. ஒரு மாணவனுக்கு பயிற்சி கொடுக்க விளையாட்டு வீரர் தான் சரியான பயிற்றுனராக இருப்பாரே தவிர புத்தகத்தை படித்து தேர்ச்சி பெறுகின்றவர் அவ்வளவு பொருத்தமாக இருக்க மாட்டார்.இதனால் மாணவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு இருக்கின்றது. எனவே இந்த தேர்வு முறை என்பது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொருத்தமற்றது. பதிவு மூப்பு முறையில் தேர்வு செய்யும்போது விளையாட்டு வீரர்கள் அனைவரும் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டை கற்றுக் கொடுக்க ஏதுவாக இருக்கும்.

எனவே உடற்கல்வி ஆசிரியர்களின் பணி நியமனதிற்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமாய் தமிழக முதல்வர் அவர்களை, தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்களின் சார்பில் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

28/05/2022
22/05/2022

உடற்கல்வி ஆசிரியர்களின் அவசியம் குறித்து காணொளி

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன்===================================== கீழ்  கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ...
14/05/2022

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன்
=====================================

கீழ் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தகவல் கேட்கப்பட்டது.

தமிழக அரசு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வு முறையை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டி கோரிக...
21/04/2022

தமிழக அரசு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வு முறையை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டி கோரிக்கை. சிதம்பரத்தில் ஹோட்டல் சாரதராம் 20/4/2022 நேற்று இரவு 10 மணிக்கு மேல் மதிப்பிற்குரிய. முனைவர்.தொல்.திருமாவளவன்,தலைவர்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அவர்களை சந்த்தித்து நம் கோறிக்கை மனுவை கொடுத்து எடுத்துக் கூறியபோது.இதில் மாநில தலைவர் அ.கலைச்செல்வன் மாநில பொருளாளர் மணிகண்டன், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், தினேஷ்,பாக்யராஜ்,பிரபாகரன்,கந்தவேல்,
மற்றும் பலர் உடனிருந்தனர்.

மதிப்பிற்குரிய. ஜீ.கே.வாசன்,தலைவர்,தமிழ் மாநில காங்கிரசு கட்சி,அவர்களுக்கு நன்றிகள்:-===================================...
16/04/2022

மதிப்பிற்குரிய. ஜீ.கே.வாசன்,தலைவர்,தமிழ் மாநில காங்கிரசு கட்சி,அவர்களுக்கு நன்றிகள்:-
==========================================

தமிழ்நாடு பதிவுமூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க கோரிக்கையை ஏற்று 25 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதிவுமூப்பு அடுப்படையில் பனி நியமனம் வழங்க வேண்டும் என அறிக்கையிட்டு ஆதரவு அளித்த தமிழ் மாநில காங்கிரசு கட்சி தலவர் உயர்திரு. ஜீ.கே.வாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Chidambaram
608001

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share