Connecting for friends

Connecting for friends

Share

Enjoy every moment

29/01/2024

🌱🌱🌱..

06/07/2022

ஆடிபட்டத்திற்கான 100 ரகமான விதைகள் தொகுப்பு 100 variety seeds combo pack for aadipattam

நாட்டுதக்காளி tomato tamilnadu
காசி தக்காளி kashi tomato
காட்டுதக்காளி Cherry tomato
பலவகை தக்காளி tomato mixed
கொடி தக்காளி tomato vine
உருட்டு தக்காளி tomato round
வெள்ளை உருட்டு கத்தரி white round brinjal
பச்சை வரி கத்தரி green striped brinjal
ஊதா உருட்டு கத்தரி sevanthampatti brinjal
ஊதா வரி கத்தரி blue striped brinjal
பலவகை கத்தரி brinjal mixed
சம்பா மிளகாய் chilli long
காந்தாரி மிளகாய் bird eye chilli
நெய் மிளகாய் ghee chilli
குண்டு மிளகாய் chilli round
பச்சை வெண்டை green okra
பால் வெண்டை white short okra
பருமன் வெண்டை star okra
சிவப்பு வெண்டை red okra
பச்சை உருட்டு வெண்டை green round okra
கொத்து வெண்டை cluster okra
ஊசி வெண்டை sharp okra
பொம்மிடி வெண்டை bommidi okra
யானைதந்த வெண்டை elephant tusk okra
மலை வெண்டை hill okra
சுனை மர வெண்டை tree okra

மாட்டுகொம்பு வெண்டை cowhorn okra
சின்ன வெங்காயம் onion small
செடிகாராமணி bush cowpea
வரிகாராமணி cowpea striped
தம்பட்டை அவரை jack beans
பலகிளை கொத்தவரை cluster beans
முள்ளங்கி வெள்ளை radish white
செடி பீன்ஸ் bush beans
கொடி பீன்ஸ் 2 வகை beans vine 2 variety
பட்டர் பீன்ஸ் 2 வகை butter beans 2 variety
கேரட் 2 வகை carrot 2 variety
பீட்ரூட் beetroot
நீள பாகல் bitter gourd long
மிதிபாகல் bitter gourd short
நீளபுடலை snake gourd long
குட்டை புடலை snake gourd short
நீளபீர்க்கன் ridge gourd long
குட்டை பீர்க்கன் ridge ourd short
மெழுகு பீர்க்கன் sponge gourd
சிட்டு சுரை tiny bottle gourd
நீள சுரை long bottle gourd
குடுவை சுரை bottle gourd round large
நீள கழுத்து சுரை bottle gourd long neck
கும்ப சுரை bottle gourd medium round
வாத்து சுரை bottle gourd duck shape
உடுக்கை வடிவ சுரை 8 shape bottle gourd
கருப்பு மொச்சை
பரங்கி 2 வகை pumpkin 2 variety
வெண்பூசணி ashgourd
தர்பூசணி watermelon
வெள்ளரி 3 வகை 3 variety cucumber
கோழி அவரை lablab beans lean
பட்டை அவரை lablab beans broad
சிறகு அவரை winged beans
மூக்குத்தி அவரை clove beans
பசுமஞ்சள் turmeric
முருங்கை drumstick
நாட்டு பப்பாளி papaya
மரதுவரை toor dall
நாட்டு ஆமணக்கு castor
அரைக்கீரை
சிறுகீரை
தண்டுகீரை
பருப்புகீரை
பாலக்கீரை
முளைக்கீரை
புளிச்சைகீரை 2 வகை
கொத்தமல்லி
காசினி கீரை
சக்ரவர்த்தி கீரை
தாமரை
பூனைக்காலி 2 வகை
சங்குப்பூ
திருநீற்றுப்பச்சிலை
துளசி
செண்டுமல்லிபூ
கண்டங்கத்தரி
நிலாவாரை
சதகுப்பை
மூக்கிரட்டை
சுண்டக்காய்
மக்காசோளம்
சூரியகாந்தி
சணப்பை
தக்கப்பூண்டு
மருதாணி
நாட்டு கொய்யா
நாட்டுமாதுளை
விளாம்பழம்
பெருநெல்லி

விதைகள் தேவைப்படும் நண்பர்கள் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். 100 ரகமான விதைகளின் தொகுப்பு தேவை என செய்தி அனுப்பவும்.

நன்றி
பரமு, ஒட்டன்சத்திரம்.
Aadhiyagai Seedsavers

24/03/2022

திருவண்ணாமலை நண்பர்களுக்கு வணக்கம்..

நமது பாரம்பரிய காய்கறி விதைகள் இன்றும் நாளையும் திருவண்ணாமலையில் கிடைக்கும்..
தேவைப்படும் நண்பர்கள் +917339196773-திருமலைசாமி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.

நன்றி,
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
24.3.22

Photos from Connecting for friends's post 13/03/2022

பாரம்பரிய விதை திருமண தாம்பூல பரிசு Traditional Seeds Return Gift
https://youtu.be/8an6-HJbNU4

நண்பர்களுக்கு வணக்கம்..
திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு... அதில் வெற்றிலை பாக்குடன் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர். சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது. அதேபோல திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கடந்த 7 வருடங்களாக திருமணங்களுக்கு மரபு விதை பரிசுகளை வழங்கி வருகிறோம். நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது.. நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 7 நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதைகள் தருகிறோம்.
திருமணம், வளைகாப்பு, புதுமனை புகுவிழா, தொழில் தொடங்கும் விழா, ஊர் திருவிழா என பல்வேறு நிகழ்வுகளுக்கு மரபு விதைகளை பகிர்கின்றோம். இதன் மூலம் ஒரே சமயத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் விதைகள் சென்றடைகின்றன. விதைகள் பெற்ற நண்பர்கள் விவசாயிகளாக இருப்பின் நிலங்களில் பயிரிட்டு விதைகளை காக்கின்றார்கள். நகரங்களில் இருப்போர் வீடுகளிலும் மாடிகளிலும் தோட்டம் அமைத்து தன் குடும்பத்திற்கான காய்கறிகளை உற்பத்தி செய்வதோடு விதைகளையும் காக்கின்றனர். மரபு விதைகள் அனைவருக்கும் விதைகளாக சென்றடைவதோடு மட்டுமன்றி விதைகளை காக்க வேண்டுமென்ற விழிப்புணர்வையும் விவசாயம் செய்யாதவர்களையும் சென்றடைகிறது.

இன்றைய சூழலில் வீடுகளில் தோட்டம் அமைத்து தன் தேவையை பூர்த்தி செய்யும் வழக்கம் பரவலாகி வருகிறது. பாரம்பரிய ரக விதைகள் கையில் கிடைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அதே சமயம் ஒரு வீட்டிற்குள் இவ்விதைகள் போகும்போது, விதைகள் இருக்கிறதே..! நம் வீட்டிலும் தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும். இவ்வாறு பல்வேறு காரணங்கள் கருதி தற்போது மரபு ரக விதைகளை கொண்ட தாம்பூல பைகளை வழங்கி வருகிறோம். தங்களுடைய வீட்டின் நிகழ்வுகளிலோ நண்பர்களுக்கோ பரிந்துரை செய்து இந்த விதைகள் அனைவருக்கும் பரவலாக்க முன்வருமாறு அழைக்கின்றோம்..

நன்றி,
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
வாட்ஸ்அப் +918526366796
_______________________

https://youtu.be/8an6-HJbNU4

Saving seeds helps to improve agricultural biodiversity & helps farmers find varieties of crops that grow better in different regions, especially as the impacts of climate change become evident.
In our tradition, we offer return gift to our relatives and friend who attended the wedding. It’s not only tradition, but there is a science behind it. Our ancestors gave a bag of Beetle leaves, Nuts and Coconut as return gift. The beetle leaves/Nuts help in digestion and Coconut helps to drive away the tiredness of travelling.
Nowadays saplings are given as return gift for many of the functions. As per request of our friends, we started sharing the native seed bags as return gift since 2015. From 2014, native seeds are collected, multiplied and shared to people who need it.
Many of them asked seeds for Marriages, farmer's events, Birthday parties, birthday gifts to classmates, House warming ceremonies, village festivals, company functions and events, baby shower functions, get together events, varalakshmi pooja and many others. Some people asked seeds for gifting to their village farmers. By this gift our native seeds reach many hands.
Our aim is to initiate people to start kitchen garden and to keep our native seeds in rotation. By this our native seeds reach many hands. Not only farmers, it’s all our duty to save our indigenous seeds.
Nowadays many have started terrace gardening, this will help them to plant native seeds and those who haven’t started yet may get interest when they have seeds in hand. Based on all these good cause, we have started to provide seed bags as return gift who asked for.
Through this seed gift, we are sharing native varieties of tomato, brinjal, bhendi, leafy veggies & some gourd varieties. Friends those who would like to avail this, can give 7 days prior notice, this will help us to supply as per your need and wish.
Wish you all the best...

Further enquiries
Whatsapp to +918526366796

Regards,
Aadhiyagai Traditional Seedsavers
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

10/11/2021

பாரம்பரிய விதை திருமண தாம்பூல பரிசு Traditional Seeds Return Gift

நண்பர்களுக்கு வணக்கம்..
திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு... அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது..பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர்.. சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது.. அதேபோல நகரப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கொடுக்கலாம் என நிறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த சில வருடங்களாக திருமணங்களுக்கு மரபு விதை பரிசுகளை வழங்கி வருகிறோம். நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது.. நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 7 நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதைகள் தருகிறோம்.
2014 ஆம் ஆண்டு முதல் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம். சேகரிப்பது 5 விதையோ 10 விதையோ தோட்டத்தில் விதைத்தால் மண்ணும் மழையும் பல மடங்கு விதைகளை திருப்பி கொடுத்தன.. அவ்வாறு தோட்டத்தில் கிடைத்த விதைகளை மரபு விதைகள் கேட்போருக்கு 10,20 விதைகளாக கொடுக்கின்றோம். அவ்வாறு வாங்கி செல்லும் நண்பர்கள் அவர்கள் தேவை போக மீதமுள்ள விதைகளை பகிர்கின்றனர். இவ்வாறு விதைகளை பகிர்ந்து வரும் சூழலில் நிறைய நண்பர்கள் தங்களுடைய வீட்டில் நடக்கும் திருமணம், வளைகாப்பு, புதுமனை புகுவிழா, தொழில் தொடங்கும் விழா, ஊர் திருவிழா என பல்வேறு நிகழ்வுகளுக்கு அவ்வபோது விதைகளை கேட்டதை தொடர்ந்து "தாம்பூல விதைப்பைகள்" என்ற பெயரில் மரபு விதைகளை பகிர்கின்றோம். இதன் மூலம் ஒரே சமயத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் விதைகள் சென்றடைகின்றன.. விதைகள் பெற்ற நண்பர்கள் விவசாயிகளாக இருப்பின் நிலங்களில் பயிரிட்டு விதைகளை காக்கின்றார்கள். நகரங்களில் இருப்போர் வீடுகளிலும் மாடிகளிலும் தோட்டம் அமைத்து தன் குடும்பத்திற்கான காய்கறிகளை உற்பத்தி செய்வதோடு விதைகளையும் காக்கின்றனர். மரபு விதைகள் அனைவருக்கும் விதைகளாக சென்றடைவதோடு மட்டுமன்றி விதைகளை காக்க வேண்டுமென்ற விழிப்புணர்வையும் விவசாயம் செய்யாதவர்களையும் சென்றடைகிறது.. தொடர்ந்து இந்த மரபு விதை பரவலாக்கும் பணியில் எங்களை ஈடுபடுத்திக்கொள்கிறோம். தங்களுடைய வீட்டிலோ, நண்பர்கள் உறவினர்கள் வீட்டிலோ, ஏதேனும் ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தால் நிகழ்விற்கு வரும் நண்பர்களுக்கு மரபு விதைகளை பரிசாக அளியுங்கள்.தாம்பூலப்பைகளில் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கொடி காய்கறிகள், கீரைகள் என பத்து ரக விதைகள் கொடுக்கின்றோம். தேவைப்படும் அளவில் பெற்றுக்கொள்ளலாம்.

நாம் சேமித்து வைத்திருக்கும் நாட்டு ரக விதைகளை தாம்பூல பைகளில் கொடுக்கலாம். அது நிறைய மக்களுக்கு உடனடியாக போய் சேரும்.இன்றைய சூழலில் வீடுகளில் தோட்டம் அமைத்து தன் தேவையை பூர்த்தி செய்யும் வழக்கம் பரவலாகி வருகிறது. அவர்களுக்கு இந்த நாட்டு ரக விதைகள் கையில் கிடைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அதே சமயம் ஒரு வீட்டிற்குள் இவ்விதைகள் போகும்போது, விதைகள் இருக்கிறதே..! நம் வீட்டிலும் தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும். இவ்வாறு பல்வேறு காரணங்கள் கருதி தற்போது மரபு ரக விதைகளை கொண்ட தாம்பூல பைகளை வழங்கி வருகிறோம். தங்களுடைய வீட்டின் நிகழ்வுகளிலோ நண்பர்களுக்கோ பரிந்துரை செய்து இந்த விதைகள் அனைவருக்கும் பரவலாக்க முன்வருமாறு அழைக்கின்றோம்..

நன்றி,
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
வாட்ஸ்அப் +918526366796
_______________________

Saving seeds helps to improve agricultural biodiversity & helps farmers find varieties of crops that grow better in different regions, especially as the impacts of climate change become evident.
In our tradition, we offer return gift to our relatives and friend who attended the wedding. It’s not only tradition, but there is a science behind it. Our ancestors gave a bag of Beetle leaves, Nuts and Coconut as return gift. The beetle leaves/Nuts help in digestion and Coconut helps to drive away the tiredness of travelling.
Nowadays saplings are given as return gift for many of the functions. As per request of our friends, we started sharing the native seed bags as return gift since 2015. From 2014, native seeds are collected, multiplied and shared to people who need it.
Many of them asked seeds for Marriages, farmer's events, Birthday parties, birthday gifts to classmates, House warming ceremonies, village festivals, company functions and events, baby shower functions, get together events, varalakshmi pooja and many others. Some people asked seeds for gifting to their village farmers. By this gift our native seeds reach many hands.
Our aim is to initiate people to start kitchen garden and to keep our native seeds in rotation. By this our native seeds reach many hands. Not only farmers, it’s all our duty to save our indigenous seeds.
Nowadays many have started terrace gardening, this will help them to plant native seeds and those who haven’t started yet may get interest when they have seeds in hand. Based on all these good cause, we have started to provide seed bags as return gift who asked for.
Through this seed gift, we are sharing native varieties of tomato, brinjal, bhendi, leafy veggies & some gourd varieties. Friends those who would like to avail this, can give 7 days prior notice, this will help us to supply as per your need and wish.
Wish you all the best...

Further enquiries
Whatsapp to +918526366796

Regards,
Aadhiyagai Traditional Seedsavers
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

10/08/2021

2021: August month online gardening class through WhatsApp | 30 நாட்கள் வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி

ஆகஸ்ட்-10 முதல் செப்டம்பர் 20 வரை பயிற்சி நடைபெற உள்ளது.

Since it is not possible to conduct gardening trainings directly, we have been conducting through WhatsApp. so that people in different places and countries can learn gardening from home itself.

நேரடியாக வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சிகளை நடத்த இயலாததாலும், வெவ்வேறு ஊர்களிலும், நாடுகளிலும் இருக்கும் மக்களும் வீட்டுத்தோட்ட பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் வகையிலும் வாட்ஸ்அப் மூலமாக பயிற்சிகளை நடத்தி வருகிறோம்.

Training for beginners who want to start their own garden & also for experienced gardeners.
தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் & தோட்டம் அமைக்க இருப்பவர்களுக்குமான பயிற்சி

-We can learn from home வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ளலாம்.

-We can learn @ our free time. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கற்றுக்கொள்ளலாம்.

Basic seeds for starting garden & training notes will be sent to all participants at the end of the training.

பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் தோட்டம் அமைக்க தேவையான அடிப்படையான காய்கறி கீரை விதைகளும் பயிற்சி குறிப்புகளும் பயிற்சியின் நிறைவில் அனுப்பி வைக்கப்படும்.

பயிற்சி முழுக்க எளிய முறையிலும் மற்றவர்களை சார்ந்து தோட்டம் அமைக்க தேவையில்லை என்ற முறையிலும், இதை மற்றவர்களுக்கு கைமாற்றி கொடுக்க இயலும் என்ற முறையிலும் இருக்கும்.

பயிற்சி 30 நாட்களுக்கு தினசரி மாலை 3 மணிக்குமேல் 9 மணிக்குள் 2மணி நேரம் நடைபெறும்.

வாட்ஸ்அப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்தி பயிற்சி நடைபெறும்.

தினசரி ஒரு தலைப்பின் கீழ் பயிற்சி நடைபெறும்.

பயிற்சிக்கு பிறகும் தொடர்ந்து ஆலோசனைகளும், சந்தேகங்களுக்கு தீர்வும் வழங்கப்படும்.

Q: During the class should I available online or we can learn in our convenient time through the videos u send?
A: we can learn in our convenient time

பயிற்சிக்கு பிறகு தோட்டம் துவங்க தேவையான அடிப்படை விதைகளையும் பயிற்சி குறிப்பேடுகளையும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பயிற்சி கட்டணம் - 1000₹
முன்பதிவு செய்திட வாட்ஸ்அப் +916380845836

One month online gardening course

Training for beginners who want to start own garden in terrace or backyard

Daily one topic about gardening.

Language - tamil

We ll discuss below in training:

🌳Why do you need
own garden?

👩‍👩‍👧‍👧What can be done with a home garden to fulfill the needs of the family?

❓What plants do you need?

↔How much space you need for your favorite garden?

🍄How to use 1 cent area space?

🌽Cultivation methods of crops.

🍂How to use your home garden effectively?

🌳Crop rotation methods.

🏜How to set the roof for the hanging vegetable plants and fill the need.

➿Cycle Methods to harvest the greens & veggies daily.

🌷🌿Discussion on herbs and flowers.

🔊Awareness of the traditional seeds.

❓Where to gather seeds?

🌾Maintaining and protecting the seeds properly at home.

🦀Pest control.

🐛Awareness about pests.🐝

🎋Diseases that affect crops and plant protection methods.

📥Methods for using household waste daily for gardening

நன்றி,
வீட்டுத்தோட்ட பயிற்சி குழு,
fb.com/aadhiyagai.
......
பயிற்சி பற்றி பங்கேற்ற நண்பர்களின் கருத்துகள்.
Some reviews about our online gardening class:
https://m.facebook.com/story.php?story_fbid=1120762831756420&id=100014681404156

July-2020 class review: https://www.facebook.com/828173573909750/posts/3812879485439129/

April-2021 class review: https://www.facebook.com/828173573909750/posts/3969306926463050/

https://m.facebook.com/story.php?story_fbid=2943403172409054&id=100002182008381
...

Photos from ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்'s post 20/07/2021
04/07/2021

2021: july month online gardening class through WhatsApp | 30 நாட்கள் வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி

ஜூலை -15 முதல் ஆகஸ்ட் 20 வரை பயிற்சி நடைபெற உள்ளது.

Since it is not possible to conduct gardening trainings directly, we have been conducting through WhatsApp. so that people in different places and countries can learn gardening from home itself.

நேரடியாக வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சிகளை நடத்த இயலாததாலும், வெவ்வேறு ஊர்களிலும், நாடுகளிலும் இருக்கும் மக்களும் வீட்டுத்தோட்ட பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் வகையிலும் வாட்ஸ்அப் மூலமாக பயிற்சிகளை நடத்தி வருகிறோம்.

Training for beginners who want to start their own garden & also for experienced gardeners.
தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் & தோட்டம் அமைக்க இருப்பவர்களுக்குமான பயிற்சி

-We can learn from home வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ளலாம்.

-We can learn @ our free time. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கற்றுக்கொள்ளலாம்.

Basic seeds for starting garden & training notes will be sent to all participants at the end of the training.

பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் தோட்டம் அமைக்க தேவையான அடிப்படையான காய்கறி கீரை விதைகளும் பயிற்சி குறிப்புகளும் பயிற்சியின் நிறைவில் அனுப்பி வைக்கப்படும்.

பயிற்சி முழுக்க எளிய முறையிலும் மற்றவர்களை சார்ந்து தோட்டம் அமைக்க தேவையில்லை என்ற முறையிலும், இதை மற்றவர்களுக்கு கைமாற்றி கொடுக்க இயலும் என்ற முறையிலும் இருக்கும்.

பயிற்சி 30 நாட்களுக்கு தினசரி மாலை 3 மணிக்குமேல் 8 மணிக்குள் 2மணி நேரம் நடைபெறும்.

வாட்ஸ்அப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்தி பயிற்சி நடைபெறும்.

தினசரி ஒரு தலைப்பின் கீழ் பயிற்சி நடைபெறும்.

பயிற்சிக்கு பிறகும் தொடர்ந்து ஆலோசனைகளும், சந்தேகங்களுக்கு தீர்வும் வழங்கப்படும்.

Q: During the class should I available online or we can learn in our convenient time through the videos u send?
A: we can learn in our convenient time

பயிற்சிக்கு பிறகு தோட்டம் துவங்க தேவையான அடிப்படை விதைகளையும் பயிற்சி குறிப்பேடுகளையும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பயிற்சி கட்டணம் - 1000₹
முன்பதிவு செய்திட வாட்ஸ்அப் +916380845836

One month online gardening course

Training for beginners who want to start own garden in terrace or backyard

Daily one topic about gardening.

Language - tamil

We ll discuss below in training:

🌳Why do you need
own garden?

👩‍👩‍👧‍👧What can be done with a home garden to fulfill the needs of the family?

❓What plants do you need?

↔How much space you need for your favorite garden?

🍄How to use 1 cent area space?

🌽Cultivation methods of crops.

🍂How to use your home garden effectively?

🌳Crop rotation methods.

🏜How to set the roof for the hanging vegetable plants and fill the need.

➿Cycle Methods to harvest the greens & veggies daily.

🌷🌿Discussion on herbs and flowers.

🔊Awareness of the traditional seeds.

❓Where to gather seeds?

🌾Maintaining and protecting the seeds properly at home.

🦀Pest control.

🐛Awareness about pests.🐝

🎋Diseases that affect crops and plant protection methods.

📥Methods for using household waste daily for gardening

நன்றி,
வீட்டுத்தோட்ட பயிற்சி குழு,
fb.com/aadhiyagai.
......
பயிற்சி பற்றி பங்கேற்ற நண்பர்களின் கருத்துகள்.
Some reviews about our online gardening class:
https://m.facebook.com/story.php?story_fbid=1120762831756420&id=100014681404156

July-2020 class review: https://www.facebook.com/828173573909750/posts/3812879485439129/

April-2021 class review: https://www.facebook.com/828173573909750/posts/3969306926463050/

https://m.facebook.com/story.php?story_fbid=2943403172409054&id=100002182008381
...

Want your business to be the top-listed Gym/sports Facility in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Sundharapuram
Coimbatore
641021