சித்தர் குரு பதஞ்சலியின் ஞான சபை

  • Home
  • India
  • Madurai
  • சித்தர் குரு பதஞ்சலியின் ஞான சபை

சித்தர் குரு பதஞ்சலியின் ஞான சபை yoga and human excellence தமிழில் பதஞ்சலி யோகம், சித்தர்கள் , ஆன்மீகம்,சிவம்

28/09/2026

#தியானம்

*பதஞ்சலி முனிவர் குறிப்பிடும் ஆன்மீக ரகசியம்* 🔥🔥🔥இருளில் விளக்கை ஏந்திச் செல்கிறீர்கள். அங்கே அந்த விளக்கின் ஒளியில் உங்...
18/09/2026

*பதஞ்சலி முனிவர் குறிப்பிடும் ஆன்மீக ரகசியம்*

🔥🔥🔥இருளில் விளக்கை ஏந்திச் செல்கிறீர்கள். அங்கே அந்த விளக்கின் ஒளியில் உங்கள் பாதை முன்னே தெரிகிறது.

அப்போது அந்த இருளுக்கு நடுவில் சில மின்மினிப் பூச்சிகள் உங்கள் கண்ணுக்குப் பிரகாசமாகத் தெரிகின்றன.

உங்கள் கவனம் தடுமாறுகிறது. கையில் உள்ள விளக்கிலிருந்து எண்ணெய் கீழே சிந்துகின்றது.

😞😞😞 இன்னும் தடுமாறினால் விளக்கு கீழே விழுந்துவிடும்.
அப்போதும் மொத்தமும் இருளாகிவிடும்; நாம் இலக்கைச் சென்று அடையும் லட்சியம் பாழாகிவிடும்.

🔥🔥🔥
நாம் இயல்பிலிருந்து மீண்டும் மாறி, எங்கே தொடங்கினோமோ அங்கேயே வந்துவிட வாய்ப்பு ஏற்படும்.

இதை எதற்கு உதாரணமாகச் சொல்கிறேன் என்றால், எவ்வளவோ புண்ணிய காரியங்களை ஆற்றி, எவ்வளவு பிறவிகள் தவம் செய்து, இறைவன் மீது ஒரு அசையாத பற்று கொண்ட உள்ளத்தில்

🌺🌺🌺 எதிர்காலத்தைக் குறித்த தீர்க்கதரிசனம், மேலும் சில விஷயங்களை அறியக்கூடிய ஆற்றல், வாக்குப்பலன் போன்றவை எல்லாம் இயல்பாகவே அந்த ஜீவாத்மாவுக்கு வந்து சேரக்கூடும்.

🌸🌸🌸. காரணம், இறைவனை நோக்கி செல்பவன் இறைவனுக்கான தன்மைகளைப் பெறுகிறான் என்பதுதான் இதில் உண்மை.

இதன் காரணமாகப் பலரிடமிருந்து நமக்கு பாராட்டுதல்களும் அங்கீகாரங்களும் வந்து சேரும்.

🌺🌺🌺

அவற்றுக்கெல்லாம் நாம் தலைசாய்த்து, இந்த மனதின் போக்குக்கு நாம் நம்மை அர்ப்பணித்துக் கொண்டால்,
ஒரு கட்டத்தில் இந்த உண்மையின் குரல் நமக்கு கேட்காமலே போய்விடும். புகழுக்காக நாம் செல்லும் பாதையிலிருந்து மாறிவிடக்கூடுவோம்.
இங்கே அந்த விபத்துதான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

✍🏻✍🏻✍🏻. எவ்வளவோ பெரிய தவம் இயற்றிய குருநாதர்கள் எல்லாம் தங்களுடைய சித்தத்தை அடக்கி, இறைவனுடைய சித்தத்தின்படி எல்லாம் நடக்கட்டும் என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

✍🏻✍🏻 இன்னும் அதிகமாகச் சிலர் மக்கள் பார்வையில் தென்படாமலே வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கெல்லாம் இந்த தீர்க்கதரிசனம் இல்லையா? ஏன் அவர்கள் இதை வெளிப்படுத்தவில்லை?

🌺🌺 ஏன் ஒருவர் தன்னை உயர்ந்தவராக நினைத்துக் கொள்கிறார்? எங்கே இருந்து அவருக்கு அந்த உத்தரவு வருகிறது?
*யோக மார்க்கத்தில், இறைசித்திகள் தடையாகும் என்கிறார் பதஞ்சலி முனிவர்.*

🪷🪷நீங்கள் *கைவல்யம் எனப்படும் பிறப்பற்ற நிலையை, அதாவது* இறை நிலையை அடையும்போது, இந்திரன் முதலான தேவர்கள் உங்களிடம் வந்து இந்த ஆற்றல்களைத் தருவார்கள். அதற்குப் பதிலாக நீங்கள் கைவல்ய நிலையை அடையும் முயற்சிகளை விட்டுவிடுங்கள்; எங்களோடு இருங்கள் என்பார்கள்.
அப்படியெல்லாம் கைவல்ய நிலையை விட்டவர்கள் என்றும் குலதெய்வங்களாக, சிறுதெய்வங்களாக நமக்கு அருள் செய்கிறார்கள்.

🔥🔥🔥ஆனால் **கைவல்ய நிலை என்பது, சாயுஜ்ய முக்தி* என்பது இதற்கு மேலானது. இறைவனோடு இறைவனாகக் கலந்துவிடும் இந்த நிலையை இயற்கை கூட விரும்புவதில்லை.
காரணம், இயற்கையின் கட்டுப்பாட்டிலிருந்து நீங்கள் விலகிவிடுவீர்கள்.

🌸🌸🌸புருஷன் என்ற ஆத்ம தத்துவத்தோடு நீங்கள் இணைந்துவிடும்போது, நீங்களும் இறைவனும் ஒன்றாகிவிடுவீர்கள்.

🪷🪷இந்த உன்னத நிலைக்கு இயற்கை யாரையும் அவ்வளவு சீக்கிரம் அனுமதிப்பதில்லை.
ஏனென்றால், படைப்பில் நீங்கள் ஒரு படைப்பாக இருப்பதுதான் அது விரும்புகிறது.

🌺🌺ஒரு கட்டத்தின் மேல் எல்லாமே உங்களுக்கு எதிராக இருக்கும் போது,
கிட்டத்தட்ட ஒரு சிறந்த தொடக்க நிலையைப் பல பிறவிகளுக்குப் பிறகு பெற்றிருக்கும் நாம்,
ஏன் இந்த சமூகத்தின் அங்கீகாரத்திற்காக நம்மை நாம் வெளிப்படுத்த வேண்டும்?
குருமார்கள் காட்டிய எளிய வழியிலேயே, வந்த தடம் தெரியாமல் திரும்பிப் போக வேண்டும்.

✍🏻✍🏻ஒருவேளை இறைவனது கருணை நம்மை வெளிப்படுத்த வேண்டும் என்றால், அது கண்டிப்பாக வெளிப்பட்டுத் தோன்றும்; அதை நாம் சுயமாகச் செய்து கொள்ளக் கூடாது.
அதனால்தான் பதஞ்சலி கூட, "இறைவனை முன்னிறுத்தியே இந்த யோகத்தைச் சொல்கிறேன்" என்று கூறினார்.

🔥அவர் நமக்கு குருவாக இருந்தபோதும், அவர் தன்னை முன்னிறுத்தி அந்த யோகத்தை உலகுக்கு உபதேசிக்கவில்லை.
உங்களை முன்னிறுத்துவதை விட்டுவிட்டு, இறைவனை முன்நிறுத்துங்கள்.

💚 ஒருநாள் கைவல்ய நிலை அடைந்து இறைவனுடன் இறைவனாக நீங்கள் கலப்பீர்கள் என்கிறது பதஞ்சலி யோகம்.
நாம் கடவுள் அல்ல,

🔥 ஆனால் கடவுளோடு கடவுளாக வேண்டும்.
அதற்கு இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும்.

அதற்கு *முன்பாக பதஞ்சலி யோகம் மற்றும் திருமந்திரம்* போன்ற ஆன்மீக உபதேசங்களை படிக்க வேண்டும்..

இதுபோன்ற மகான்களின் ரிஷிகளின் உபதேசங்களை தான் *பதஞ்சலியின் சபை பிரமாணமாக* எடுத்துக்கொண்டு செயல்படுகிறது...

இதை பதஞ்சலியே தனது யோக சூத்திரத்தில் குறிப்பிடுகிறார்..

ஆதலால் *சாஸ்திரத்தின் வழி அனுபவத்தைப் பெறுங்கள்* அந்த அனுபவத்தை கொண்டு நீங்களும் மற்றவர்களும் முன்னேற ஏணியாய் இருங்கள்

**இப்படிக்கு,**
**பதஞ்சலி யோக பாதையில்**

ரேவதி நட்சத்திர குரு பூஜையில் சத்குரு தரிசனம்சுய ஜாதகத்தில் தசாபுத்தியும் சுமாராக இருந்து, கோச்சார கிரகங்களும் உறுதுணையா...
31/08/2026

ரேவதி நட்சத்திர குரு பூஜையில் சத்குரு தரிசனம்

சுய ஜாதகத்தில் தசாபுத்தியும் சுமாராக இருந்து, கோச்சார கிரகங்களும் உறுதுணையாக இல்லாதபோது,

தற்போதைய சூழலில் சனியின் வக்கிர கதியில் ரிஷபம், கன்னி, தனுசு ராசியில் இருக்கும் கிரகங்களின் காரகத்துவங்கள் எதிர்மறையாக செயல்படக்கூடிய இந்தக் காலகட்டத்தில்...

​இன்றைய ரேவதி நட்சத்திரத்தில் குருபூஜை நடைபெற்றது.

அது வழக்கமானது என்றாலும்,
​சனி பகவானின் தற்போதைய நகர்வு என்பது ரேவதி நட்சத்திரத்தில் இருக்கிறது
அங்கிருந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்க்கும்போது, அந்த ராசி, லக்னம் அல்லது அந்த பாவகங்களில் உள்ள கிரகங்களின் திசா புத்தி நடக்கக்கூடிய ஜாதகர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

​இன்றைய குருபூஜை அதற்கெல்லாம் நிவர்த்தியாக அமைந்தது போல், சனியின் சுபத்துவ நிறமான நீல நிற ஆடையைச் சத்குரு அணிந்தது இயல்பாகவே பார்வைக்கு ஒரு நிவர்த்தியாக இருந்தது போல் இருக்கிறது."

அவரே ஒரு முறை சுவடியில் கூறி இருக்கிறார்..

நற்கர்மா செயல் புரிய நவக்கோள் வழி எதுவாயினும் தம் சித்தத்திலே யாமினை கொண்டால் அட்டியில்லை என்றார்...

அதாவது நம்முடைய சித்தம் என்ற ஆழ்மனம் சத்குருவின் நினைவில் இருந்தால் அந்த நேரத்தில் அந்த காலத்தில் நாம் செய்யக்கூடிய எந்த செயலுக்கும் நவ கிரகங்கள் வழியாக தடை வராது என்பதுதான் இதன் அர்த்தம்...

எப்போதும் சத்குரு நம்மோடு இருக்கிறார்..

அவர் நினைவில் நாம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்..

இந்த நேரத்தில் அவரை நமக்கு காட்டி கொடுத்து இந்த பிறவியை மகத்துவமாக மாற்றிய யோக ஆச்சாரியார் குருஜி டி எஸ் கிருஷ்ணன் அவர்களை சத்குருவோடு நினைத்து எந்நாளும் நினைவு கூறுவது தான் நம்முடைய மாண்பு கடமை எல்லாம்

வாழ்க சத்குரு ஓங்குக அவர் புகழ்

 # *விதியின் தீர்ப்பும்... சத்குரு என்னும் தெய்வீக வழக்கறிஞரும்!* ஆன்மீகப் பாதையில் குருவுக்கும் சீடனுக்கும் இடையேயான பந...
25/07/2026

# *விதியின் தீர்ப்பும்... சத்குரு என்னும் தெய்வீக வழக்கறிஞரும்!*

ஆன்மீகப் பாதையில் குருவுக்கும் சீடனுக்கும் இடையேயான பந்தம் என்பது சாதாரணமானதல்ல.

அது உலகியல் உறவுகளைத் தாண்டி, ஆன்மாவை விடுவிக்கும் ஒரு உன்னத பந்தமாகும். "

*கர்மாவின் அடிப்படையில் விதியை எழுதுபவர் இறைவன்* என்றால், ஆத்ம சாதகரின் நல்ல நல்ல கர்மாக்களை கருத்தில் கொண்டு அவர்களுக்காக

*பரம்பொருளுடன் வாதாடக்கூடிய ஒளி பொருந்திய வழக்கறிஞர் தான் சத்குரு* " என்ற வரி, இந்த உறவின் ஆழத்தை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

# # *விதியும் கர்மாவின் கணக்கும்*

பிரபஞ்சம் எப்போதுமே ஒரு துல்லியமான நியதியின் அடிப்படையில் இயங்குகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் அதற்குரிய எதிர்வினை உண்டு என்ற கர்ம விதியே மனிதர்களின் வாழ்வை இயக்குகிறது.

* **கர்மாவின் பதிவு:**

மனிதன் தனது எண்ணம், சொல் மற்றும் செயலால் சேர்க்கும் கர்ம வினைகளின் அடிப்படையில் அவனது வாழ்வுக்கான விதியை இறைவன் அல்லது இயற்கையின் சட்டம் எழுதுகிறது.

* **தவறாத நீதி:**

இந்த நீதித்துறையில் இரக்கத்திற்கு இடமிராது; கணக்குகள் கச்சிதமாகப் பார்த்து நிறைவேற்றப்படும். சாதாரண மனிதன் தன் கர்ம வினைகளின் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்பது இயற்கையின் நியதியாகும்.

# # *ஆத்ம சாதகரின் சரணாகதியும், சத்குருவின் பிரவேசமும்*

ஒருவன் ஆன்மீகப் பாதையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆத்ம சாதகனாக மாறும்போது அவனது வாழ்வு திருப்புமுனையைச் சந்திக்கிறது.

அவன் தன்னைத் தன் சத்குருவிடம் முழுமையாக அர்ப்பணிக்கிறான்.

அந்தத் தருணத்தில்தான் ஒரு உண்மையான சத்குரு அவனது வாழ்வுக்குள் ஒளியாய் நுழைகிறார்.

* **நற்கர்மங்களின் பாதுகாப்பு:**

சாதகர் செய்யும் ஆன்மீகச் செயல்கள், தொண்டு மற்றும் நற்கர்மங்கள் அவனுக்கான நேர்மறை ஆற்றலை உருவாக்குகின்றன.

* **தெய்வீக வழக்கறிஞர்:**

பிரபஞ்சத்தின் கடுமையான கர்ம விதிகளுக்கு எதிராக, அந்த ஆத்மாவின் நற்கர்மங்களைச் சாட்சியாக நிறுத்தி, பரம்பொருளிடம் வாதாடி அவனுக்கான தண்டனையைக் குறைப்பதோ அல்லது முற்றிலுமாக விடுவிப்பதோ சத்குருவின் கருணைப் பணியாகும்.

# # *விதியைக் மாற்றுபவர்*

சத்குருவின் அருள்
இறைவன் எழுதிய விதியின் கோடுகளை மாற்றும் வல்லமை குருவின் கருணைக்கு உண்டு. ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுத் தன் கட்சிக்காரரை விடுவிப்பது போல,

*சத்குரு தனது சீடனுக்காகத்* தன் சொந்த ஆன்மீக ஆற்றலையும் அருளையும் பயன்படுத்தி அவனது கர்மப் பாரத்தைச் சுமக்கத் தயாராகிறார்.

# # *முடிவுரை*

சுருக்கமாகக் கூறின், கர்ம விதிகளின் படி தீர்ப்ப வழங்கும் இறைவனின் நீதிமன்றத்தில், தன் சீடனின்

*ஆன்ம விடுதலைக்காக வாதிடும் ஒரே ஒளி பொருந்திய வழக்கறிஞர் சத்குரு மட்டுமே* .

அந்தச் *சரணாகதி நிலையை அடைபவர்களுக்கு விதி என்பது தடையாக இருக்காது; மாறாக அது குருவின் அருளால் வரம் நிறைந்த பாதையாக மாறிவிடும்* .

 #பரிகாரம்
23/07/2026

#பரிகாரம்

 #பக்தி
23/07/2026

#பக்தி

04/07/2026
04/07/2026

#திருவாசகம் #பக்தி

Address

12, Ssb நகர் , மாடக்குளம் மெயின் ரோடு, பழங்காநத்தம்
Madurai
625003

Opening Hours

Monday 6:45am - 8:30am
6:30pm - 8:30pm
Tuesday 6:45am - 8:30am
6:30pm - 8:30pm
Wednesday 6:45am - 8:45am
6:30pm - 8:30pm
Thursday 6:45am - 8:30am
6:30pm - 8:30pm
Friday 7am - 8:30am
6:30pm - 8:30pm
Saturday 7am - 8:30am
6:30pm - 8:30pm
Sunday 7am - 8:30am

Alerts

Be the first to know and let us send you an email when சித்தர் குரு பதஞ்சலியின் ஞான சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சித்தர் குரு பதஞ்சலியின் ஞான சபை:

Shortcuts

Share

Category