KB Silambam Academy

KB Silambam Academy

Share

Learning something antique and part of our rich heritage instils a sense of belonging towards the art.

25/04/2022

Anbu Sports Council நடத்தும் 3வது மாநில சிலம்பப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

In this summer, we warmly invite you to the Team Event Championship.

26/03/2022

இன்று 26.03.2022 மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி உள்விளையாட்டரங்கில் மதுரை "கலைமாமணி" த. கோவிந்தராஜ் கலைமேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாடக்குளம் AXN சிலம்பம் அகாடமி இணைந்து நடத்திய 2ஆம் மாநில சிலம்பப் போட்டியில் நமது ஆசான் மாகாகுரு.பா.அன்பு சேகர் அவர்களுக்கு சிலம்பக் கலைச் சேவையை பாராட்டி சிலம்பச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Photos from KB Silambam Academy's post 29/10/2021

II STATE SILAMBAM CHAMPIONSHIP MADURAI 2021
Venue: Fatima College Indoor Stadium
Date: 24th October 2021

27/10/2021

The photos are all wonderfully mind-boggling. The moment that took me to that day. Thanks for the another memorable day @சகோதரா

18/04/2021

World Heritage day celebration mode
முற்றிலும் மாறுபட்ட காட்சியமைப்பு....
கலையின் அடுத்தகட்ட நகர்வை நோக்கிய பயணம்...

Photos from KB Silambam Academy's post 29/03/2021

மதுரை மாடக்குளம் நான்காம் தலைமுறையான KB Silambam Academy, திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி மாதம் 20, 21 தேதிகளில் நடைபெற்ற மாநில சிலம்பப் போட்டி குறித்த குறிப்புகள்

1."உன் நிலை அறிய களம் காணு'' என்ற முழக்கத்துடன் துவங்கப்பட்ட இப்போட்டியின் முதன்மை குறிக்கோள் பாரம்பரிய கலையான சிலம்பத்தை உயர்மட்ட தரத்தில் நம் மண்ணில் சிறப்பிக்கவே மாபெரும் ஏற்பாடு செய்யப்பட்டது.

2.பாரம்பரியமும் தொன்மையும் வாய்ந்த சிலம்பக் கலையை உலகறிய, எந்நாட்டவரும் ஏற்றுக் கொள்ள வேண்டின் கலையின் வடிவம் மாறாமல் தரத்தை உயர் மட்டத்திற்கு எடுத்துச்செல்ல என்னென்ன அடிப்படை மூலக்கூறுகள் உள்ளனவோ அத்தனையும் ஒருசேர நிகழ்த்த அடி எடுத்து வைத்த முதல் படியே இஃது.

3. ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, சுருள் வாள் வீச்சு மற்றும் தொடு முறை என மொத்தம் நான்கு பிரிவுகளாக இரண்டு நாள்களில் நிர்ணயிக்கப்பட்ட வயது பிரிவுகளில் இருபாலரும் பங்கேற்கும் விதமாக உள்விளையாட்டு அரங்கில் போட்டி திட்டமிடப்பட்டது.

4. இரண்டு நாள்கள் நடைபெறும் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கும் இப்போட்டியில் அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கல் விடயத்தில் மிகுதியான அக்கறை கொண்டு இரு வெவ்வேறு இடங்களில் தனித்தனி அறைகளில் தங்க வைப்பதற்கும், எளிதில் செரிமானம் அடையக் கூடிய அனைவருக்கும் ஏற்றவகையில் உணவு தயார் செய்து வழங்கிடவும் தனியே உணவுக்குழு ஒன்றை அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டது.

5.தமிழக மண்ணின் வரலாற்றில் முதல்முறையாக விளையாட்டிற்கு என்று பிரத்யேகமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டதும் டூல்னி என்று பெயரிடப்பட்டதுமான மாஸ்கட் காலை முதல் இரவு வரை போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் தொய்வில்லாமல் உற்சாகத்துடன் வைத்திருந்தது.

6. வட்டார மற்றும் பிராந்திய சுற்று முறை கலைஞர்கள் சங்கமிக்கும் இவ்வரங்கில் ஒவ்வொருவரின் அசாத்திய திறமைகளை அனைவரும் பார்க்கும் வண்ணம் அரங்கினுள் மற்றும் வெளி பகுதிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் இரண்டு பெரிய ஒளிமின் திரையில் நேரலையாக திரையிடப்பட்டது.

7. களம் கண்ட வீரர்கள் வெற்றிவாகை சூடியவர்களை கௌரவிக்கும் வகையில் பத்தடி நீளமுள்ள பிரம்மாண்ட பரிசு மேடை மேடையில் தத்தமது மாவட்டப் பெயர் பொறிக்கப்பட்ட கொடியுடன் மேடையை அலங்கரித்தனர்

8. திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் அதன் வீச்சு பன்மடங்கு அதிகரிக்கும். போட்டியாளர்களின் திறமைகளை அங்கீகரிப்பதற்கு காணொளியில் முன்பே குறிப்பிட்ட விதிமுறைகளின் படி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றவர்க்கு Silambam Champions of the year 2021 2. ஆடவருக்கான GOAT of the year 2021 3. மகளிருக்கான Jhansi of the year 2021 4.வளரும் குழந்தை நட்சத்திரம் Raising star of the year மற்றும் 5. ஒழுக்கத்திற்க்கான Fairplay Award 2021 என்று தனித்தனியே விருதுகளும் அதற்கான பட்டயமும் தனி முத்திரை பதிக்க முத்தாய்ப்பாக சிலம்பக்கலை வடிவிலேயே வழங்கி கௌரவிக்கப்பட்டது.

9. விளையாட்டு என்பது வெறும் போட்டிகள் மட்டும் அல்ல அது படைப்பாளிகளுக்கும் வடிவமைப்பாளர்களுக்கும் புதிய சிந்தனைகளை உருவாக்கமும் முன்மொழியவும் விளையாட்டுடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடியது. சந்தையில் கையிருப்பு மற்றும் தயார் நிலையில் இருக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தாமல் தமக்கென புதிய சிந்தனைகளுடன் உருவாக்கப்பட்ட மாஸ்கட், பரிசு மேடை, ஒளி ஒலி அமைப்பு, விருதுகளுக்கான பட்டயம் என அதன் நீளம் அதிகம். அப்படியான நம்மைச் சுற்றியுள்ள படைப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.

10. உடல் நலமே நாம் எப்பாடுபட்டேனும் ஈட்ட வேண்டிய காக்கவேண்டிய உயிர்ப்பொருள். எக்கொடிய தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் ஒரேவழி மரபை மீட்டு தொடர் பயிற்சியால் மட்டுமே முடியும். வரும் தலைமுறையினருக்கு நாம் சொல்லும் செய்தியும் அதுவே.

04/03/2021

தங்களது கலைச்சேவை தலைமுறை கடந்து தடம் பதிக்கும்

Photos from KB Silambam Academy's post 04/03/2021

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசான்

Photos from KB Silambam Academy's post 03/03/2021

03.03.2021 வணக்கம் தமிழகம் மற்றும் மீடியா செய்தி நாளிதழில்

Want your business to be the top-listed Gym/sports Facility in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


73, Nethaji Main Road, Meenambal Puram
Madurai
625002