23/09/2026
*உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்*
*பதிவு எண் 532/KPM* *தமிழ்நாடு & பாண்டிச்சேரி & கேரளா*
*செங்கல்பட்டு மாவட்டம் 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்*
*நாள் : 21/09/2026* *திங்கட்கிழமை*
*நேரம் :*
*காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை..*
*இடம்:* *கோதண்டபாணி அவர்களின் அலுவலகம்*
*சிறப்பு அழைப்பாளர்கள் :*
*திரு.அ.ஜாஹிா் ஹீசைன்*
செயல் தலைவர்
*திரு.P.ஆரோக்கிய தாஸ்*
மாநிலத் துணை பொது செயலாளர்
*திரு.ச.கோதண்டபாணி*
மாநில செயலாளர்
*கூட்டத்திற்கு முன்னிலை:*
*திரு. K. வெங்கடேசன்*
செயற்குழு உறுப்பினர்
*திரு.Amb.Dr.P.பிரேம் ஆனந்த்*
மாவட்ட செயலாளர்
*வரவேற்புரை:*
*திரு.சசிகுமார்*
மாவட்ட (பொறுப்பு பொருளாளர் )
*எழுச்சியுரை:*
*திரு.K.ராஜ்குமார்*
மாவட்ட இணை செயலாளர்
*சிறப்புரை:*
*திரு.K.ராஜா*
மாவட்ட இணை செயலாளர்
*நன்றியுரை:*
*திரு.T. சந்திரசேகரன்*
மாவட்ட செய்தி தொடர்பாளர்
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்..
1. செங்கல்பட்டு மாவட்டத்தின் முன்னாள் பொருளாளரும் தற்போதைய மாவட்ட ஆலோசகர் திரு. சசிகுமார் அவர்களை மாநில செயற்குழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மாவட்டத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது
2. இம்மாத மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிர்வாகிகளிடம் எதர்காக கலந்து கொள்ளவில்லை என்ற விலக்கம் பெறப்பட்ட வேண்டும்
3. தொடர்ந்து மூன்று மாதாந்திர கூட்டங்களில் கலந்து கொள்ளாத நிர்வாகிகளை அதற்கான விளக்கங்கள் கேட்கப்பட்டு விளக்கம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் நிர்வாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவர்.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது 8 பகுதித்தளங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதித்தளத்திலும் அதிகபட்சம் 40 உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும். 40 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள பகுதித்தளங்கள் இரண்டாகப் பிரிக்கப்படவேன்டும்.
5. செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் திரு. முரளி அவர்கள் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் வகுத்து வந்த பொருளாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினராக செயல்படுவார்
6. செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது 8 துணைச் செயலாளர்கள் உள்ளனர். உறுப்பினர் எண்ணிக்கை 400-ஐ கடந்துவருவதால், துணைச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற தீர்மானிக்கப்பட்டது.
7. இந்த ஆண்டின் இறுதியில் மாவட்டத்தில் கட்டமைப்பு மற்றும் நிர்வாகம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும் அதற்காக குழு அமைக்கப்படும்.
மாவட்ட நிர்வாக குழு:
1. ஜாகிர் ஹுசைன்
2. ஆரோக்கியதாஸ்
3. வெங்கடேஷ்
4. சசிகுமார்
5. கோதண்டபாணி
6. பிரேம் முரளி
7. ராஜ்குமார்
8. ராஜா
8. மாவட்ட நிகழ்வுகளை கவனிக்க நிகழ்வு தளம் உருவாக்கப்படும். இதற்கு மாவட்ட தலைமை நிர்வாகிகளில் ஒருவர் பொறுப்பேற்று, அவரின் அறிவுறுத்தலின்படி 8 துணை நிர்வாகிகள் செயல்படுவர்.
9. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆட்டோ பிரிவை உருவாக்கி தர வேண்டும் என்று தலைமைக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது
10. மாவட்ட ஆலோசகராக இருக்கும் திரு. சசிகுமார் அவர்கள் புதிய நிர்வாகம் கட்டமைக்கும் வரை பொறுப்பு பொருளாளராக செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
11. மறைந்த மாநில ஆலோசகர் திரு. அப்துல் காதர் ஜிலானி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் செப்டம்பர் (28 .09.2026) அன்று வருவதால் அதை தலைமையின் நிகழ்வாக நினைவேந்தல் கூட்டம் மற்றும் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டுகோள் வைக்கப்பட்டது மற்றும் இந்த நிகழ்வை செங்கல்பட்டு மாவட்டம் முன் நின்று நடத்த தயாராக உள்ளது அதற்கு தலைமை அனுமதிக்க வேண்டும்
🤝 ஒற்றுமையுடன் செயல்படுவோம்!
✊ நிர்வாகத்தை வலுப்படுத்துவோம்!
🚗 ஓட்டுநர்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்!!
செங்கல்பட்டு மாவட்டம் செய்தி தொடர்பாளர் T.சந்திரசேகரன்...