Swami Vivekananda Yoga Training Academy

SWAMI VIVEKANANDA YOGA TRAINING ACADEMY. A UNIT OF SWAMI VIVEKANANDA EDUCATIONAL TRUST. WE TEACH ASTHANGA YOGA / WE TRAIN YOGA TEACHERS / YOGA THERAPY

Thanks for Yogacharya Kamalakannan..For the opportunity to make use it...🙏

👆👍Today Morning Conducted YOGA WORKSHOP for POLICE DEPARTMENT - USILAIMPATTI TALUK🤪🙃🙏🕉

Swami Vivekananda Yoga Training Academy

Today’s Dinamalar Newspaper

Today’s Dinamalar Newspaper

Swami Vivekananda Yoga Training Academy

✍✍✍தமிழ்க்குழ்தை✍✍✍

எப்படிச் சாப்பிடவேண்டும் தெரியுமா?
(திருமந்திரம்)

நாம் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை நம் தமிழ் திருமந்திரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிக அழகாக நமக்கு பிரித்துக் காட்டியுள்ளது🤗

அதனை;

"ஆர்க்கும் இடுமின், அவர், இவர் என்னன்மின்,
பார்த்திருந்து உண்மின், பழம்பொருள் போற்றன்மின்,
வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின்,
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே"

அதாவது;
முதலில், நாம் சமைத்த உணவை நாம்மட்டுமே சாப்பிடவேண்டும் என்று நினைக்கக்கூடாது.

காக்கைகள் சாப்பிடுமுன் தன்னுடைய கூட்டத்தை அழைத்து, கிடைத்த உணவை அவற்றுடன் பகிர்ந்துகொள்கிறதல்லவா? அந்த குணத்தை நாமும் கற்கவேண்டும்.

ஆகவே, சமையல் தயாரானதும் சட்டென்று உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிவிடக்கூடாது. யாராவது இரவலர்கள் வருகிறார்களா என்று பார்த்து, காத்திருந்து உண்ணவேண்டும்.

அப்படி இரவலர்கள் நம் வாசலில் வந்து நின்றால், பசி என்று வந்த அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவு இடவேண்டும்.

அவர் ஏழையா, பணக்காரரா, முதியவரா, இளையவரா, ஆணா, பெண்ணா, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் உணவை வழங்கவேண்டும்.

அடுத்து, சாப்பாட்டைச் சரியானமுறையில் சமைத்து, அது கெட்டுப்போவதற்குள் சாப்பிடவேண்டும். பழைய, வீணானவற்றைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

சில சமயங்களில், நாம் நிறையப் பசியோடு வீட்டுக்கு வருவோம். உடனே, பரபரவென்று அவசரமாக அள்ளித் தின்னக்கூடாது. எத்தனை பசியாக இருப்பினும், நன்கு மென்று சாப்பிடுவதுதான் முறை...

இது மட்டுமல்லாமல் ஒரு மனிதனின் அறம்,பொருள்,இன்ப வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று மிகத் தெளிவாக உலகிற்க்கு எடுத்துக்கூறிய முதல் நூல் நம் தமிழ் நூல் என்பதை நினைத்து பெருமை கொள்வோம்😊🤗

✍✍✍✍தொடரும்✍✍✍✍

தியானம் செய்யும் முறை

தியானம் ஒரு கிளர்சியுட்டும் அனுபவம். புதிய வாழ்க்கைமுறையை அது உங்களுக்குப் போதிக்கிறது.

உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும். வயிறு காலியாக இருக்க வேண்டும். உகந்த நேரம்சந்தியா வேளை – காலை, மாலை. உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்.

உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும் படி அமர வேண்டும். முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்.

கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள்.

(புருவ மத்தியில் ஆன்மா உள்ளது. தியானத்தின் பக்குவ நிலையில் ஆன்ம ஒளி ஜோதியாகத் தெரியும்.). மனநிலைஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள். எண்ணக் குவிப்புஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறுநினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்.

எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம். நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும். கவலை வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம். மனம் அலைந்தால் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு, பிறகு தியானத்தை தொடருங்கள்.

எண்ணங்கள் தானே திரும்பி வரும். மூச்சுமூச்சு இயல்பாக விடுங்கள். தியான காலம் ஆரம்பத்தில் தியான நேரத்தை 5 நிமிடங்கள், பின் 10 நிமிடங்கள், பின் 15, நிமிடங்கள், பின்30 நிமிடங்கள் எனப்படிப்படியாகக் கூட்டுங்கள்.

ஒருமாத காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால் ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி, மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல் எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள்.

வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு. வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும், தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும்.

“கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” - என்கிறார் வள்ளலார்

ஆகையால் தியானம் செய்யுங்கள் ..

🌺சுவாமி விவேகானந்தா யோகா பயிற்சி மையம். தேனி 🌺

இன்றைய ஆசனம் :

தாளாசனம்:(பனைமர தோற்ற நிலை)

மனம் : நரம்பு மண்டலம் முழுவதும்

மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.

குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா, கூன்முதுகு

ஆன்மீக பலன்கள் : மனம் ஒருமைப்படும்

எச்சரிக்கை : குதிகால் வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது.

🌺சுவாமி விவேகானந்தா யோகா பயிற்சி மையம். தேனி 🌺

விருட்சக ஆசனம் (ஏகபாத ஆசனம்):

தன்னம்பிக்கை மற்றும் மனவலிமை அதிகரிக்க,உடல் சமநிலை பெற...
https://youtu.be/zWWKR7Xrp1Iclick click this link and subscribe our you tube channel you can get more information about astanga yoga in videos....

தொப்பையை கரைக்கும் ஆசனம்5:(பரிவர்த்த திகோணாசனம்)
https://www.youtube.com/channel/UC2YYqS9_mOVFO2S-pNxzg_w click this link and subscribe our you tube channel you can get more information about astanga yoga in videos 👍👍👍

இன்றைய ஆசனம்:

வீரபத்திர ஆசனம் :
(போர்வீரன் தோற்ற நிலை2)

செய்முறை:

விரிப்பில் நேராக நிற்க்கவும்(தாடாசனாவில்) உள்மூச்சோடு இரண்டு கைகளையும் தோள்பட்டை அளவிற்கு தூக்கி நிற்கவும்.

பின்னர் வெளிமூச்சுவிட்டபடி வீரபத்ராசன நிலை ஒன்றிற்க்கு வந்து,இடுப்பை திருப்பி இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கவும். நன்றாக நீட்டி உள்ளங்கைகளை சேர்த்து காதுகளை தொட்டு இடுப்பை பின்பக்கம் வளைத்து நிற்க்க வேண்டும் இயல்பான சுவாசத்தில் இருக்க வேண்டும்.

முழங்கால் தரக்கு 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும் .தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.இடது காலை நன்றாக நீட்ட வேண்டும். தலையை மேலே தூக்கி பின்னால் வளைத்து மேலே பார்க்கவும்.

இதே போன்று இடது பக்கமும் செய்ய வேண்டும்.
பிரிக்கும் போது மூச்சை வெளியெ விட்டு எழுந்து இடுப்பை திருப்பி நேராக (தடாசனா )வர வேண்டும். 10 வினாடிகள் ஓய்வு பெற்று பின்னர் மீண்டும் தொடரலாம்,மூன்று முதல் ஐந்து முறை செய்யலாம்..

பலன்கள்:

மார்பு விரிவடைகிறது.மூச்சு ஆழமாகிறது.தோளும்,பின்புறமும் வலுவடைகிறது.கழுத்து பலமடைகிறது.இடுப்புக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது.

உடலின் சமநிலையை கூட்டும் இந்தத் தோற்ற நிலை, உடலின் தாங்கும் சக்தியையும் கூட்டுகின்றது. மனதை அமைதிப் படுத்தி, அழுத்தத்தை வெளியேற்றுகின்றது. இதயத் துடிப்பையும் கண்காணிக்கின்றது..

https://www.youtube.com/channel/UC2YYqS9_mOVFO2S-pNxzg_w click this link and subscribe our you tube channel you can get more information about astanga yoga in videos 👍👍👍

🌹சுவாமி விவேகானந்தா யோகா பயிற்சி மையம். தேனி

தொப்பையை குறைக்கும் (திகோணாசனம்)
click this link and subscribe our you tube channel you can get more information about astanga yoga in videos https://www.youtube.com/channel/UC2YYqS9_mOVFO2S-pNxzg_w

இன்றைய ஆசனம்:

வீரபத்ராசனா(1):

பழங்காலத்தில் போர் வீரர்களுக்கு கொடுக்க கூடிய பயிற்சி,மன வலிமையை கூட்டக்கூடியது..

செய்முறை:
நேராக நிற்கவும்.உள் மூச்சை வாங்கி கால்களை தோள்பட்டை அளவுக்கு அகலப்படுத்தவும்.கைகளைத் தோளுக்கு இணையாகப் பக்கவாட்டில் உயர்த்த வேண்டும்.உள்ளங்கை கீழே பார்க்க வேண்டும்.

மூச்சை வெளி விட்டுக்கொண்டே வலது முழங்காலை வளைத்து தொடை தரைக்கு இணையாகும் படி கொண்டு வரவும்.முழங்கால் குதிகாலுக்கு இணையாக இருக்க வேண்டும்.

எதிர்ப்புறத்திலிருந்து இரண்டு பேர் கையை இழுப்பது போல் பக்கவாட்டில் கைகலை நீட்ட வேண்டும்.முகத்தை வலப்புறம் திருப்பி வலது கையைப் பார்க்க வேண்டும்.
இடது காளை நன்றாக நீட்ட வேண்டும்.இந்த நிலையில் இயல்பான சுவாசத்தில் அரை நிமிடம் இருக்கவும்.

உள்மூச்சோடு 2ம் நிலைக்கு வரவும்.
இதே போல் இடது பக்கமும் செய்ய வேண்டும்.இரண்டாம் நிலைக்கு வந்து நேராக (தாடாசனாக்கு) வரவும்.

பலன்கள்:

கால் தசைகள் பலமடைகிறது மற்றும் உருவம் பெறுகின்றன.
சுளுக்கு இருந்தால் விலகி விடும்.வயிற்றுப் பகுதி உறுப்புகள் நன்றா வேலை செய்து ஜிரண சக்தி அதிகரிக்கும்,மலச்சிக்கல் நீங்கும்,
மனவலிமையை கூட்டக்கூடியது..

🌹சுவாமி விவேகானந்தா யோகா பயிற்சி மையம். தேனி 🌹

Want your business to be the top-listed Gym/sports Facility in Theni?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Location

Address


Rathinam Nagar
Theni
625531
Other Theni gyms & sports facilities (show all)
Rathinam Nagar Cricket Club - RCC Rathinam Nagar Cricket Club - RCC
Rathinam Nagar
Theni, 625531

Club of cricket formed during the end of 2013 with more than 30 players.

RVita ayurveda treatment and yoga centre theni. RVita ayurveda treatment and yoga centre theni.
No.1,post Office Odai Street,near Hotel Western Gatz
Theni

Death clutch Death clutch
7 Rc Street Uthama Palayam
Theni, 625534

Bike riders

Tamilnadu professional  cricketers Tamilnadu professional cricketers
Tamil Nadu
Theni, 625531

cricket is not a sport its my life,!!!!!

Theni - N.S Boys Hr Sec School - Spartans Theni - N.S Boys Hr Sec School - Spartans
N.S.Boys.Hr.Sec.School
Theni, 625531

2007 - 2008, 1'D batch mates community. Has started in Nadar Saraswathi Boys Higher Secondary School, Theni.

Cendect KVK Cendect KVK
West Street,Kamatchipuram
Theni, 625520

CENDECT KVK is a Quasi Government institution sponsored by Indian Council of Agricultural Research (ICAR),Government of India. It was started in March 1994

Theni Bikers freakz Theni Bikers freakz
Theni, 625531

Man and Machine Merged With One.. They are Bikers Theni Bikers Watsapp me: 9698843744 (Munna) -Admin

THENI IAS THENI IAS
NH-49
Theni, 625531

To create Competitve exam awareness

Yamaha - Yasotha Motors,Theni Yamaha - Yasotha Motors,Theni
NH-45
Theni, 625531

We are an Exclusive Yamaha Bike & Scooters Dealer in Theni. Our Showroom displays all the latest models in Yamaha Bikes and Yamaha Scooters.

Appaji Gifts Center Appaji Gifts Center
Velappar Kovil Street
Theni

Kalaistickers theni Kalaistickers theni
Madhurai Road Theni
Theni, 625531

Bike and Car modification, spare ,accessories , Bike car stickering works done here

Jay Physiotherapy Clinic Jay Physiotherapy Clinic
Eswar Plaza, Cumbum Main Road
Theni, 625531

Jay Physiotherapy Clinic was established at Theni to provide quality and premier Physiotherapy services and care to community in and around Theni, India.