Sports Media

Sports Media

Share

அனைத்து விதமான விளையாட்டு செய்திகளையும் உடனுக்குடன் பார்வையிடலாம்.

11/05/2026

சம்மாந்துறை பிரதேச மட்ட கிரிக்கெட் போட்டியில் சம்பியனானது மதினா அணி!

சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவின் ஒரு பகுதியாக கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சம்மாந்துறை பொது மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் STR மற்றும் மதினா ஆகிய அணிகள் மோதிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மதினா
விளையாட்டு கழகம் வெற்றி பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தகுதி பெற்றது.

10/05/2026

RCB goes top of the points table! ✅

MI and LSG are knocked out from IPL 2026!

10/05/2026

மும்பை இந்தியன்ஸை தோற்கடித்த பெங்களூரூ அணி!

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி, 1 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

10/05/2026

கல்முனை பிரதேச மட்ட கிரிக்கெட் போட்டியில் சம்பியனானது ஜீனியஸ் அணி!

கல்முனை பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவின் ஒரு பகுதியாக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2026.05.10 நற்பட்டிமுனை பொது மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் ஜீனியஸ் மற்றும் லெஜெண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜீனியஸ் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தகுதி பெற்றது.

10/05/2026

அமீர் கோப்பை 2026 சம்பியனானது அல் கராஃபா!

கத்தாரில் உள்ள கலீஃபா சர்வதேச
மைதானத்தில் நேற்று நடைபெற்ற 54வது அமீர் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், அல் கராஃபா
அணி 4-1 என்ற கோல் கணக்கில்
அல் சத் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் மூலம் அல் கராஃபா அணி தனது 9வது அமீர் கோப்பையை வென்றதுடன், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் பட்டத்தை தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

10/05/2026

🔵இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பு மீண்டும் குசல் மெண்டிஸிடம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள குழுமத்தில் இணையுங்கள் 👇🏻

https://chat.whatsapp.com/FXVUDgTcISF2XcxjLft28C

10/05/2026

IPL வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைச்சதம் (Fastest Fifty) பெற்றவர்கள்.

🫵 அந்த வரிசையில்👇

🏏Urvil Patel (CSK) → 13 பந்துகள்(vs LSG, 2026)
🏏Yashasvi Jaiswal (RR) → 13 பந்துகள் (vs KKR, 2023)
🏏KL Rahul (PBKS) → 14 பந்துகள் (vs DC, 2018)
🏏Pat Cummins (KKR) → 14 பந்துகள் (vs MI, 2022)
🏏Romario Shepherd (RCB) → 14 பந்துகள் (vs CSK, 2025)

10/05/2026

ஒலுவில் 02ம் பிரிவு அல் சலாம் இளைஞர் கழகம் சம்பியனானது.

(முஹம்மட் சிஜாம்)

36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டி – 2026 அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டி அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.எஸ்.எம்.றசீன் அவர்களின் தலைமையில் இன்று (10)
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது,

இப் போட்டியில் ஒலுவில் 02ம் பிரிவு அல் சலாம் இளைஞர் கழகம் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றி மாவட்ட மட்ட போட்டிக்கு தகுதி பெற்றது.

10/05/2026

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் அரைசதம் அடித்து உர்வில் படேல் அதிரடி காட்டினார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவரின் அதிவேக அரைசதம் இது. ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனையை சமன் செய்தார்.

10/05/2026

இலங்கை வெள்ளைப் பந்து அணிகளின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்!

இலங்கை கிரிக்கெட் வாரியம், மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலிருந்து ஒருநாள் மற்றும் T20 அணிகளுக்கான புதிய தலைவராக குசல் மெண்டிஸை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10/05/2026

எல்லே போட்டியில் நிந்தவூர் - 13 ரஹ்மானியா இளைஞர் கழகம் சம்பியனானது.

நிந்தவூர் பிரதேச மட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே போட்டி இன்று (10) நிந்தவூர் பொது மைதானத்தில் நடைபெற்றது, இப்போட்டியில் நிந்தவூர்-13
ரஹ்மானியா இளைஞர் கழகம் சம்பியனானது.

Want your business to be the top-listed Gym/sports Facility in Ampara?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


233B Meera Nagar Road Nintavur/11
Ampara