இலங்கை கிரிக்கட் அணியின் ஆதரவாளர்கள்

  • Home
  • Sri Lanka
  • Colombo
  • இலங்கை கிரிக்கட் அணியின் ஆதரவாளர்கள்

இலங்கை கிரிக்கட் அணியின் ஆதரவாளர்கள் வெற்றியோ தோல்வியோ எம் ஆதரவு என்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கே!

நமக்கு மட்டும் இங்கிலாந்து மாறி கஷ்டமான டீம்களோட மெச் வருது, ஆனா ஜப்பான் காரன் ஈஸியா இந்தியாவோட மெச்ச போட்டு எடுத்திக்கி...
05/09/2026

நமக்கு மட்டும் இங்கிலாந்து மாறி கஷ்டமான டீம்களோட மெச் வருது, ஆனா ஜப்பான் காரன் ஈஸியா இந்தியாவோட மெச்ச போட்டு எடுத்திக்கிட்டான் 😤.

ஷானக்க அதிரடியா ஆடி ரன்ஸ் எடுக்க மத்தப் பக்கம் ஹஸரங்க விக்கெட் எடுப்பான். இலங்கையும் Super Hit வின் ஒன்ட எடுக்கும். இதே ...
04/09/2026

ஷானக்க அதிரடியா ஆடி ரன்ஸ் எடுக்க மத்தப் பக்கம் ஹஸரங்க விக்கெட் எடுப்பான். இலங்கையும் Super Hit வின் ஒன்ட எடுக்கும். இதே மாறி ஒரு சம்பவம் இன்டைக்கும் நடந்திருக்கு! 🥵

இந்தியாவ கண்டா மட்டும்தான் அடிப்பான் போல. 🥹
04/09/2026

இந்தியாவ கண்டா மட்டும்தான் அடிப்பான் போல. 🥹

சிக்ஸர் மன்னர்கள் பொறந்த வெஸ்ட் இன்டீஸ் மண்ணுக்கே போய் அங்க ஒரு மெச்சில மொத்தமா 12 சிக்ஸர்கள அடிச்சிட்டு அவனுகளுக்கே பாட...
04/09/2026

சிக்ஸர் மன்னர்கள் பொறந்த வெஸ்ட் இன்டீஸ் மண்ணுக்கே போய் அங்க ஒரு மெச்சில மொத்தமா 12 சிக்ஸர்கள அடிச்சிட்டு அவனுகளுக்கே பாடம் எடுத்திட்டு வாறான். தஸ்ஸா! 🥵🥵🔥🔥🔥

த்தா What an Innings, 12 Sixers 🔥 Fastest 100 in CPL in just 39 Balls. தசுன் ஷானக்க! 🥵🥵🥵
04/09/2026

த்தா What an Innings, 12 Sixers 🔥 Fastest 100 in CPL in just 39 Balls. தசுன் ஷானக்க! 🥵🥵🥵

கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு அவர்களின் சொந்த மண்ணிலேயே சவால் விடுவது எப்போதுமே சாதாரண விஷயமல்ல. அவுஸ்திரேலிய ...
03/09/2026

கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு அவர்களின் சொந்த மண்ணிலேயே சவால் விடுவது எப்போதுமே சாதாரண விஷயமல்ல. அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் அசுர பலம் கொண்ட கங்காருப் படையை வீழ்த்துவது பல அணிகளுக்குக் கனவாகவே இருந்திருக்கிறது. ஆனால், 2017-ல் இலங்கை T20 அணி அங்கு நிகழ்த்திய மேஜிக்... அது கிரிக்கெட் ரசிகர்கள் காலத்துக்கும் மறக்க முடியாத ஒரு பொற்காலம்!
அப்போது அவுஸ்திரேலியாவில் இலங்கை அணிக்கு இருந்த T20 சாதனை என்பது அசுரத்தனமானது. அவுஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, சொந்த மண்ணிலேயே அவர்களை மிரள வைத்தது இலங்கை அணி.
குறிப்பாக அந்த இரண்டாவது T20 போட்டி... கிரிக்கெட் த்ரில்லர்களின் உச்சகட்டம்! 🔥
கடைசி 2 ஓவர்களில் இலங்கையின் வெற்றிக்குத் தேவைப்பட்டது 36 ரன்கள்! கங்காரு வீரர்கள் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்; மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத் துடிப்பும் எகிறியது. 'இனி இந்த ஆட்டத்தில் மீண்டு வர முடியாது' என நினைத்த நேரத்தில், ஒற்றை ஆளாக நின்று போர்க்களத்தை மாற்றிக் காட்டினார் அசேல குணரத்ன!
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்து, கடைசி பந்து வரை பதற்றத்தை இழுத்துச்சென்று, 46 பந்துகளில் 84* ரன்கள் விளாசி அந்த வரலாற்று வெற்றியைப் பறித்துக் கொடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 36 ரன்களை விளாசி T20 சேஸிங்கில் ஒரு புதிய உலக சாதனையையே படைத்தது இலங்கை.
அந்த வெற்றியோடு 2-1 எனத் தொடரையும் கைப்பற்றி, அவுஸ்திரேலிய மண்ணில் தங்களது ஆதிக்கத்தை உலகிற்கு பறைசாற்றியது அன்றைய சிங்கப் படை! 🇱🇰
அன்றைக்கு அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை படைத்த அந்த 'Perfect Record'-ம், அசேல குணரத்னவின் அந்த அசுர ஆட்டமும் இன்றளவும் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாபெரும் கதை!

நீங்களும் அந்த மெச்சை நேரலையில பார்த்து சிலிர்த்துப் போனவரா? உங்க நினைவுகளை கமெண்ட்ல சொல்லுங்க! 👇🔥

ஐ.பி.எல். போட்டிகளில் பல சாதனைகளை நிலைநாட்டியும் 2018 ஐ.பி.எல். ஏலத்தில் மலிங்கவை எந்த அணியும் வாங்கவில்லை. ஒதுக்கப்பட்ட...
02/09/2026

ஐ.பி.எல். போட்டிகளில் பல சாதனைகளை நிலைநாட்டியும் 2018 ஐ.பி.எல். ஏலத்தில் மலிங்கவை எந்த அணியும் வாங்கவில்லை. ஒதுக்கப்பட்டார். ஆனால் பின்னர் மலிங்கவை மும்பை பின்னர் 2 கோடி இந்திய ரூபாய்க்கி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலை ஏற்பட்டது. 2019 ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு மும்பை தேர்வாகியது. மலிங்க முக்கிய காரணமாகின்றார். அத்துடன் இறுதிப் போட்டியில் மிகச் கச்சிதமாக சென்னை அணியுடன் இறுதி ஓவரை வீசி. வெறும் ஒரு ஓட்டத்தினால் மும்பை அணியை சம்பியனாக்குகின்றார். தன்னை ஒதுக்கியவர்களுக்கு தறது முக்கியத்துவத்தை காட்டு சாதித்தார் எம்மண்ணின் மைந்தன். அதனை கீழே படங்களில் பார்க்க முடியும். ❤️🔥

மொத்த காமிடியன்களையும் வெச்சு ரெண்டு டீம். சோனால் தினுஷ எங்கடாவ்!
02/09/2026

மொத்த காமிடியன்களையும் வெச்சு ரெண்டு டீம். சோனால் தினுஷ எங்கடாவ்!

இலங்கை இழந்த அதிரடி நாயகன் நிக்ஸி அஹமட், அம்பாறையின் நிந்தவூரைச் சேர்ந்த நிக்ஸி அஹமட், சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் ஆர...
01/09/2026

இலங்கை இழந்த அதிரடி நாயகன் நிக்ஸி அஹமட்,

அம்பாறையின் நிந்தவூரைச் சேர்ந்த நிக்ஸி அஹமட், சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் ஆர்வத்துடன் போட்டிஙளில் ஆட ஆரம்பித்தார். பின்னர் இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் பாடசாலைகளில் ஒன்றான கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்னணி கிரிக்கெட் வீரராக மாறிய அவர் பாடசாலை கிரிக்கெட்டில் ஓட்ட இயந்திரமாக பல முன்னணி கிரிக்கெட் பாடசாலைகளைக்கு எதிராக ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதேநேரம் துடுப்பாட்டம் ஒரு பக்கமிருக்க வேகப்பந்துவீச்சாளராகவும் இவர் பல போட்டிகளில் பிரகாசித்துள்ளார். பாடசாலை கிரிக்கெட்டின் பின்னர் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டில் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய போதும், சில காரணங்களால் தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது.
இன்று பல மென்பந்து தொடர்களில் குறிப்பாக அண்மைய தனுஷ்க சம்பத் மென்பந்து லீக் தொடரில் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர்களை பறக்கவிடும் இவர் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டு சரியான வழிகாட்டுதல்களை பெற்றிருந்தால் இலங்கை கிரிக்கெட் இனம் கண்ட மிகச் சிறந்த துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக மாறியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
Niksy Ahamed

உங்களுக்கு எல்லாம் நினைவிருக்குமோ தெரியாது. 2015 உலகக் கிண்ணம். இலங்கை - அவுஸ்திரேலியா இடையிலான போட்டி. போட்டி நடைபெற்ற ...
01/09/2026

உங்களுக்கு எல்லாம் நினைவிருக்குமோ தெரியாது. 2015 உலகக் கிண்ணம். இலங்கை - அவுஸ்திரேலியா இடையிலான போட்டி. போட்டி நடைபெற்ற இடம் சிட்னி என்பதால் அவுஸ்திரேலியாவிற்கு சொந்த மைதான ஆதிக்கம் வேறு. அவுஸ்திரேலியா அப்போதைய ஆசியாவின் ஜாம்பவான் இலங்கைக்கு எதிராக முதல் பெட்டிங் செய்து 376 ஓட்டங்ஙள் பெறுகின்றது. இலங்கைக்கு வெற்றி இலக்கு 377 ஓட்டங்கள். சங்கா சிறந்த ஆரம்பம் வழங்குகின்றார். அடுத்தது யார் போட்டியினை கொண்டு செல்வது என்று வரும் போது, நான் என் தாய் நாட்ட பாத்துக்குறேன்னு வாறான் தலைவன் தினேஷ் சந்திமால். இந்தியாவ கண்டா சனத் ஜயசூரிய எப்டி வெறித்தனமா ஆடுவாரோ அதே மாறியான ஆட்டம். 20 போலுக்குள்ள 50 ரன்ஸையும் தாண்டிட்டார். இலங்கையும் வென்டு ஆசியாவின் ஒரே ஜாம்பியன் கிரிக்கெட் அணின்னு நிரூபிக்க பாக்கும் போது என்னா துரதிர்ஷ்டம் அந்த மெச்சில தலைவன்கு Injury வந்திட்டு. அதால நாம 377 ரன்ன சேஸ் பண்றதும் Fail ஆகினிச்சி. அப்டி நாட்டுக்காக ஏதாவதுன்னா உயிரை கொடுத்து ஆடக்கூடிய ஒரு பிளேயர் இவர். அந்த மெச்சின் பின்னர் தலைவனின் ஆட்டத்தை நிறையப் பேர் புகழ்ந்து பேசுனாங்க. இப்பயும் அதே மாறி Injury. தலைவன் விரைவில் பூரண உடல் குணமடைய பிரார்த்தனைகள்! Get well soon Chandi! ❤️

Address

Colombo
00001

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை கிரிக்கட் அணியின் ஆதரவாளர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share