Hindu Youth Sports Club, Avarangal.

Hindu Youth Sports Club, Avarangal.

Share

கரப்பந்தாட்டம் என்பது நம் உயிர் மூச்சு போன்றது.. 🏐

27/07/2026

இன்று ஆரம்பமாகிறது..
JVL 3.0

அனைத்து அணிகள், உரிமையாளர்கள், வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், நடுவர்கள், ஏற்பாட்டாளர்கள், அனுசரனையாளர்கள், மற்றும் JVL ஒருங்கிணைப்பாளர்,யாழ் கரப்பந்தாட்ட சங்கம், கரப்பந்தாட்ட ரசிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகம்.

17/07/2026

🤞

அரியாலை திருமகள் சன சமூக நிலையத்தின் 75-வது ஆண்டு பவள விழா கரப்பந்தாட்டப் போட்டி!

நேற்று இடம்பெற்ற #இறுதிப்போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி சாம்பியன்களானது ஆவரங்கால் இந்து இளைஞர்.. விளையாட்டுக்கழகம்.🤗

அனுபவம்,அதிரடி மற்றும் நுட்ப ஆட்டத்தின் உச்சம் ஜனன்,நிதர்சி,அசோகன் ஆகிய மூவரோடு,ஆக்க்ரோசம் நிறைந்த இளம்படை மாதுழன்,சஞ்சை,டிலக்சன் ஆகிய மூவரும் இணைய அந்த கூட்டணியோடு சிந்துவும் சேர 3:1 என்ற செற் கணக்கில் வெற்றியீட்டிய ஆவரங்கால் இந்து..

முதல் சுற்றிலே 15:07, 16:08 என்ற புள்ளிகள் அடிப்படையில் பல்கலைக்கழக அணி முன்னிலையில் இருக்க, தமக்கே உரிய பிரத்தியேகமான பாணியில் எழுச்சிகொண்ட இந்து 15:23 என்ற புள்ளிகளுக்கு முன்னேறி, இறுதில் 21:25 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் சுற்றை இழந்தது,
ஆனாலும் தொடர்ந்து அடுத்தடுத்த 3 சுற்றுக்களையும் அதிரடியாக கைப்பற்றி 3:1 என்ற செற்கணக்கில் வெற்றியை தமதாக்கியது.

இறுதிப்போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார் ஆவரங்கால் இந்துவின் #சஞ்சை

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குழு நிலை ஆட்டங்களின் முடிவும்
அரையிறுதி போட்டிகளும்..பற்றிய சிறுபார்வை...

குழு A
A1 :ஆவரங்கால் இந்து இளைஞர்
A2 :யாழ் பல்கலைக்கழகம்

குழு B
B1 :கெருடாவில் ஐக்கியம்
B2 :புத்தூர் வளர்மதி

குழு நிலை போட்டிகளின் முடிவில்...
அரையிறுதி ஆட்டத்திலே..
குழு Aயில் அனைத்து போட்டிகளையும் வென்ற #ஆவரங்கால் இந்து இளைஞர்
#புத்தூர்_வளர்மதி அணியையும்

#யாழ்_பல்கலைக்கழக அணியானது குழு Bயில் அனைத்து போட்டிகளையும் வென்ற #கெருடாவில்_ஐக்கிய அணியையும் வீழ்த்தி
#மீண்டும் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டது..

பரபரப்பான இறுதிப்போட்டியின் முடிவில் மீண்டும் யாழ் பல்கலைகழக அணியை வீழ்த்தி #சாம்பியன்களானது ஆவரங்கால் இந்து 💚

சாம்பியன்ஸ் அணியின் வீரர்கள் கஜே,சிந்து,மாது,விதுசன்,சஞ்சை,ஜெனன்,செந்தாழன்,ஜெனா,அசோகன்,நிதர்சி ஆகியோரோடு பயிற்றுவிப்பாளர் தார்மிகனையும் படத்தில் காணலாம்.

இறுதிப்போட்டி மாத்திரமன்றி தொடர் முழுவதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ் பல்கலைக்கழக அணிக்கும் தொடரில் கலந்து கொண்ட அனைத்து கழகம் மற்றும் வீரர்களுக்களுக்கும்,போட்டி ஏற்பாட்டாளர்கள்,நடுவர்கள் ரசிகர்கள் என அத்தனை கரப்பந்தாட்ட பிரியர்களுக்கும் ஆவரங்கால் இந்துவின் வாழ்த்துக்கள்..

Ariyalai Jaffna Northern Province, Sri Lanka Hindu Youth Sports Club, Avarangal.

15/07/2026

மாபெரும் இறுதிப்போட்டி நாளை...

அரியாலை திருமகள் சன சமூக நிலையத்தின்
75-வது ஆண்டு பவள விழா கரப்பந்தாட்டப் போட்டி!

இறுதிப்போட்டியில் மீண்டும் #யாழ்_பல்கலைக்கழக அணியை சந்திக்கிறது..ஆவரங்கால் இந்து

A பிரிவினருக்கான ஏற்கனவே நடைபெற்ற
அரையிறுதிப்போட்டியில் #புத்தூர்_வளர்மதி விளையாட்டுக்கழகத்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த #ஆவரங்கால்_இந்து_இளைஞர் விளையாட்டுக்கழகம் மறு முனையில் #கெருடாவில்_ஐக்கிய அணியை வென்று காத்திருக்கும் #யாழ்_பல்கலைக்கழக அணியை (16/07/2026 வியாழக்கிழமை) நாளை மாலை 7:30 மணியளவில் இறுதிப்போட்டியில் சந்திக்க காத்திருக்கிறது.

அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

Ariyalai

07/07/2026





ஆரம்பாகவிருக்கும் யாழ் கரப்பந்தாட்ட லீக் தொடரின் மூன்றாவது பருவ காலத்தின் வீரர்களுக்கான ஏல நிகழ்விலே கலந்துகொள்ளவிருக்கும் அனைத்து அணிகளுக்கும் மற்றும் வீரர்கள் ,மற்றும் யாழ் கரப்பந்தாட்ட சங்கம்,மற்றும் JVl குழுமத்துக்கும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் வாழ்த்துக்கள்.

07/07/2026

நேற்றைய இறுதிப்போட்டியிலும் #ஆவரங்கால் இந்து இளைஞர் #முழுமையான #ஆதிக்கம்.

கைதடி மேற்கு சரஸ்வதி சன சமூக நிலையத்தின் 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வந்த யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டி தொடரின் இறுதிப்போட்டியிலே..

#ஜனன் மற்றும் #நிதர்சியின் ஆளுமை நிறைந்த அனுபவமும்
#சஞ்சை, #செந்தாழனின் ஆக்ரோச ஆட்டமும்
#மாதுளன், #டிலக்சனின் நிதானம் கலந்த அதிரடியும் ஒன்று சேர
அங்கே அறுவரோடு எழுவராய் #ஜெனாவின் கூட்டணியில் #கெருடாவில்_ஐக்கிய அணியை 3:0 என்ற நேர் செற்கணக்கில் வீழ்த்தி கைதடி சரஸ்வதி விளையாட்டுக்கழகத்தின் #சாம்பியன்களானது #ஆவரங்கால்_இந்து_இளைஞர்.. விளையாட்டுக்கழகம்.🤗

#அன்றும் #இன்றும் #என்றும்
போட்டிகள் நடைபெறும் இடம் எதுவாக இருந்தாலும் சரி..அந்த மைதானத்தை எங்கள் சொந்த மைதானம் போன்ற உணர்வை ஏற்படுத்தி எங்களை மகிழ்விக்கின்ற எங்கள் இரசிகர்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.. இது இன்று நேற்று ஆரம்பித்த பந்தம் இல்லை.. நான்கு தசாப்தங்களாக தொடர்ந்து வரும் உன்னத உறவு இது..

எமது ஒவ்வொரு வெற்றிகளும் ஒவ்வொரு ரசிகர்களுக்குமான சமர்ப்பணம்.🤝

Jaffna கைதடி மேற்கு சனசமூக நிலையம் Northern Province, Sri Lanka ஆவரங்கால் மத்தியவிளையாட்டுக்கழகம் கைதடி சரஸ்வதி சனசமூக நிலையம்

06/07/2026

மீண்டும் #இறுதிப்போட்டியில் இந்து இளைஞர்

கைதடி மேற்கு சரஸ்வதி சன சமூக நிலையத்தின் 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டி தொடரில் #இன்று இறுதிப்போட்டியில் களம் காண காத்திருக்கிறது ஆவரங்கால் இந்து இளைஞர் அணி

நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் #புத்தூர் கலைமதி அணியையும் நேற்று இடம்பெற்ற அரையிறுதிப்போட்டியில் #மட்டுவில் மோகனதாஸ் அணியையும் வென்று
மறுமுனையில் அரையிறுதிப்போட்டியை வென்று காத்திருக்கும் #கெருடாவில் ஐக்கிய அணியை இன்று இறுதிப்போட்டியில் சந்திக்கிறோம்.

6/7/2026 திங்கட்கிழமை- #இன்று மாலை #7 மணிக்கு #கைதடி #சரஸ்வதி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெறும் ஆட்டத்தை காண...

அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

20/06/2026

நம் கழக வீரன் #குபேரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
┏┓┏┓🎈
┃┗┛ᴀᴘᴘʏ_🎂
┃┏┓┃ 🄱🄸🅁🅃🄷🄳🄰🅈
┗┛┗┛Kuperaa💪🏻

19/06/2026

அரியாலை திருமகள் சன சமூக நிலையத்தின்
75-வது ஆண்டு பவள விழா கரப்பந்தாட்டப் போட்டி!

அரையிறுதியில் #ஆவரங்கால்_இந்து
முழுமையான ஆதிக்கம்.. இறுதிப்போட்டியில் மீண்டும் #யாழ்_பல்கலைக்கழக அணியை சந்திக்கிறது..ஆவரங்கால் இந்து

A பிரிவினருக்கான நேற்று இரவு நடைபெற்ற
அரையிறுதிப்போட்டியில் #புத்தூர்_வளர்மதி விளையாட்டுக்கழகத்தை 3:0 என்ற நேர் செற் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது #ஆவரங்கால்_இந்து_இளைஞர் விளையாட்டுக்கழகம்.

வெற்றிகள் புதிதல்ல சில தோல்விகள் புதிராவதும் புதிதல்ல.
ஒன்றை ஏற்கும் போது மற்றொன்றை ஏற்க மறுத்திடும் மனங்களே மாறுபடல் வேண்டும்.. மாறாக முற்றுப்பெற்ற முடிவுகள் அல்ல...

வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அது ரசிகர் நிறைந்த ஒரு ரசனை மிகுந்த ஆட்டம்.
தோல்விகள் தற்காலிகமான ஒன்று.. ஆனால் ரசிகர் ஆதரவும் அன்பும் என்றும் நிரந்தரமானது..

Ariyalai கலைமகள் விளையாட்டுக்கழகம் AKSC Northern Province, Sri Lanka Jaffna ஆவரங்கால் மத்தியவிளையாட்டுக்கழகம் Shakthi FM Volleyball World JDVB - Jaffna District Volleyball Association சர்வோதய விளையாட்டுக்கழகம் ஆவரங்கால் கைதடி மேற்கு சனசமூக நிலையம் #கைதடி

18/06/2026

அரியலை திருமகள் சமூக நிலையத்தின் 75-வது ஆண்டு பவள விழா கரப்பந்தாட்டப் போட்டி!

அரையிறுதி ஆட்டம் காண அனைவரும் வாரீர்!

18/06/2026 - இன்று மாலை 7 மணிக்கு..
அரியாலை திருமகள் சன சமூக நிலையம் முன்பாக...

#புத்தூர் வளர்மதி vs #ஆவரங்கால் இந்து இளைஞர்

குழு நிலை ஆட்டங்களின் முடிவும்..அரையிறுதி ஆட்டமும்..

கெருடாவில் ஐக்கியம் எதிர் புத்தூர் வளர்மதி - கெருடாவில் ஐக்கியம் வெற்றி பெற்றது

ஆவரங்கால் இந்து இளைஞர் எதிர் யாழ் பல்கலைக்கழக அணி - ஆவரங்கால் இந்து இளைஞர் வெற்றி

நேற்று முன்தினம் இடம்பெற்ற #புத்தூர்_வளர்மதியுடனான (B2) போட்டியில் வெற்றி பெற்ற #கெருடாவில் ஐக்கிய விளையாட்டுக்கழகம்..(B1)
தமக்கான அரையிறுதிப்போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை (A2) எதிர்த்தாட காத்திருக்கும் அதே வேளை

நேற்றைய #யாழ்_பல்கலைக்கழக அணியுடனான் போட்டியில் வெற்றியீட்டிய #ஆவரங்கால்_இந்து_இளைஞர்_விளையாட்டுக்கழகம் (A1) நேற்று முன் தினம் தோல்வியுற்ற புத்தூர் வளர்மதி அணியை சந்திக்கிறது.

#அரியாலை #யாழ்ப்பாணம்

Photos from Hindu Youth Sports Club, Avarangal.'s post 17/06/2026

அரியலை திருமகள் சமூக நிலையத்தின் 75-வது ஆண்டு பவள விழா கரப்பந்தாட்டப் போட்டி!

நேற்று இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக அணியுடனான போட்டியில் 3:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றோம்.
25:20, 18:25, 25:15, 25:21

Want your business to be the top-listed Gym/sports Facility in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Hindu Youth Road, Avarangal West, Puttur
Jaffna
40158