It solutions & Info

It solutions & Info

Share

for IT IT for About IT

13/11/2013

உங்க கம்ப்யூட்டர் ஸ்லோவா?
4 comments


வழக்கமாக கம்ப்யூட்டர் பயனர்கள் சொல்லும் புலம்பல்தான் இது.. "என்னுடைய கம்பயூட்டர் ரொம்ப ஸ்லோவா இருக்கு.. என்ன செய்றதுன்னே தெரியல.. "

நீங்களும் இதுபோல புலம்பியிருக்கீங்களா? தொடர்ந்து படித்துப்பாருங்க..உங்களுக்கு கண்டிப்பா ஒரு தீர்வு கிடைக்கும்.

கம்ப்யூட்டர் ஸ்லோ ஆவதற்கு என்ன காரணம்?

நிறைய குப்பையான பைல்கள் கம்ப்யூட்டரில் தேங்கி இருப்பது.
தேவையற்ற புரோகிராம்கள் கம்பஃயூட்டரில் போட்டு அடைத்து நெருக்கிக் கொண்டிருப்பது.
unga-computer-slowva-theervu

இணையம் பயன்படுத்துபவர் என்றால் வைரஸ், மால்வேர் புரோகிராம்கள் போன்றவை.

என்ன செய்யலாம்? என்ன செய்தால் கம்ப்யூட்டர் பழையபடியே ஸ்பீட் ஆகும்?

கம்ப்யூட்டர் வேகமாக வொர்க் ஆக வேண்டுமென்றால் முதலில் உங்களுக்குத் தெரிந்த தேவையில்லை கோப்புகளை நீக்குங்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட டூப்ளிகேட் வேண்டாவே வேண்டாம்.

மிக்க முக்கியமான கோப்புகள் என்றால் அதற்கென்று ஒரு தனி ஹார்ட் டிஸ்க் வைத்து பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கம்ப்யூட்டரில் டெம்பர்ரி பைல்கள் இருக்கும். இது தேவையில்லா பைல்கள்.
கம்பஃயூட்டரில் Run விண்டோவில் %temp% என அடித்தால் கிடைக்கும் போல்டரைத் திறந்து அதிலுள்ள டெம்பர்ரி கோப்புளை அனைத்தையும் டெலீட் செய்யலாம்.

இதற்கும் ஒரு சாப்ட்வேர் உண்டு. C cleaner என்ற சாப்டவேர் கம்ப்யூட்டரில் உள்ள டெம்ப் பைல்களை மட்டுமல்ல... பிரவுசர் குக்கீஸ், ஹிஸ்ட்ரி போன்ற தேவையில்லாத பைல்களையும் அழித்துக்கொடுக்கிறது.

எப்போதோ எதற்காகவோ பயன்படுத்திய சின்ன சின்ன சாப்வேர்கள் எல்லாம் கம்ப்யூட்டரில் இருக்கும். அதையெல்லாம் தேடிப்பிடித்து அன் இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.

டெஸ்க்டாபில் உள்ள தேவையில்லா மென்பொருள்களின் Shortcut ஐகான்கள் இருக்கும். அதையும் டெலீட் செய்துவிடுங்கள்.
ஹார்ட் டிரைவை Defrag செய்துவிடுங்கள். விண்டோஸே அதற்கான வசதிகளைக் கொடுக்கிறது.

பூட் பிராசஸ் வேகத்தைக் கூட்டுங்கள்... பூட்டிங்கின்போது தேவையற்ற புரோகிராம்கள் துவங்குவதை குறைத்துவிடுங்கள். ஸ்டார்ட் அப் புரோகிராம்களை குறைப்பதற்கு சொல்யூட்டோ டூல் பயன்படும். கூகிள் "soluto tool" என தேடிப் பெறலாம். வேறு நிறுவன டூல்களும் உண்டு.

கம்ப்யூட்டர் ரெஜிஸ்ட்டரியில் பிரச்னை இருந்தாலும் கம்ப்யூட்டர் வேகம் குறையும். அதனால் ரெஜிஸ்ட்ரி பிரச்னையை சரிசெய்யுங்கள். பிரச்னையை கண்டுபிடிக்கவும், சரிசெய்யவும் உங்களுக்கு "Registry Repair tool" பயன்படும். இந்த டூலை கூகிளில் தேடி பெறமுடியும். கிளாரி சாப்ட் (Glarysoft) என்ற தளத்தில் கிடைக்கும் ரெஜிஸ்ட்ரி ரிப்பேர் டூல் நன்றாக இயங்குகிறது.

ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு டூலைப் பயன்படுத்த வேண்டுமா? அனைத்து பிரச்னைகளையும் ஒரே மென்பொருள் மூலம் தீர்க்க முடியாதா என்றபவர்களுக்கும் விடை உண்டு. ட்யூன்அப் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி மேற்கண்ட அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க முடியும். ட்யூனப் தளம் செல்ல கூகிள் சர்ச்சில "TuneUP" எனக்கொடுத்து தேடுங்கள்.

கிடைக்கும் தேடல்முடிவிலிருந்து உங்களுக்கு வேண்டிய டூலைப் பெற இணைப்பு கிடைக்கும். அதிலிருந்து வேண்டிய டூலை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரில் உள்ள பிரச்னைகளை சரிசெய்யுங்கள்.

இறுதியில் முன்பைவிட உங்கள் கம்ப்யூட்டர் "ஸ்பீடாக" இருக்கும். அதில் சந்தேகமில்லை.
Top 10 Reason for computer slow process:

Your computer was running for a long time without a reboot
Not Enough of Free Hard Drive Space
Hard drive corrupted or fragmented
Too Many Background programs
Your computer is Infected with a Virus or Malware
Hardware conflicts and outdated drivers
Your version of Windows or other software is out of date
Computer or processor is overheating
Your PC requires a Memory upgrade
Old computer
Hardware Failure

13/11/2013

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1

விண்டோஸ் சிஸ்டமானது பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டு தற்பொழுது விண்டோஸ் 8 பதிப்பை எட்டியுள்ளது. விண்டோஸ் 8 பதிப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, முற்றிலும் வேறுபட்ட பயனர் இடைமுகத்தை கொண்டுவந்தது மைக்ரோசாப்ட்.

ஸ்டார்ட் பட்டன், டெஸ்க்டாப் ஸ்கிரீனையேப் பயன்படுத்தி பழகிய விண்டோஸ் பயனர்கள் திடீரென விண்டோஸ் 8-ன் புதிய மாற்றங்களை ஏற்றுகொள்ள முடியவில்லை. டெஸ்க்டாப் ஸ்கீரீனிற்குப் பதிலாக ஸ்டார்ட் ஸ்கிரீன் தோன்றுவதை ஒரு வித மிரட்சியுடன் உணர்ந்தார்கள்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இதுபோன்று உள்ள சில குறைபாடுகளை நீக்கி மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு விண்டோஸ் 8.1 வெளிவர உள்ளது.

Windows-8.1-features-with-tips-and-tricks

விண்டோஸ் 8.1 சிறப்பம்சங்கள்:(Features of Windows 8.1)

விண்டோஸ் 8.1ல் நீங்கள் Application-களை சிறிது நேரத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் அது தானாகவே close ஆகி விடும்.
விண்டோவை க்ளோஸ் செய்வதற்கு நீங்கள் ஸ்கிரீனில் மேல் இருந்து கீழ் வரை Swipe செய்தால் போதுமாம்.
விண்டோஸ் 8ல் Cloud Service வசதி உள்ளது.
அதனால் இதனை பயன்படுத்துபவர்கள் தனிப்பட்ட மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் வைத்து லாக் இன் செய்தால் Microsoft Cloud Storage, E-mail போன்றவைகளை பயன்படுத்தலாம்.
உங்களுக்கு Privacy தேவை என்றால் விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருந்து ரைட் சைடு Swipe செய்து Settings -> Privacy Settings வைத்துக் கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 ஸ்டார்ட் பட்டனில் நிறைய புதிய அமைப்புகள் உள்ளது.
விண்டோஸ் 8.1ல் Modern Mode Altogether தவிர்த்துக் கொள்ளலாம்.

புதிய மேம்படுத்தல்கள்: (New Updates in Windows 8.1)

விண்டோஸ் 8 ல் வழக்கமாகப் பயன்படுத்தும் டெஸ்க்டாப் தொடக்கம் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருந்தது. வாடிக்கையாளர்கள் விண்டோஸ் சிஸ்டம் டெக்ஸ்டாப் ஸ்கிரீனிலேயே தொடங்க விருப்பட்டனர். மீண்டும் அந்த வசதியை விண்டோஸ் 8 ல் கொண்டு வந்துள்ளது மைக்ரோசாப்ட்.

இந்த வசதியைப் பெற ஒரு சிறிய அமைப்பைப் மேற்கொண்டு மாற்றம் செய்ய வேண்டும்.

அதற்கு உங்களுடைய டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்யுங்கள்.
கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு காணப்படும் டேப்களில் when i sign in or close all apps on a screen, go to the desktop instead of Start என்பதை தேடிப்பெறவும்.
அதில் டிக் மார்க்கை ஏற்படுத்தவும்.
அவ்வளவுதான்.இனி, உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்காது.

விண்டோஸ் 8.1 ல் புரோகிராம்களை மாறா நிலையில் அமைக்க: (Set as Default Program)

நம் கம்ப்யூட்டர்களில், இன்டர்நெட் பிரௌசிங் செய்ய பல பிரவுசர்களை அமைக்கிறோம். ஆனால், நாம் ஏதேனும் ஓர் இணைய லிங்கில் கிளிக் செய்திடும்போது, மாறா நிலையில் (default) அமைத்திட்ட பிரவுசரில் தான் அது திறக்கப்படும்.

உதாரணமாக, நீங்கள் Chrome Browser - ஐ திறந்து இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது, இணையப் பக்கத்தில் உள்ள லிங்கில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மாறா நிலை பிரவுசராக செட் செய்யப்பட்டிருந்தால், அதில் தான் அந்த குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்படும்.

இதே போல் தான், நாம் பல மீடியா பிளேயர்கள் (Media Player), இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் (Email Client Progrom) ஆகியவற்றையும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பதிந்து வைத்து இயக்குகிறோம்.

இவற்றில், நமக்குப் பிடித்த புரோகிராமினை எப்படி மாறா நிலைக்குக் (Default)கொண்டு வந்து, அதில் திறக்கக் கூடிய புரோகிராம்களை, குறிப்பிட்ட புரோகிராமில் மட்டுமே திறக்கும்படி அமைப்பது.

இதனை விண்டோஸ் 8.1ல் எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.

முதலில் சார்ம்ஸ் பாரினைத் (Charms bar) திறக்கவும். (Shortcut ==>Win key + C )
Settings தேர்ந்தெடுங்கள்.
Change PC Settings தட்டுங்கள்.
Search and Apps கிளிக் செய்யுங்கள்.
Defaults என்ற வகையின் கீழ், நீங்கள் எந்த புரோகிராமினை Default Program ஆக மாற்ற விரும்புகிறீர்களோ, அதனை செட் செய்திட முடியும்.

உதாரணமாக,

மீடியா பிளேயராக, Windows Media Player என்பதற்குப் பதிலாக, Media Player Classic என்பதனை மாறா நிலையில் அமைக்கலாம்.

இதே போல குறிப்பிட்ட பைல் வகைகளை எந்த புரோகிராமில் திறக்கலாம் என்பதனையும் அமைக்கலாம்.

13/11/2013

ஜாவா புரோகிராமில் வைரஸ்..!
1 comment


கணினி பயன்பாட்டிற்கு எத்தனையோ மென்பொருள்கள் - புரோகிராம்கள் பயன்படுகின்றன. அவற்றில் முக்கியமாக இருக்க வேண்டிய சில அடிப்படைப் புரோகிராம்கள் உண்டு.

தவிர்க்க முடியாத அதிக முக்கியத்துவம் வாய்ந்த புரோகிராம்களும் உண்டு. அப்படிப்பட்ட முக்கியமான புரோகிராம் ஒன்று ஜாவா புரோகிராம்.

ஜாவா புரோகிராமின் பயன்:
(Uses of Java Program)

கணினியில் ஊடாக நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தினீர்கள் என்றால் இந்த புரோகிராமைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அல்லது கேள்வியாவது பட்டிருப்பீர்கள்.

ஜாவா புரோகிராமானது கணினி மற்றும் பிரௌசர் இரண்டிலும் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக இணையத்தை அணுகுவதற்குப் பயன்படும். இன்று உள்ள பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா புரோகிராமைப் பயன்படுத்திதான் வலைத்தளத்தை உருவாக்கி வைத்துள்ளது.

அதுபோன்ற இணையதளங்களை நாம் பயன்படுத்த கண்டிப்பாக ஜாவா புரோகிராமை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். எல்லா கணினிகளிலும் இந்த ஜாவா புரோகிராம் இருக்கும்.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ஹேக்கர்கள் எனப்படும் இணையத்திருடர்கள் இந்த ஜாவா புரோகிராமின் வழியாக ஒரு ஹெச்.டி.எம்.எல் கோப்பை பார்க்க வைத்து அதன் மூலம் கணினிக்கு வைரஸ் அனுப்பிவிடுகிறார்கள்.

இந்த வைரஸ் புரோகிராம் உங்கள் கணினியில் உள்ள தகவல்களை அவர்களுக்கு அனுப்பி வைத்துவிடுகிறது. இதன் காரணமா மிக எளிதாக உங்களாலேயே உங்களுடைய தகவல்கள் அனைத்தும் இணையத் திருடர்களால் திருடப்பட்டுவிடும்.

உங்கள் கணினியில் இந்த ஜாவா புரோகிராம் இன்ஸ்டால் செய்திருந்தால் கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஜாவா புரோகிராமில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை இப்புரோகிராமை உருவாக்கி ஆரக்கிள் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதனால் இது ஒரு உண்மைத் தகவல் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட ஜாவா புரோகிராமை என்ன செய்யலாம்? இந்த பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

முதலில் உங்களுடைய கணினியில் உள்ள பழைய பதிப்பு ஜாவா புரோகிராமை நீக்குங்கள்.
அதற்கு Start=>control panel=>ADD or Remove என்ற முறையில் சென்று புரோகிராமைக் கண்டறிந்து அன் இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.
பிறகு புதிய ஜாவா புரோகிராமை java.com என்ற தளத்தில் சென்று நிறுவிக்கொள்ளவும்.

இந்த வைரஸ் குறைப்பாட்டை சரி செய்து மேன்படுத்தப்பட்ட ஜாவா புரோகிராமை ஆரக்கிள் நிறுவனம் தற்போது டவுன்லோட் செய்ய கொடுத்துள்ளது.

இது முற்றிலும் இலவசமே..

இனியும் தாமதிக்காமல் புதிய மேன்படுத்தப்பட்ட ஜாவா புரோகிராமை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். பழைய ஜாவா புரோகிராமை அன் இன்ஸ்டால் செய்து உங்களுடைய கணினிக்கு ஹேக்கர்களிடமிருந்து விடுதலை கொடுங்கள்.. உங்களுடைய தகவல்களையும் நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள்....

Photos 10/09/2013
10/09/2013

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை! ! ! !

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால்
அதற்கு தகுந்தாற் போல்தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

படம் 1இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும்நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழுவேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.



சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கிRun என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும்திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit ReservableBandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

Want your business to be the top-listed Gym/sports Facility in Mannar?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Pesalai
Mannar