மலையகச்சாரல்

மலையகச்சாரல் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மலையகச்சாரல், Dance Studio, Nuwara Eliya.

02/09/2026
01/09/2026

நு/சென்கிளயர் தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்களை இணைக்கும் வகையில் நடாத்தப்பட்ட 2026 கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது.

Sponsor by 2006 O/L

மத நல்லிணக்கத்தின் மூலம் சமூகத்தை வலுப்படுத்த புதிய நடவடிக்கை: நுவரெலியா மாவட்ட சர்வமதக் குழு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கா...
31/08/2026

மத நல்லிணக்கத்தின் மூலம் சமூகத்தை வலுப்படுத்த புதிய நடவடிக்கை: நுவரெலியா மாவட்ட சர்வமதக் குழு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய வேலைத்திட்டத்தில்

கடந்த ஐந்து ஆண்டுகளாக நுவரெலியா மாவட்டத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நுவரெலியா மாவட்ட சர்வமதக் குழு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்காக “ACT NOW” என்ற தொனிப்பொருளின் கீழ் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில், குழுவை மறுசீரமைத்து அதன் உறுப்பினர்களின் அறிவு மற்றும் சமூகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பட்டறை ஒன்று 31ஆம் திகதி முற்பகல் நுவரெலியா சர்வதேச பௌத்த நிலையத்தில் நடைபெற்றது.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், மத மற்றும் கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பல்வேறு மதங்கள் மற்றும் கலாசாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர் ஒரே மேடையில் ஒன்றிணைந்தமை இந்நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், பாகுபாடின்மை, நம்பிக்கை, உரிமையுணர்வு மற்றும் நல்வாழ்வு ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பங்கேற்பாளர்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பல்வேறு மத மற்றும் சமூகப் பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துதல், கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளுதல் மற்றும் ஒவ்வொருவரினதும் மத மற்றும் சமூக அடையாளங்களை பரஸ்பரம் மதித்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், பங்கேற்பாளர்களுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் குழு ரீதியான செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு குழுச் செயற்பாடுகளும் இடம்பெற்றன.

புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மதத் தலைவர்களிடையே மட்டுமன்றி, பல்வேறு மதங்கள் மற்றும் தேசிய சமூகங்களுக்கிடையிலும் நம்பிக்கை, புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறிப்பாக, இயற்கை அனர்த்தங்கள் அல்லது ஏனைய அவசர நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்களிடையே தேவையற்ற பிளவுகள் ஏற்படுவதைத் தடுப்பதுடன், மதத் தலைவர்கள் மற்றும் சர்வமதக் குழுவின் வலையமைப்பைப் பயன்படுத்தி மக்களுக்கு விரைவான உதவிகளை வழங்குவதும் இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அனர்த்த முகாமைத்துவம், ஒழுக்கமும் பொறுப்புணர்வும் கொண்ட சமூகத்தை உருவாக்குதல், அமைதியான சமூகச் சூழலை ஏற்படுத்துதல் மற்றும் மதப் பன்முகத்தன்மையை சமூகத்தின் பலமாக மாற்றுதல் ஆகியவற்றுக்காக அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் கூட்டுப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் நுவரெலியா போன்ற பல்மத மற்றும் பல்கலாசார மாவட்டத்தில், இத்தகைய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது மத வேறுபாடுகளைப் பிரிவினைக்கான காரணியாக அல்லாது, சமூக ஒற்றுமைக்கான அடித்தளமாக மாற்றுவதற்கான முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகின்றது.

இந்நிகழ்வில் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்டப் பணிப்பாளர் நிரோஷா அந்தனி, உதவி முகாமையாளர் ஆயிஷா ஜயவர்தன மற்றும் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் இரேஷா உதெனி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கஜரூபன் திவ்யா
நுவரெலியா

தவிசாளர் கிண்ண கரப்பந்தாட்ட போட்டி மூன்றாவதும் இருதிநாளாக இன்று கந்தப்பளை கொமர்ஷல் மைதானத்தில் நடைபெற்றது.நுவரெலியா பிரத...
31/08/2026

தவிசாளர் கிண்ண கரப்பந்தாட்ட போட்டி மூன்றாவதும் இருதிநாளாக இன்று கந்தப்பளை கொமர்ஷல் மைதானத்தில் நடைபெற்றது.

நுவரெலியா பிரதேச சபை ஏற்பாட்டில் தவிசாளர் யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போட்டியானது நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல அணிகள் பங்குபற்றியதுடன்.

போட்டியின் முதலாவது அரையிருதியில் கந்தப்பளை னைட்ரைடர் அணியும் தலவாக்கலை கூம்வூட் சேம் விளையாட்டு கழகம் மோதின ஆகியன இதில் இருதி சுற்றிற்கு கந்தப்பளை னைட்ரைடர் அணி தெறிவாகியது.

இரண்டாவது அரையிருதி போட்டியில் கொழும்பு SVP அணி(இலங்கை விமானப்படை அணியில் விளையாடும் வீரர்களை உள்வாங்கிய அணி) மற்றும் உடப்புஸ்சலாவ ஒல்டிமார் கிரீன்பீல்ட் அணி ஆகியன மோதின இதில் கொழும்பு SVP அணி வெற்றிபெற்று இருதிபோட்டிக்கு தெறிவாகியது.
இருதி போட்டியானது கந்தப்பளை னைட்ரைடர் அணி மற்றும் கொழும்பு SVP ஆகிய அணிகள் மோதின இதில் கொழும்பு SVP அணியினர் வெற்றிபெற்று தவிசாளர் கிண்ணத்தை சூவீகரித்துகொண்டனர்.

இரண்டாம் இடத்தினை கந்தப்பளை னைட்ரைடர் அணியும், மூன்றாம் தலவாக்கலை கூம்வூட் சேம் அணியினரும், நான்காம் இடத்தினை உடப்புஸ்சலாவ ஒல்டிமார் கிரீன்பீல்ட் அணியும் பெற்றுக்கொண்டது.

31/08/2026

Sponsor by 2006 O/L

நு/சென்கிளயர் தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்களை இணைக்கும் வகையில் நடாத்தப்பட்ட 2026 கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது.

Address

Nuwara Eliya
22200

Website

Alerts

Be the first to know and let us send you an email when மலையகச்சாரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category