21/07/2026
அல்ஹம்துலில்லாஹ் 😍🙌♥️
எமது கழகத்தின் மெய்வல்லுனர் வீரர்
Aashiq Al Ameen அவர்கள் மட்டக்களப்பு கல்விக்கல்லூரியில் இரண்டு ஆண்டு கால உள்ளக பயிற்சியினை முடித்துவிட்டு நேற்று முதல்
ற்கு உடற்கல்வி பயிற்சி ஆசிரியராக நியமிக்கபட்டுள்ளார். இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களில் அவரினுடைய திறமையூடாக அங்கும் பல மாணவர்களை விளையாட்டு துறையிலும் கல்வித்துறையிலும் சாதிக்க வைக்த வேண்டும் என்றும் மற்றும் அவரின் கல்வி மற்றும் தொழில் திறன் வளர்ச்சி அடைய வேண்டும் என்று எமது கழகம் சார்பாக வாழ்த்தி பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
03/07/2025
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி M.S. அப்துல் வாஷித் அவர்களை பொத்துவில் லிவர்பூல் விளையாட்டுக் கழகம் சார்பாக வாழ்த்தி வரவேற்கின்றோம்.
18/06/2025
பாராட்டுக்கள்
இன்று தலைநகரில் இடம் பெற்று முடிந்த தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கிடையிலான 17 வது மெய்வல்லுனர் போட்டி நிகழ்வில் எமது ஊர் மற்றும் கழகத்தின் மெய்வல்லுனர் ஜாம்பவானான Aashiq Al Ameen மட்டக்களப்பு கல்வியல் கல்லூரி சார்பாக கலந்து கொண்டு 4 x 100M அஞ்சலோட்ட போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
வாழ்த்துக்கள்.
18/06/2025
CONGRATULATIONS 👏 Aashiq Al Ameen INTER COLLEGE ATHLETIC CHAMPIONSHIP -XVII
100M-2ND PLACE SILVER MEDAL🥈🔥
17/06/2025
அல்ஹம்துலில்லாஹ்
19வது தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் எமது பொத்துவில் மண்ணின் மெய்வல்லுனர் ஓட்டப்புயல் Aashiq Al Ameen மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி இன்று நடைபெற்ற மெய்வல்லுனர் இறுதி போட்டியில் 200 M நிகழ்வில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளார். மேலும் நாளை நடைபெற இருக்கும் 100m இறுதி போட்டியிலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
இன்னும் சாதிக்க கழகம் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.
27/05/2025
FFSL Annual Refrees Exams 2024
இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட நடுவர் (Category-3) க்கான பரீட்சையில் சித்தியடைந்து உதைபந்தாட்ட நடுவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள எங்களது கழக உதைபந்தாட்ட வீரரான Aashiq Al Ameen இற்கு பொத்துவில் லிவர்பூல் விளையாட்டுக்கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
22/05/2025
தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி அணி முதலாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளது.
போட்டியில் பங்கேற்ற எமது பொத்துவில் மண்ணின் எதிர்கால முதலாவது
உடற் கல்வி ஆசிரியரும் மற்றும் பொத்துவிலின்
"குறுந்தூர ஓட்ட வீரருமான"
NA.ஆசிக் அஹமத் அவர்களுக்கும் ஏனைய வீரர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
16/10/2024
Wish you many more happy returns of the day our Coach MR. PHIL
20/07/2024
அல்ஹம்துலில்லாஹ் ❤️
பொத்துவில் வரலாற்றில் முதலாவதாக தேசிய கல்வியில் கல்லூரிக்கு உடற் கல்வி ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ள Aashiq Al Ameen இற்கு வாழ்த்துக்கள்.
எங்களது கழகத்தின் உப செயலாளர் மற்றும் குறுந்தூர ஓட்ட வீரரும் மெய்வல்லுனர் அணியின் தலைவரும் மற்றும் உதைபந்தாட்ட அணி வீரருமான NOORUL AMEEN AASHIQ AHMATH அவர்கள் இன்று பொத்துவில் வரலாற்றில் இருந்து முதல் முறையாக மட்டக்களப்பு தேசிய கல்வியில் கல்லூரிக்கு உடற் கல்வி ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை கழகம் மற்றும் ஊர் சார்பாக அக மகிழ்ந்து வாழ்த்துவதோடு அவரை பயிற்றுவித்து வழிநடாத்திக் கொண்டிருக்கும் ஆசான் அவர்களுக்கும் உயரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் அவர் இத்துறையில் சிறந்து விளங்கி தாய் மண்ணுக்கு மகாத்தான சேவையை வழங்க வேண்டும் என்றும் மேலும் இவரைப் போலவே இன்னும் பல உடற் கல்வி ஆசிரியர்களை பொத்துவில் உருவாக்க வேண்டும் என்றும் பிராத்திப்பதோடு கல்வி மற்றும் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.
15/07/2024
CONGRATULATIONS 🎉 👏
பொத்துவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக பொத்துவிலைச் சேர்ந்த MS. நபீஸ் முகம்மத் sir (SLEAS) அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
பாடசாலையை சிறப்பாக வழிநடாத்திச் செல்ல வாழ்த்துவதோடு தங்களது பதவிக்காலத்தில் பாடசாலை சிறந்த பல்வேறு அடைவு மட்டத்தை அடைய வேண்டும் என்றும் பிராத்திக்கிறோம்.