25/08/2026
Kalmunai Taekwondo Sports Accademy
இன் புதிய வரலாற்றுச் சாதனை!!!
🥋🏆🥋🏆🥋🏆🥋🏆🥋🏆🥋🏆🥋🏆🥋
மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் இம்மாதம் 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தைக்வாண்டோ சுற்றுப்போட்டி – 2026 (Eastern Province Inter-School Taekwondo Championship 2026) இல் Kalmunai Taekwondo Sports Academy சார்பில் பங்கேற்ற வீரர்கள் மிகச் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.
தொடர்ச்சியாக தங்களது திறமைகளையும் சாதனைகளையும் மேம்படுத்தி வரும் எமது வீரர்கள், இம்முறை போட்டியில் 52 புள்ளிகளைப் பெற்று ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் (Overall Boys' Champion) 🏆 பட்டத்தை வென்று கல்முனைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் எமது வீரர்கள் மொத்தமாக:
🥇 6 தங்கப் பதக்கங்கள்
🥈 8 வெள்ளிப் பதக்கங்கள்
🥉 6 வெண்கலப் பதக்கங்கள்
என மொத்தம் 20 பதக்கங்களை வென்றுள்ளனர்.
மேலும், 20 வீரர்களும் தேசிய மட்டப் போட்டிக்குத் 🇱🇰 தகுதி பெற்றுள்ளமை எமது அகாடமியின் பயிற்சி மற்றும் வீரர்களின் அர்ப்பணிப்புக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் அங்கீகாரமாகும்.
இந்த வெற்றிக்காக எமது வீரர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி, ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கி வரும் **பிரதம பயிற்றுவிப்பாளர் திரு. U.L.M. Ibrahim** அவர்களுக்கும், உதவி பயிற்றுவிப்பாளர்களான M.H.M. Asrik, J.A. Sumaid, A.A. Hameem மற்றும் A.A. Hamthan அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன், போட்டிகளில் பங்கேற்கும் எமது வீரர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து, அவர்களின் பயிற்சி மற்றும் போட்டித் தயாரிப்புகளுக்கு ஆதரவளித்து வரும் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக, இப்போட்டியில் பங்கேற்று தமது உச்சத் திறமைகளை வெளிப்படுத்தி 52 புள்ளிகளுடன் Overall Boys' Champion 🏆 பட்டத்தை வென்று கல்முனையின் பெருமையை உயர்த்திய Kalmunai Taekwondo Sports Academy இன் அனைத்து வீரர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
28/09/2025
மீண்டும் தேசிய தாய்கொண்டோ போட்டியில் 🥈வெள்ளி பதக்கம்.
🥋Kalmunai Taekwondo Sports Academy🥋
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான "தாய் கொண்டோ" சுற்றுப் போட்டி இம்மாதம் 2025.09.22- 2025.09.25ம் திகதி வரை மாத்தறை "கொட்டவில" உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்தது. இச்சுற்றுப்போட்டியில் எமது கழகத்தை சேர்ந்த RM. Althaaf (Under- 20) கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கம் 🥈வென்றார்.
இதன் மூலம் எமது கழகம் தொடர்ச்சியாக நான்கு வருடங்களளாக (2022- 2025) அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தாய்க் கொண்டோ போட்டியில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ் அடைவிற்க்கு உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழங்கிய கல்லூரி முதல்வர் MI.Jabir (SLEAS) அவர்களுக்கும், இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் ALM.Thanzil, பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள், SDEC உறுப்பினர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி நேறிப்படுத்திய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியரும், பிரதம பயிற்ருவிப்பாளருமான ULM.IBRAHIM Sir மற்றும் உதவி பயிற்றுவிப்பாளர்கள் JA.Sumaid, AA.Hameem, AA.Hamthan , AA.Sihab, MHA.Haseen மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் குறிப்பாக பதக்கம் வென்ற மாணவர் RM. Althaaf கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்க ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
-✒️Admin KTSA-
17/06/2025
🏆49ᵗʰ National Sports Festival - 2024 🇱🇰🥋
49ᵗʰ National Sports Festival conducted by the Ministry of Sports on 15ᵗʰ Of June 2025, Two students from our Club ( Kalmunai Taekwondo Sports Academy ) Participated in the Provincial Level Taekwondo Tournament and received Two Medals.
Among the participating students, H. Asrick Ahamed Won Silver Medal 🥈 in 68-74kg Weight category and, J. Ahamed Sumaid Won Bronze Medal 🥉 in +87kg Weight category Sparring and added the honor of winning the Ampara District, On behalf of our club.
We would like to express our gratitude to the Sensei ULM. Ibrahim (Teacher & Coach) who gave training to these Brides..!!😇💐
30/03/2025
"Eid Mubarak from all of us at KTSA Srilanka! 🌙✨ May this blessed occasion bring peace, joy, and prosperity to your lives. May Allah’s blessings continue to guide you on the path of success and happiness. Enjoy the festivities with your loved ones! 💫💖 "
02/10/2024
மீண்டும் தேசிய போட்டியில் தங்கப் பதக்கம் 🥇 Kalmunai Taekwondo Sports Academy. 2024.10.01
🥋🥇🥋🥇🥋🥇🥋🥇🥋🥇🥋
இம் மாதம் 28,29,30 ஆகிய தினங்களில் இரத்தினபுரி புதிய நகர உள்ளக விளையாட்டரங்கில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான தேசிய மட்ட தைக்வொண்டோ( Taekwondo) சுற்றுப் போட்டியில் எமது Kalmunai Taekwondo Sports Academy மாணவன் JA. Suraif, எமது தாய்ப்பாடசாலையான Km/ Zahira college kalmunai சார்பாக 20 வயதுக்குற்பட்ட ஆண்களுக்கான Sparring நிகழ்ச்சியில் தங்கம் 🥇 வென்று எமது பாடசாலைக்கும் எமது கழகத்திற்கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
JA. Suraif தங்கம் 🥇 வென்றதோடு; இவர் தொடர்ச்சியாக கடந்த 2022, 2023 ம் ஆண்டுகளில் இரு முறை தேசிய ரீதியில் வெள்ளிப் 🥈 பதக்கதினைப் பெற்று தற்போது 3 வது முறையாகவும் தேசியத்தில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ம் ஆண்டு எமது கல்லூரி 14 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கையில் Overall Boys champion ஆக தெரிவு செய்யப்பட்டதோடு 2023ல் 1 வெள்ளி உட்பட 2 வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வெற்றியைப் பெற மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய கல்லூரி முதல்வர் ஜனாப் MI.Jabir (SLEAS) மற்றும் அர்ப்பணிப்புடன் தமது திறமைகளை வெளிப்படுத்தி இவ்வெற்றிகளை பெற்ற மாணவர்களையும், மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் (Taekwondo and Karate) coach ULM.IBRAHIM sir அவர்களையும், உதவி பயிற்றுவிப்பாளர்களான ABA. SIHAB, MHA.HASEEN. ABA. Hamthan, JA. Sumaid, ALM. Afri, ABA.Hameem, மற்றும் ஏனைய பயிற்றுவிப்பாளர்கள், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், ஆகியோருக்கும் நன்றிகள்.
🖊️Admin (KALMUNAI TAEKWONDO SPORTS ACADEMY)
09/08/2024
Kalmunai Taekwondo Sports Accedamy (KTSA) அணியின் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட போட்டிகளில் தொடர்ச்சியான புதிய சாதனை....!!
🥋🏆🥋🏆🥋🏆🥋🏆🥋🏆🥋🏆🥋🏆🥋
மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் இம்மாதம் 07 மற்றும் 08ம் திகதிகளில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தைகொண்டோ சுற்றுப்போட்டியில் (Eastern Province Inter School Taekwondo Championship-2024) Kalmunai Taekwondo Sports Accedamy (KTSA) வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 2022ம் ஆண்டு எமது பாடசாலை வைத்த சாதனையை (41 புள்ளிகள்) கடந்த 2023ம் ஆண்டு முறியடித்து (42 புள்ளிகள்) மீண்டும் இவ்வருடம் 2024ம் ஆண்டு முறியடித்து ஆண்களுக்கான Overall Champion (48 புள்ளிகள்) 🏆 ஆக தெரிவு செய்யப்பட்டு எமது பாடசாலைக்கு மீண்டும் பெருமை சேர்த்துள்ளனர். அதில் 7 Gold 🥇, 6 Silver 🥈, 6 Bronze 🥉 அடங்களாக மொத்தம் 19 பதக்கங்களை பெற்றனர். அத்துடன் 13 வீரர்கள் தேசிய போட்டிக்குத் 🇱🇰 தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் அடைவிற்காக உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி போட்டி நடைபெற்ற அரங்கிற்கே வருகை தந்து ஊக்கப்படுத்திய கல்முனை சாஹிரா கல்லூரி முதல்வர் MI.Jabir (SLEAS) அவர்களுக்கும், இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் ALM.Thanzil, பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள், மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி நேறிப்படுத்திய பாடசாலையின் ஆசிரியர் மற்றும் பிரதம பயிற்ருவிப்பாளர் ULM.IBRAHIM Sir (Teacher) மற்றும் உதவி பயிற்றுவிப்பாளர்கள் JA.SUMAID, AA.HAMEEM, AA.HAMTHAN , AA.Sihab, MHA.Haseen மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்க ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
🖊️Admin (K.T.S.A)
17/06/2024
Warmest wishes to you and your family on this holy occasion of Eid ul Adha...!!🌙
🥋