ARV Loshan Sports Tamil

ARV Loshan Sports Tamil

Share

ARV Loshan Sports தமிழ்
சரியான, தெளிவான, விரைவான விளையாட்டுத் தகவல்கள் + காணொளிகள் தமிழில்

29/07/2026

லஹிரு உதாரவின் வரலாற்றுச் சாதனைச் சதத்தால் த்ரில் வெற்றி பெற்றது கண்டி ரோயல்ஸ்!

எல்.பி.எல் (LPL 2026) தொடரில் எப்போதும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார் கண்டி ரோயல்ஸ் அணியின் அதிரடி மன்னன் லஹிரு உதார!

209 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய கண்டி ரோயல்ஸ் அணிக்கு, ஆரம்பத்திலிருந்தே இடி மின்னலாகப் பாய்ந்து மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டார் உதார.

களத்தில் இருந்த அழுத்தத்தை தனக்கு சாதகமாக மாற்றிய அவர், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வெறும் 63 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட உதார, 15 பவுண்டரிகள் மற்றும் 7 மெகா சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 132* ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார். 209.52 என்ற அசுர வேக ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் ஆடிய இந்த இன்னிங்ஸ், எல்.பி.எல் வரலாற்றின் மிகச் சிறந்த சதங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.

அவரது இந்த பிரம்மாண்ட சதத்தின் பலத்தால், கண்டி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒரு மெய்சிலிர்க்கும் வெற்றியைத் தன் வசப்படுத்தியது. டைமிங், பவர் மற்றும் அபார தன்னம்பிக்கை கலந்த இந்த ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாது.

என்னவொரு இன்னிங்ஸ்...
என்னவொரு ஆட்டம்!
லஹிரு உதாரவின் இன்றைய ஆட்டம் எல்.பி.எல் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்!

Photos from ARV Loshan Sports Tamil's post 29/07/2026

⭐ 2030 ஃபீஃபா உலகக் கிண்ணம் -->
ஸ்டீபன் "கிகி" ராமோஸ் அர்ஜென்டீனாவின் அடுத்த இள நட்சத்திரம் ? 💎

ஹைட்டியின் அனாதை இல்லத்தில் இருந்து அர்ஜென்டீனாவின் U-17 தேசிய அணி வரை — ஸ்டீபன் "கிகி" ராமோஸின் பிரமிக்க வைக்கும் எழுச்சி இது.

வெறும் 17 வயதேயான ராமோஸ், அர்ஜென்டீனாவின் மிகச் சிறந்த இளம் திறமையாளர்களில் ஒருவராக உலா வருகிறார்.

ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸில் பிறந்த இவர், தனது வாழ்வின் முதல் சில மாதங்களை அனாதை இல்லத்தில் கழித்தார். பின்னர், தனது ஒன்பதாவது மாதத்தில் அர்ஜென்டீன குடும்பம் ஒன்றினால் தத்தெடுக்கப்பட்டார். அர்ஜென்டீனாவிலேயே வளர்ந்த அவர், சிறுவயதிலிருந்தே அந்நாட்டின் மொழி, கலாசாரம் மற்றும் கால்பந்து அடையாளத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

தற்போது வெலெஸ் சார்ஸ்ஃபீல்ட் (Vélez Sarsfield) அகாடமியில் சிறந்த இடதுபுற விங்கராக அசத்தி வரும் இவரது சிறப்பான ஆட்டம், தலைமைப் பயிற்றுநர் டியேகோ பிளசென்டே தலைமையிலான அர்ஜென்டீனாவின் U-17 தேசிய அணியில் முதன்முறையாக இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.

🗣️ கிகி ராமோஸ்: "நான் ஸ்பானிஷ் மொழியையும் அர்ஜென்டீனாவின் கலாசாரத்தையும் இங்கேயே கற்றுக்கொண்டேன். இந்த நாட்டில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வெலெஸின் முதல் அணியில் அறிமுகமாவதுடன், என்றாவது ஒரு நாள் அர்ஜென்டீனாவுக்காக ஃபீஃபா உலகக் கிண்ணத்தில் விளையாடுவதே எனது மிகப்பெரிய கனவு."

2030க்கான பாதை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், 'லா அல்பிசெலெஸ்டே' (La Albiceleste) அணியின் புதிய முகங்களில் ஒருவராக மாறும் திறமை கிகி ராமோஸுக்கு இருப்பதாகப் பலரும் நம்புகின்றனர். அவரது வேகம், ஸ்டைல், ட்ரிப்ளிங் மற்றும் பயமற்ற அதிரடி ஆட்டம் ஆகியவை அவரை அர்ஜென்டீனாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இளம் வீரர்களில் ஒருவராக மாற்றியுள்ளன.

ஹைட்டியின் அனாதை இல்லத்தில் தொடங்கி, 2030 ஃபீஃபா உலகக் கிண்ணத்தில் அர்ஜென்டீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனவை நோக்கி ஓடும் வரை—இது தொடக்கம் மட்டுமே! 🇦🇷💎

நேற்று அர்ஜென்டீனாவின் 17 வயதுக்குட்பட்ட அணிக்காக அறிமுகமாகியதன் மூலமாக கிக்கி ராமோஸின் கனவுப் பயணம் தொடங்கிவிட்டது.

29/07/2026

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாம் நாள் முடிவில் பதக்கப்பட்டியல்

29/07/2026

Sri Lanka Cricket - அதிரடி மாற்றங்கள் !அரசியல் இனி இருக்காது ?

28/07/2026

FIFA World Cup 2026இன் பின்... ஓய்வு , விலகல், மாற்றங்கள்... Football Round up | Transfer News

27/07/2026

2026 உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடுவர் ஓய்வு !

2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை வழிநடத்திய பிரபல கால்பந்து நடுவர் சிலாவ்கோ வின்சிச் (Slavko Vinčić), சர்வதேச நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது வாழ்நாளின் மிக முக்கிய போட்டியான உலகக் கிண்ண இறுதிப் போட்டியைச் சிறப்பாகக் கையாண்ட கையோடு, நடுவர் பணியிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார். ஸ்லோவேனியா கால்பந்து சம்மேளனம் (Slovenian Football Association), 46 வயதான வின்சிச்சின் இந்த அதிகாரப்பூர்வ ஓய்வு முடிவை உறுதி செய்துள்ளது.

27/07/2026

LPL 2026 - கவனிக்கவேண்டிய சிலர் ! | LPL Updates 2026

Photos from ARV Loshan Sports Tamil's post 27/07/2026

ICC T20I தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்தியா!

சிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஆண்களுக்கான T20 தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஹராரேயில் நடைபெற்ற இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 2-0 எனத் தொடரைக் கைப்பற்றிய நிலையில், நடப்பு T20 உலகச் சாம்பியனான இந்தியா இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
மூன்றாவது போட்டியிலும் நேற்று இந்தியா வெற்றி பெற்றது.

முன்னதாக, அயர்லாந்துக்கு எதிராக 0-2 எனத் தொடரை இழந்ததுடன், இங்கிலாந்து அணிக்கு எதிராக 0-4 எனத் தொடர் தோல்வியைச் சந்தித்ததால் இந்திய அணி தனது முதலிடத்தை இங்கிலாந்திடம் பறிகொடுத்திருந்தது.

இருப்பினும், சிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளாலும், இரண்டாவது போட்டியில் 90 ஓட்டங்களாலும் அபார வெற்றி பெற்று மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.
புதிய தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் இந்தியா அடைந்த முதலாவது தொடர் வெற்றி இதுவாகும்.

துடுப்பாட்டவீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசை நிலை:

சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அரைசதம் விளாசிய இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷன் 892 புள்ளிகளுடன் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றார்.

அவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 858 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், பாகிஸ்தானின் ஷஹிப்சதா பர்ஹான் மூன்றாமிடத்திலும் அவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் சோல்ட், இலங்கையின் பத்தும் நிசங்க ஆகியோர் தொடர்கின்றனர்.

பந்துவீச்சு தரவரிசை:
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையின் 'முதல் 10' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரரான சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, தற்போதைய சிம்பாப்வே தொடரில் பங்கேற்காத போதிலும் 683 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் நீடிக்கின்றார்.

முதலாவது இடத்தில் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் நிலைத்திருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து பாகிஸ்தானின் அப்ரார் அஹமட், இங்கிலாந்தின் அடில் ரஷீத் ஆகியோர் இருக்கின்றனர்.
இலங்கையின் வனிது ஹசரங்க தற்போது எட்டாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

T20 சகலதுறை வீரர்களின் பட்டியில் முதலிடத்தில் சிம்பாப்வே அணித் தலைவர் சிக்கந்தர் ராசா நீடிக்கிறார்.

முழுமையான விவரங்கள் படங்களில்...

27/07/2026

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு நேரடியாகக் காலிறுதி வாய்ப்பு!


முழுமையான விவரங்கள் : https://www.crickettamil.com/2026/07/2026.html

Want your business to be the top-listed Gym/sports Facility in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Colombo